Archive for the ‘செபாஸ்டியன் சீமான்’ Category

இந்தியர்களே வீடுகள் இல்லாமல் அவதி படும்போது, இலங்கையில் வீடுகள் கட்ட இந்தியா உதவவேண்டுமா?

மே 24, 2013

இந்தியர்களே வீடுகள் இல்லாமல் அவதி படும்போது, இலங்கையில் வீடுகள் கட்ட இந்தியா உதவவேண்டுமா?

இந்திய அரசு சார்பில் வீடுகட்டித் தரும் திட்டம் மூன்று கட்டங்களாக நடந்துள்ளன: இந்திய அரசு சார்பில் வீடு கட்டித்தரும் திட்டம் முதல் கட்டமாக நவம்பர் 2010ல் துவங்கி வைக்கப்பட்டு, ஆயிரம் வீடுகள் ஜூலை 2012ல் கட்டி முடிக்கப்பட்டன[1].  இரண்டாவது கட்டத்தில் பயனாளிகளே வீடு கட்டும் பணியில் பங்கும் கொள்ளும் முறையில் திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது[2]. 2012 முடிவில் தொடங்கிய மூன்றவது கட்டத்தில் ஏஜென்சிகளின் உதவியுடன் கட்டப்பட 2,000 வீடுகள் மிகவும் நலிவடைந்த-பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்டது (வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்) மற்றும் 4,000 வீடுகள் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த இந்திய வம்சாவளியினருக்கு (உவா மாகாணம்) என்று ஏற்படு செய்யப்பட்டது[3]. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  50,000 குடியிருப்புகளைக் கட்டுவதற்கு நிதியுதவி வழங்கும் இந்திய அரசின் திட்டத்தை அந்நாட்டு அரசு வெகுவாக பாராட்டி உள்ளது.

இலங்கைக்கு இந்தியாவின் உதவி: இந்தியாவுக்கு வெளியே மத்திய அரசு செயல்படுத்தி வரும் மிகப்பெரிய நிதியுதவித் திட்டங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகள் உடனான உள்நாட்டுப் போர் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன்பிறகு, போரினால் புலம் பெயர்ந்த தமிழர்களை அவரவர் பகுதிகளில் மறு குடியமர்த்துவதற்காக, மனிதாபிமான அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் 50,000 குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க இந்திய அரசு முன்வந்தது. இதற்கான திட்ட மதிப்பான ரூ.1,372 கோடி முழுவதையும் வழங்க இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதன்படி, வடக்கு மாகாணத்தில் பல்வேறு திட்டங்களை இலங்கைக்கான இந்திய தூதரகம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, அம்பாரா ஆகிய 2 மாவட்டங்களில் 4,000 குடியிருப்புகளை கட்டுவதற்கான திட்டத்தை மட்டக்களப்பில் 15-05-2-13 புதன்கிழமை தொடங்கி வைத்த பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் பசில் ராஜபட்ச, இந்தியாவின் இத்தகைய முயற்சியை பாராட்டி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய தூதர் அசோக் கே. காந்தா, போரின்போது வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியிலிருந்து புலம் பெயர்ந்தவர்களை விரைவாக மறுகுடியமர்த்த வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தினார்[4].

இடம்பெயர்ந்தவர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்கும் விழா,  பாராட்டு: வடக்கு மாகாணத்தில் இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் திருப்தி அளிப்பதாகவும் அவர் தேரிவித்தார். கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச, வடக்குப் பகுதியில் 50,000 குடியிருப்புகளைக் கட்டித் தருமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை வைத்தார்[5]. பின்னர் இந்தத் திட்டம் கிழக்குப் பகுதிக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டதாக பசில் நினைவு கூர்ந்தார்[6]. அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், இலங்கை அமைச்சருமான பசில் ராஜபக்சே கலந்து கொண்டு பேசியதாவது: “இலங்கைக்கு இந்தியா மிகவும் நட்பு நாடாக உள்ளது. எங்களது வளர்ச்சியில் இந்தியா எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இலங்கைக்கு ஒன்று என்றால் உதவி செய்வதில் முதன்மை நாடாக இந்தியா உள்ளது. போருக்கு பிறகு நாங்கள் செய்த மறுவாழ்வு திட்டங்களை இந்தியா பாராட்டி உள்ளது. இலங்கையில் இந்தியா தூதராக இருந்த அசோக் கந்தா இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிறப்பாக செய்துள்ளார்”, என இவ்வாறு பசில் பேசினார்[7]. ஆனால் ஊடகங்களின் குறிப்பாக “இலங்கை தமிழர் ஆதரவு” சார்பு இணைதளங்களில் முரண்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழர்கள் அதிகமாகவுள்ள கச்சத்கொடி மற்றும் படிப்பாழை கிராமங்களில் இரண்டு புத்த விஹாரங்கள் கட்டப்பட்டு, பௌத்தர்களை குடியேற்ற முயற்சிகள் நடப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்[8].

சைனா போட்டிப் போட்டுக் கொண்டு உதவுவது: சைனாவின் உதவி $1.05 billion  என்றுள்ளது. ஐந்தாண்டுகளில் (1971- 2012) இந்தியாவின் உதவித்தொகை $1.45 billion ஆகும், அதில் $1.12 billion கடனாகவும், $326 million உதவித்தொகையாகவும் கொடுக்கப்பட்டுள்ளன. அதே காலத்தில் சைனாவின் உதவித்தொகை $5.05 billion ஆக உள்ளது, அதில் $4.76 billion கடந்த எட்டாண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது[9]. சைனா தனது ஆதிக்க மற்றும் தென்னாசியாவில் விரிவாக்க எண்ணத்தில் இவ்வாறு உதவி செய்யும் போது, இந்திய தனது ஏழ்மை நிலைமையும் – “தனக்கு மிஞ்சினால் தான் தானம்” என்பதை மறந்து செய்து வருகிறது.

சிங்கள இந்துக்கள் தனிமைப் படுத்துவது, சிறுபான்மையினராக்குவது, பாதிக்கப்படுவது: சிங்களவர் என்று ஒருமையாகப் பாராமல், பௌத்தர்கள், தமிழர்கள் என்று பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஶ்ரீலங்கையில் உள்ளவர்கள் சிங்களவர்கள், அவர்கள் எந்த மதத்தையும் பின்பற்றலாம், மொழியையும் பேசலாம். மதத்தின் மீது ஆதாரமாகப் பிரிப்பதானால், வாதிப்பதானால், சிங்கள பௌத்தர்கள், சிங்கள இந்துக்கள், சிங்கள முஸ்லிம்கள், சிங்கள கிறிஸ்தர்கள், என்றுதான் பேசவேண்டும். மொழியின் மீது ஆதாரமாகப் பிரிப்பதானால், வாதிப்பதானால், சிங்கள தமிழர்கள்/ தமிழ் பேசும் சிங்களவர், பாலி பேசும் சிங்களவர், உருது பேசும் சிங்களவர், என்றுதான் பிசித்துப் பேசவேண்டும். ஆனால், இதில், சிங்களத் தமிழர், தமிழர் என்றுதான் மற்றவர்களை விட்டு வேறுவிதமாக ஊடகங்களில் குறிக்கப்படுகிறார்கள். இதனால் தமிழ்பேசும் மக்களின் ஒற்றுமையைக் குலைக்கிறார்கள்.

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலரரை மறந்த ஶ்ரீலங்கைத் தமிழர்கள், இந்துக்கள்:  இந்தியா வம்சாவளி சிங்கள மக்கள், மதம்-மொழி இரண்டினாலும் தங்களது அடையாளத்தை நீர்த்து சிறுபான்மையினராக்கி, அதிலும் குறைக்கப்படுகின்றனர். இதுதான் உண்மை. அவ்வாறு பாதிக்கப்பட்டது, படுவது – சிங்கள இந்துக்களே. அவர்கள் தங்களை இந்துக்கள் என்று ஸ்திரமாக பாவிக்காமல் இருப்பதினால் தான், மற்ற மதத்தினர் அவர்களை தங்களது சுயநலங்களுக்காக உபயோகப் படுத்திக் கொள்கிறார்கள்.

  • பௌத்தர்கள், இந்துமதத்திற்குட்பட்ட கடனையும் மறந்து, இலங்கை இந்துக்களை கொடுமைப் படுத்தி வருகிறார்கள்.
  • கிறிஸ்தவர்கள் மதம் மாறியதால் உண்மையறியாமலோ, அறிந்தோ இலங்கை இந்துக்களை சதாய்க்கிறர்கள், கொடுமைப் படுத்தி வருகிறார்கள்.
  • முஸ்லிம்களும் மதம் மாறியதால் உண்மையறியாமலோ, அறிந்தோ இலங்கை இந்துக்களை சதாய்க்கிறர்கள், கொடுமைப் படுத்தி வருகிறார்கள். தனியாக அடையாளங் காட்டிக் கொள்கிறார்கள்.

இதை இந்துக்கள் அல்லாத எல்லோரும் செய்து வருகிறார்கள். குறிப்பாக இந்தியர்கள், தமிழ்நாட்டில் வாழும் இந்தியர்கள், தமிழகத்தில் இருப்பவர்கள் மற்றும் தமிழர் என்று தமிழகத்தில், இந்தியாவில் இல்லாதவர்கள் அதிகமாகவே செய்து வருகிறார்கள். முடிவாக, மறுபடி-மறுபடி பாதிக்கப்படுவது, சிங்கள இந்துக்களே. இவர்களது அறியாமையை, மயக்கத்தை, போதையை, ஆயிரம் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர்கள் வந்தாலும் போக்கமுடியாது எனலாம்.

© வேதபிரகாஷ்

24-05-2013


[1] The first phase of 1,000 houses inaugurated in November 2010 was completed in July this year, 2012.

http://www.thehindu.com/news/international/second-phase-of-indias-largest-aid-project-launched/article3958901.ece

[2] The second phase of the project adopts an owner-driven methodology, under which owner-beneficiaries are involved in the process of construction.

http://www.thehindu.com/news/international/second-phase-of-indias-largest-aid-project-launched/article3958901.ece

The third phase of the housing project is expected to commence before the end of this year, 2012. In this phase, about 2,000 houses will be directly built by construction agencies for people from the most vulnerable sections of IDPs in the Northern and Eastern provinces unable to build their own houses and 4,000 houses for Indian-origin workers in tea estates in the Central and Uva provinces.

[3] http://www.thehindu.com/news/international/second-phase-of-indias-largest-aid-project-launched/article3958901.ece

[8] A part of the 50,000 housing aid promised by New Delhi for the war-affected people in the North and East is planned to be used for demographic genocide in the East at the village of Kachchat-kodi in the Paddip-pazhai division of Batticaloa district, according to Eastern Provincial council member R. Thurairatnam. The village, which was predominantly Tamil a few years ago and was affected by displacement during the war, now has 2 new Sinhala Buddhist Viharas constructed and a number of Sinhala families brought from outside settled with the assistance of Buddhist priests. http://www.naamthamilar.ca/?p=147199.html

[9] The Chinese commitment stood at $1.05 billion. “The total assistance extended by India during the last 5 year period was $1.45 billion of which $1.12 billion was loan assistance and $326 million was grant assistance,” the report said.The total assistance extended by China during the period between 1971 and 2012 was $5.05 billion of which $4.76 billion, representing around 94 per cent, was extended during the last 8-year period from 2005 to 2012, the report said.

http://www.thehindubusinessline.com/news/international/indian-development-aid-second-largest-in-sri-lanka/article4733187.ece

தமிழகம் மூலம் போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம் குறைந்துள்ளதா?

ஓகஸ்ட் 29, 2010

தமிழகம் மூலம் போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம் குறைந்துள்ளதா?

தீவிரவாதம் போதைமருந்து, ஆயுத சப்ளை: ஜேன்ஸ் பாதுகாப்பு வாரப்பத்திரிக்கை என்பதன்படி எல்.டி.டி.ஈ.யின் போதை மருந்து கடத்தல் வியாபாரம், அமெரிக்கா மற்று கனடா நாடுகளில் அதிக அளவில் இருப்பதாகக் கூறுகிறது[1]. இது எல்.டி.டி.ஈ.யிற்கு, ஆண்டிற்கு  USD 200-300 million வருவாயைக் கொடுக்கிறது. இது வெடிகுண்டுகள், ஆயுதங்கள் முதலியவற்றை வாங்க உபயோகப்பட்டது[2]. இதைத்தவிர, அமெரிக்காவின் போதை மருந்து கட்டுப்பாட்டகம், 1980களினின்றே இது தனது உள்நாட்டு கலகம் / போர் முதலிய காரியங்களுக்குத் தேவையான பணத்தை போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம் மூலம் பெற்றுவருகிறது என்று கூறியுள்ளது[3]. உலகத்திலேயே ஆப்கானிஸ்தானில்தான் 70% மேலான போதை மருந்துக்கு வேண்டிய பொருட்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. அவை இந்தியாவின் மூலம், அதன் மூலமாக மற்ற நாடுகளுக்குச் செல்கின்றது. சென்ற வருடத்தில் அதன் வீழ்ச்சிற்குப் பிறகு, இது குறையிம் என்று எதிர்பார்க்கப்பட்டது[4]. இலங்கையில் விடுதலைப் புலிகளின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, சென்னை வழியாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு நடத்தப்பட்டு வந்த போதை பொருள் கடத்தல் குறைந்து வருகிறது, என்று கருதினாலும், அது கேடமைன் மற்றும் இதர வடிவங்களில் செல்ல ஆரம்பித்துள்ளன[5].

எல்டி.டி.ஈ – ஆப்கானிஸ்தான் தொடர்பு: சர்வதேச அளவில், ஆப்கானிஸ்தானில் தான் அதிகமான அளவில் போதை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை, பல்வேறு வழிகளில் கடத்தப்பட்டு, உலக நாடுகளில் செயல்படும் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கி, பணமாகின்றன. இந்த பணத்தை கொண்டு, பயங்கரவாத கும்பல்கள் அவ்வப்போது வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்து சென்னை வழியாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டு வந்தன.  இதில் தமிழகத்தில் இருந்த ச்லருக்கும் தொடர்பும் இருந்தது.

குறைந்தது சென்னை வழியாக போதை பொருள் கடத்தல்[6]: இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததையடுத்து, சென்னை வழியான போதை மருந்து கடத்தல் குறைந்துள்ளது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இலங்கையில் 2008ம் ஆண்டு மத்தியில் உச்சக்கட்ட உள்நாட்டு போர் நடந்தது. வாழ்வா, சாவா என்ற முடிவோடு புலிகள் இலங்கை ராணுவத்தை எதிர்கொண்டனர். இந்த கால கட்டத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து சென்னை விமான நிலையம் வழியாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அதிகமான அளவில் போதை பொருட்கள் கடத்தப்பட்டன. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்,  மலேசியாவிற்கு செல்ல இருந்த சிவகங்கையைச் சேர்ந்த மாசிலாமணி (42) என்ற பயணியிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் கேடமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரும்பாலும் ஸ்ரீலங்கையைச் சேர்ந்த ஆசாமிகள் சிக்குகின்றனர்: சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பரியல் ரியானோ (29) என்ற பெண்ணிடம் இருந்து மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று  கிலோ ஹெராயின் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2008, ஆகஸ்ட் மாதத்தில் யாழ்பாணத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (35) என்பவரிடம் இருந்து  ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு 2008ம் ஆண்டு முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கை உள்நாட்டு போர் 2009ம் ஆண்டு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. இப்போரில், விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டார். இதையடுத்து, புலிகளின் சாம்ராஜ்யம் அங்கு முடிந்தது. சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து சென்னை வழியாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு நடந்து வந்த போதை பொருள் கடத்தல் குறைந்துள்ளது.

தமிழகத்தில் குறைந்தால், கேரளாவில் அதிகமாகிறது: அத்தகைய போக்கை 2005லேயே, அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள்[7]. இதனால், எல்.டி.டி.ஈ.யினர் தமக்கு தமிழகத்தில் உள்ள வெளிப்படையான மற்றும் மறைமுகமான ஆதரவு கூட்டங்களை பாதிக்க எல்.டி.டி.ஈ.யினர் விரும்பவில்லை. குறிப்பாக, தமிழகக் கூட்டணி ஆட்சியில், திமுக எல்.டி.டி.ஈ.யினரை ஆதரிக்கவேண்டியிருந்தது, ஆனால், காங்கிரஸ் எதிர்க்கவேண்டியிருந்தது. அதுமட்டுமலாது, கேரள தொடர்பு, முஸ்லீம்களை கூட்டில் சேர்த்துக் கொள்ள ஏதுவாயிற்று. ஆனால், ஸ்ரீலங்கா அரசு பாகிஸ்தானிடம் ஆயுதங்களை வாங்க ஆரம்பித்து விட்டது.

இந்திய போதைக் கட்டுப்பாட்டுத் துறை சிறப்பாகச் செயல்படுவது: தேசிய போதைமருந்து தடுப்பகம் மற்றும் சென்னை விமான நிகையத்தைச் சேர்ந்த சுங்க அதிகாரிகல் பலதடவை போதை மருந்து கடத்தல்காரர்ககளை கையும் களவுமாகப் புடித்துள்ளனர். இது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவரை கேட்டபோது, “சென்னை வழியாக போதை பொருட்கள் கடத்துவது குறைந்துள்ளதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. கஸ்டம்ஸ் அதிகாரிகளின் கெடுபிடிகளால் கடத்தல் கும்பல், தங்களின் கடத்தலை சென்னையை தவிர்த்து, வேறு விமான நிலையங்களின் வழியாக நடத்திக் கொண்டிருக்கலாம். ஒரு சில ஆசிய நாடுகளில்  பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் குறைந்துள்ளதாலும் கடத்தல் குறைந்திருக்க வாய்ப்புண்டு’ என்றார். அவர்கள் முறைந்துள்ளது என்றுதான் சொல்கிறார்களே தவிர, இல்லை என்று சொல்லவில்லை. சமீபத்தில் தமிழகத்தில் நடக்கும் சில நிகழ்ச்சிகள், அவர்களது இருக்கும் தன்மையினைப் புலப்படுத்துகிறது[8].

தமிழகத்தில் எல்.டி.டி.ஈ.யின் வாரிசு / அதிகாரச் சண்டை நடக்கிறதா? எல்.டி.டி.ஈ.யின் வாரிசு சண்டை தமிழக அரசியல் கட்சிகள், பெரிய புள்ளிகள் மற்றும் சித்தாந்தவாதிகளிடம் அதிகமாகவே வெளிப்படுகிறது. முன்பு, ஒரு நபரால் கட்டுக்கோப்பாக வைத்திருந்தது, சிதறிவிட்டது போல இருக்கிறது. எல்.டி.டி.ஈ.யின் பங்கு போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் வாங்கல்-விற்றல், தமிழ்த் திரைப்பட விநியோகம், திருட்டு சிடி-விசிடி, குறிப்பிட்ட மின்னணு உதிரிகள் என பல விஷயங்களில் இருந்தது, இன்றும் இருக்கிறது. ஆனால், அதிகாரப் பிரயோகம், அதிகாரப் பகிர்வு முதலியன யாரிடம் இருப்பது என்பது பற்றிதான் சண்டை-சச்சரவு நடந்து கொண்டிருக்கிறது. இதில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள், ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டிலும் இல்லது கனடா-பாரிஸ்-அமெரிக்காவில் இருப்பவர்கள் என்று மூன்று குழுக்களாக செயல்படுகின்றனர்[9]. திரைத்துறை, அரசியல் முதலிய பகிர்வு போராட்டங்கள் வைகோ, நெடுமாறன், செபாஸ்டியன் சீமான்[10], ஜெகத் காஸ்பர்…………என்று பலநேரங்களில் வெளிப்படும். கடந்த குறுகிய காலத்தில், நிறைய அளவு பணம் திரைப்படம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள் முதலியவற்றில் முததலீடு செய்யப்படுகிறது. அந்நிலையில், குறிப்பிட்ட தனிநபர்கள், குழுமங்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் குவியும் போது, நிச்சயமாக சண்டை வரத்தான் செய்கிறது. அதுமட்டுமல்லாது மத்தியில் மற்றும் மாநிலத்தில் தனித்தனி கூட்டணிக் கட்சியினருக்கு, பெரும்பாலான பணம் செல்லும்போதும் மற்றவர்களுக்கு கடுப்பாகிறது.


[1] Citing Royal Canadian Mounted Police sources the Jane’s Intelligence Review said the Liberation Tigers of Tamil Eelam (LTTE) controls portion of US Dollar one billion drug market in the Canadian city of Montreal.

[2] The Jane’s Intelligence Review said that one of the main ways of earning money out of its USD 200-300 million annual income of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) is narcotics smuggling using its merchant ships, which also transports illicit arms and explosives which they procure all over the world for a separatist insurgency in the Indian Ocean island of Sri Lanka.

[3] Steven W. Casteel, Narco-Terrorism: International Drug Traffickingand Terrorism – a Dangerous Mix, Statement of Steven W. Casteel Assistant Administrator for Intelligence Before theSenate Committee on the Judiciary May 20, 2003; http://www.justice.gov/dea/pubs/cngrtest/ct052003.html

[4] Kartikeya, LTTE fall will alter drug trade in India, TOI, May 30, 2009, Read more: ‘LTTE fall will alter drug trade in India’ – Mumbai – City – The Times of India http://timesofindia.indiatimes.com/city/mumbai/LTTE-fall-will-alter-drug-trade-in-India/articleshow/4595554.cms#ixzz0xzdLhzpw

http://timesofindia.indiatimes.com/city/mumbai/LTTE-fall-will-alter-drug-trade-in-India/articleshow/4595554.cms

[5] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=59432;

ஆகஸ்ட் 29,2010 சென்னை புளியந்தோப்பு பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 20 கிலோ மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட போதைப் பொருள் ஹெராயின் வகையைச் சேர்ந்ததா என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. போதைப் பொருள் குறித்து போதைப் பொருள் கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=72853

[6] தினமலர், குறைந்தது சென்னை வழியாக போதை பொருள் கடத்தல், ஆகஸ்ட் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=72601

[7] Heroin smugglers avoid Tamil Nadu, prefer Kerala as landing point (April 3, 2005)

By K.T. Sangameswaran ; CHENNAI, APRIL 2. Smugglers of heroin, meant for Sri Lanka, are now choosing Kerala as the landing point, going by the haul made by the Narcotics Control Bureau (NCB) in the last one year. The smugglers seem to avoid Tamil Nadu and even if their crossing the State is inevitable, they ensure that their exposure is minimal, say narcotics control authorities.

“Avoid Tamil Nadu to the extent possible for landings and transit of the drugs. Don’t be in the State for long.” This seems to be the instruction of the druglords to their operators, Shankar Jiwal, NCB’s south zonal Director, told The Hindu .

http://www.hindu.com/2005/04/03/stories/2005040306420400.htm

[8] Editor, Asian Tribune, LTTE down, but not out; Tamil Diaspora keeps them alive , Mon, 2010-06-21

http://www.asiantribune.com/news/2010/06/21/ltte-down-not-out-tamil-diaspora-keeps-them-alive

[9] http://www.eurasiareview.com/201006143193/sri-lanka-ltte-diaspora-wars-south-asia-intelligence-review.html

[10] செபாஸ்டியன் சீமான், ஜகத் காஸ்பரை இந்தியாவின் ஒற்றன் என்றெல்லாம் சொல்வதும், ஏதோ பெரிய விடுதலைப் போராளி போல நடந்து கொள்வதும், அதேபோல ஜகத் காஸ்பர் வெளிப்படையாக எல்.டி.டி.ஈ.யினரை ஆதரித்து பேசுவது-எழுதுவது சென்று செய்தாலும், கண்டு கொள்ளாமல் இருப்பது, முதலியவை தமிழகத்தில் வேடிக்கையான விஷயங்களே.

இந்திய-ஸ்ரீஇலங்கை பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கை, விளைவுகள் – 2010

ஜூன் 13, 2010

இந்திய-ஸ்ரீஇலங்கை பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கை, விளைவுகள் – 2010

1991லிருந்து தொடர்ந்து வரும் இந்திய-ஸ்ரீஇலங்கை நாடுகளின் இருதரப்பு பேச்சுவார்த்தைகள்: இருநாடுகளும் 1991லிருந்து அமோகமாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனவாம்[1], அவை நன்றாகவும், உருப்படியாகவும் இருந்தனவாம். இந்தியா இத்தகைய நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, இந்த இருதரப்பு நல்லுறவை மேன்மைபடுத்தி, பலபடுத்த வேண்டுமாம். உயர்ந்துவரும் இந்தியா, இலங்கையின்மீது எந்தவிதமான சரத்துகளையும் திணிக்காமல் / முட்டுக்கட்டைகள் போடாமல், இலங்கைத் தமிழர்களுடைய துன்பங்கள் குறிப்பிட்ட வரைமுறைகளில் செயல்பட்டு மேன்பட, இலங்கை தலைமையினை உற்சாகப்படுத்தவேண்டுமாம். ஆமாம், இதெல்லாம் 12-06-2010 அன்றைய “தி ஹிந்து” நாளிதழின் தலையங்கத்தின் சாராம்சமாகும்[2]. பிறகு ஏன் இவ்வாறெல்லாம் நடந்திருக்க வேண்டும் என்பது புரியவில்லை. தி ஹிந்து நளிதழும், ஏதோ பொடி வைத்து எழுதியுள்ளதா, நடந்ததை நியாயப்படுத்தியுள்ளதா, இல்லை நடந்தது நடந்து விட்டது, இனிமேலாகிலும் நல்லதை எதிர்பார்த்து பயனிப்போம் என்ற முறையில் சொல்லப்பட்டதா ஏன்று நோக்கவேண்டியுள்ளது. ஏனெனில், அத்தகைய அமோகமான பேச்சு வார்த்தைகள் நடந்திருந்தால், இம்மாதிரியாக மக்கள் உயிரிழந்திருக்க வேண்டாம், வீடுகளை-உடமைகளை அழிவிற்குட்படுத்தியிருக்கவேண்டாம்……………….

DMK-Rajapakshe-Kanimozhi

DMK-Rajapakshe-Kanimozhi

திராவிட கட்சிகளின் போலித்தனம், இரட்டைவேடம், துரோகத்தனம்: ஸ்ரீலங்காப் பிரச்சினையில் திராவிட கட்சிகளின் போலித்தனம், இரட்டைவேடம்[3], துரோகத்தனம், முதலியன நாளுக்கு நாள் அளவுகடந்து, பொறுமையின் எல்லைகளைத்தாண்டி கேவலமாக, விரசமாகிக்கொண்டு வருகின்றன[4]. ஆனால், அதில் சம்பந்தப்பட்ட திராவிட எம்.பிக்கள், அமைச்சர்கள், முதல் மந்திரி, பிரதம மந்திரி, பின்னின்று ஆட்டிவைக்கும் சூத்திரதாரி, இத்தாலி சோனியா முதலியோருக்கு எந்தவிதமான வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. டில்லியில் மஹிந்தரபக்ஷேவுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவது (09-06-2010), சென்னையில் கொடும்பாவி எரிப்பது என்ற விதத்தில் தான் அவர்களின் வீரத்தின் தன்மை உள்ளது. வெறும் வெட்டிப்பேச்சுகள், போலித்தனமான எழுத்துகள், என்றுதான் உள்ளன[5]. இத்தகைய முரண்பாடுகள் முதலியவற்றை எடுத்துக் காட்டினால், மற்றவர்களை மிரட்டுவது என்ற நிலை வருகிறது. தமிழர்களின் துரோகி என்று ஏசுதல், வசவாடுதல், அவதூறு பேசுவது என்ற ரீதியில் மாறுகிறது. இத்தகைய எழுத்து-பேச்சுத் தீவிரவாதங்களுடன் தான், திராவிட-தமிழ்-சித்தாந்தி மறவர்களும் காலத்தைக் கழித்து வருகின்றனர்.

Raja-kani-Tamil-MPs

Raja-kani-Tamil-MPs

முன்பு கொழும்புவில் எப்படி எம்பிக்கள் சென்று பேச்சு வார்த்தைகள் நடத்தினரோ, அதே ரீதியில் தான், இப்பொழுதும் நடத்தியுள்ளதாக உள்ளது. “தமிழர் பிரச்சினை” என்பதனால் காங்கிரஸ் சாமர்த்தியமாக, அவர்களை வைத்தே முடிவுக்கு வரும் அளவில் தள்ளியுள்ளது[6]. நாளைக்கு பிரச்சினை –  பேச்சு வார்த்தைகள் தோல்வி, ரூ. 500 கோடிகள் இந்திய அரசு கொடுத்தது, ஆனால் தமிழர்களைச் சென்று அடையவில்லை………………..என்று ஏதாவது பிரச்சினை வந்தால், இலகுவாக ஒதுங்கிவிட வாய்ப்பை மத்திய அரசு (காங்கிரஸ் தலைமை) ஏற்படுத்திக் கொண்டுள்ளது. கூட காங்கிரஸ் எம்பிக்களையும் சேர்த்துக் கொண்டுள்ளதால், மாநிலத்திலும், காங்கிரஸின் அதிகாரம் உள்ளது என்று தங்களை நிலைநிறுத்திக் கொள்ள சாமர்த்தியமாக வேலை செய்துள்ளது.

ரஜபக்ஷேவை-மகிழ்விக்கும்-தமிழ்-எம்பிக்கள்

ராஜபக்ஷேவை-மகிழ்விக்கும்-தமிழ்-எம்பிக்கள்

மக்களின் சாவில், கருமாந்திரத்தில், இழவில் கூட காசு வருகிறது என்றால் கொள்ளையடிக்கத் தயாராக உள்ள கூட்டங்கள்: அப்பாவி மக்களின் சாவில், கருமாந்திரத்தில், இழவில் கூட காசு வருகிறது என்றால், இன்றைய திராவிட சித்தாந்திகள் மற்றும் கருப்பு-சிவப்பு-பச்சை கூட்டங்கள், அதை பறிக்கக் கிளம்பிவிடுகின்றன. சுனாமி நிதியை எப்படி அந்த கிருத்துவக் கூட்டங்கள் ஈவு-இரக்கமின்றி கொள்ளையடித்தனவோ[7], அதைவிட கேவலமாக, இந்த சித்தாந்தி-குழுமங்கள் கொள்ளையடிக்க தயாராக உள்ளனர். சென்னை மாநகராட்சியில், தினமும் ஒரு சாவு என்றால், அதற்கு வாங்கும் லஞ்சத்தில், கவுன்சிலருக்கு பங்கு போகிறதாம். இப்படி இருக்கும் திராவிட கலாச்சாரத்தில், ஏன் இந்த கூட்டங்கள், பிணங்களின்மீது கூட லாப-நஷடக் கணக்குகளைப் பார்த்து அடித்துக் கொள்ளாது? இந்த கேவலமான நிலைதான், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உள்ளது. குவியல்-குவியலாக பிணங்கள், தோண்ட-தோண்ட பிணங்கள், மனித உரிமை மீறல்கள், போர்குற்றவாளி மகேந்திரபக்ஷே, தமிழ் மக்களின் உயீரைக்குடித்த எமன்…………………………இப்படி ஏராளமான செய்திகள்…………………பிறகெப்படி, இந்த 14-எம்பி கூட்டம் அந்த எமனுடன், ராக்ஷ்ஸனுடன் கைகுலுக்கி, சிரித்துக் கொண்டு அமுத்தலாக பேச்சு வார்த்தைகள் நடத்துகின்றன? சோம-சுரா பானங்களை குடித்துக் கொண்டு, விருந்துண்ணுகின்றன?

TamilMPs-met-Rajapakse

TamilMPs-met-Rajapakse

கருணாநிதியின் கடிதங்களும், ராஜபக்ஷேவின் வார்த்தைகளும்: பாம்பின் கால் பாபு அறியும்: தில்லிக்குச் சென்று ராஜபக்ஷேவுடன் நானே பேச்சு வார்த்தைகள் நடத்துகிறேன், அவருடைய போலித்தனத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறேன் என்று கருணாநிதி சவால் விடவில்லை. மாறாக, “ராஜபக்ஷே தமது வாக்குறுதிகளினின்று பின்வாங்கிவிட்டார்”, என்று பேச ஆரம்பித்து விட்டார். 80,000  தமிழர்கள் இன்னும் கூடாரங்களில் வசிக்கின்றனர். அவர்கள் உடனடியாக குடியமர்த்தப்படவேண்டும் என்று கடிதம் எழுதிவிட்டேன் என்று மார்தட்டிக் கொள்கிறார்[8]. கடிதங்கள் எழுதினால் காரியங்கள் நடக்குமா? மகள்-மகன்-மறுமகன்களுக்கு மந்திரி பதவி கொடுங்கள் என்று கடிதம் எழுதிவிட்டு சென்னையிலேயே உட்கார்ந்து கொள்ளாலாமே? அப்பொழுது மட்டும் ஏன் தில்லிக்குச் சென்று சோனியாவிடம் நேரிடையாக பேசவேண்டும், மிரட்டவேண்டும்? போதாக்குறைக்கு ராஜாவைவிட்டு நீரா ராடியாவை வைத்துக் கொண்டு உறவாட வேண்டும். தமிழர்களின் மீது, உண்மையிலேயே அக்கரை இருந்திருந்தால், இத்தகைய ஏமாற்று வேலைகளை செய்யவேண்டாமே? இதைப்போலத்தான் அந்த ராஜபக்ஷேவின் வார்த்தைகளும், வாக்குறுதிகளும். ஏன் அவருக்குத்தெரியாதா, கருணாநிதியைப் பற்றி? பாம்பின் கால் பாம்பறியாதா? இத்தகைய வஞ்சக பேரங்களில், எப்படி தமிழர்கள் மீண்டு வாழ்வர்?

Douglas-met-Manmohan

Douglas-met-Manmohan

காங்கிரஸின் / சோனியாவின் கபட நாடகம்: போர்க்குற்றங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தால், விடிவு, முடிவு வந்து விடுமா? ஏன் மன்மோஹன்[9] சிங் அதைப் பற்றி பேசுவதில்லை? மன்மோஹன் சிங் ஏன் பேசுவதில்லை என்று சுதர்ஸன நாச்சியப்பன் ஏன் கேட்கவில்லை? ராஜிவ் காந்தி கொலைக்கரர்களின் சட்டப்படி நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலில், நளினியை நான் மன்னித்து விட்டேன் என்று சோனியா பேசுவதும், பிரியங்கா வேலூருக்கே வந்து நளினியுடன் ரகசிய பேச்சுகள் வைத்துக் கொண்டு செல்வதும், அறிந்தும் அறியாத மாதிரி காங்கிரஸ்-திமுக கோஷ்டிகள் நடித்திருப்பதும், ஏன் தமிழர்கள் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்? ஆட்டிவைக்கும் சோனியா ஒன்று பேசினால், ஜனாதிபதியோ, நீதிமன்றங்களோ, உள்துறையோ என்ன செய்யும்?  இந்த நுணுக்கம் கூடவா, அறிவு ஜீவிகளுக்குத் தெரியவில்லை? பிறகென்ன கருணை மனு பற்றிய பேச்சுகள், அதில்கூட “சீனியாரிடி” உள்ளது, அதன்படிதான் நடவடிக்கை எடுப்போம் என்ற ஒழுக்கமான பேச்சுகள் எல்லாம் ஏன் வருகின்றன?

Duglas-devananda-terrorist-rebel

Duglas-devananda-terrorist-rebel

சோனியாவின் போலித்தனம், இரட்டைவேடம், துரோகத்தனம்: ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வந்து, தனது கணவனின் பிண்டத்தைப் பார்த்தபோது, “போதும், இனி நாங்கள் அரசியலிலேயே தலையிட மாட்டோம்”, என்று நொந்து, அஞ்ஞானவாசம் வாழ்வேன் என்று ஏற்பட்ட விசனம், எப்படி இந்தியாவை ஆண்டே தீருவேன் என்று மாறியது என்று காங்கிரஸ்காரர்கள் யோசிப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரைக்கும் அம்மையார் இருந்தால், அவர்களுக்கு பதவிகள் கிடைக்கும், வசதிகள் தொடரும், பணம் கொட்டும் அவ்வளவே. ஆனால், அத்தகைய நுணுக்கத்தை அந்த ஜூலியன் மோரோ தனது புத்தகத்தில் எடுத்துக் காட்டிவிட்டால், அது மாபெரும் குற்றமாகி விடுகிறது[10]. உடனே சோனியா வக்கீல் நோட்டீஸ் விடுகிறார், மிரட்டுகிறார், அந்த புத்தகம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் விற்பதை தடுத்துவிடுவேன். பிறகெதற்கு நாட்டை ஆட்டிவைக்க வேண்டும் என்ற ஆசை? இந்தியாவை விட்டுச் சென்றுவிடவேண்டியதுதானே? ஆனால், சென்றுவிடுவேன் என்று மிரட்டி, தொடர்ந்து இருப்பதில் தான் உண்மையான நிலையுள்ளது. தனது கணவர் கொலையாளிகளின் கூட உறவுகள் தொடர்ந்தன, பேரங்கள் நடந்தன என்றால் அவற்றின் மர்மம் என்ன? ராஹுல் காந்தி பிரதமரானால் கொன்றுவிடுவோம் என்ற மிரட்டல் இருப்பதினால்தான், சோனியா நளினியுடன் பேரம் பேசுகிறார் என்ற பேச்சும் அடிபடுகிறது. நளினி மற்றும் முருகனை விடுதலை செய்யப்பட்டால், அவர்கள் இந்தியாவைவிட்டு சென்று விடுவோம், இனி பிரச்சினையிலேயே தலையிட மாட்டோம் என்று உறுதி பெறுவதற்குத்தான் பிரியங்கா மூலம் சோனியா பேரம் பேசியது உண்மையா-போய்யா என்பதை சோனியா மற்றும் காங்கிரஸ்தான் உறுதி செய்யவேண்டும்.

குறிப்பு: கனிமொழியின் ஆடைகள் மாறியிருக்கின்றன. முதலில் சிகப்பு நிறம் சேலை-ஜாக்கெட் என்றுள்ளது, பிறகு அது பச்சைநிற பார்டர் போட்ட வெளிர் மரக்கலர் நிறத்தில் மாறியிருக்கிறது. ஆக,  – இரண்டு முறை (ஒரே நாளில் அல்லது அடுத்தடுத்த நாட்களில்) அவர்கள் ராஜபக்ஷேவைப் பார்த்து பேசியிருக்கிறார்கள். சிவராஜ் பாட்டீல் மாதிரி ஆடைகளை மாற்றுவதில் தான் கனிமொழி கவனம் செல்லுத்தியிருக்கிறார் என்று தெரிகிறது. இங்கே, இவ்வளவு வெறுப்பு, காழ்ப்பு, ஆக்ரோஷம், விரோதம், துவேஷம்,…………………முதலியவற்றுடன் பேசினாலும், அங்கு அமைதியாக, நாகரிகமாக, சிரித்துக் கொண்டு, …………………சால்வைகளைப் போத்தி மரியாதை செய்து…………………………………. , முகச்சிரிப்போடு……………..அப்பப்பா, நடிப்பா, உண்மையா………..என்றே தெரியாமல் அளவில்………… அவர்கள் அந்நேரங்களில் பேசிய விவரங்கள் என்னவென்று தெரியவில்லை.


[1] Indian Peace Keeping Force (IPKF) withdrew from Sri Lanka in 1990. In 1991, after the IPKF withdrawal was complete and the LTTE had assassinated former Indian Prime Minister Rajiv Gandhi, India brought its involvement in Sri Lanka’s internal ethnic conflict to a complete halt.

[2] Editorial, Productive Visit, The Hindu dated 12-06-2010. From 1991, successive governments in New Delhi have conducted Sri Lanka policy on sound and constructive lines. The time has come to take the bilateral relationship to a new level by exploring its full potential. As part of this, rising India must – without imposing itself – continue to encourage the Sri Lankan leadership to find a satisfactory resolution to Tamil grievances within an improved devolution framework.

http://beta.thehindu.com/opinion/editorial/article453209.ece

[3] DMK president and Chief Minister M  Karunanidhi on Tuesday 03 Feb 2009 said the LTTE had lost the sympathies of the party way back in 1987 itself as its chief V Prabhakaran was planning to adopt a dictatorial form of government in Tamil Eelam for which they were fighting.

[4] http://timesofindia.indiatimes.com/India/Karunanidhi-lauds-LTTE-as-Sonia-looks-on/articleshow/4507318.cms

After calling LTTE chief Prabhakaran his good friend, Tamil Nadu Chief Minister M Karunanidhi on Monday flip-flopped from his stand, saying India could not forgive the LTTE for assassinating Rajiv Gandhi. http://ibnlive.in.com/news/karunanidhi-flip-flops-says-cant-forgive-ltte/90663-37.html

[5] http://www.thehindu.com/2010/06/08/stories/2010060859770300.htm

http://beta.thehindu.com/news/states/tamil-nadu/article449715.ece

[6] சுதர்ஸன நாச்சியப்பன், இந்த 14-எம்பி குழுவில் இருந்திருக்கிறார். பிரபாகரனை எதிர்க்கும் பட்சத்தில், காங்கிரஸ் இலங்கையாட்சியாளர்களுக்கு சாதகமாத்தான் செயல்படும் என்பது நிதர்சனமாகிறது.

[7] ஸெவன்த் டே அட்வென்டிஸ்ட் என்ற கூட்டாத்தார், தடபுடலாக, அமெரிக்காவிலிருந்து மில்லியன் கணக்கில் டாலர்களைப் பெற்று, மிகவும் தரக்குறைவான ஓட்டை வீடுகளைக் கட்டிக் கொடுத்து, சரியாக மாட்டிக் கொண்டனர். சென்னை உயர்நீதிமன்றமே இவர்களைக் கடுமையாக சாடி கண்டித்தது. மறுபடியும் வீடுகளைக் கட்டித்தருமாறு ஆணையிட்டது.

[8] http://beta.thehindu.com/news/national/article450225.ece

[9] http://www.thehindu.com/2010/06/10/stories/2010061057650100.htm

[10] ஜூலியன் மோரோ என்பவர் எழுதிய புத்தகத்திற்கு காங்கிரஸ்காரர்கள் அதிக அளவில் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

மந்திரி பதவி வாங்கத் தெரிந்தவர்களுக்கு ஏன் எல்.டி.டி.ஈ தடையை நீக்கமுடிவதில்லை?

மே 14, 2010

மந்திரி பதவி வாங்கத் தெரிந்தவர்களுக்கு ஏன் “எல்.டி.டி.ஈ” தடையை நீக்கமுடிவதில்லை?

எல்.டி.டி.ஈ மீதான தடை இன்னும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப் படுகிறது.

According to a notification issued by the Union Home Ministry, even though LTTE has been “decimated in Sri Lanka, recent reports reveal that remnant LTTE cadres and leaders are regrouping in Tamil Nadu“. The Liberation Tigers of Tamil Eelam has been banned since 1992 under the Unlawful Activities (Prevention) Act, 1967.

சிதம்பரத்தின் உள்தூரை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, “ஸ்ரீலங்காவில் ஒடுக்கப்பட்ட / குறைக்கப்பட்ட விடுதலைபுலிக் குழுக்கள் மற்றும் தலைவர்கள், தமிழ்நாட்டில் வேறுவிதமான மாற்றுக் குழுக்களாக வெளிப்படுகிறர்கள்“, என்று குறிப்பிடுகிறது. அந்த விடுதலைபுலிகள் இயக்கம் 1992லிருந்து, தடை செய்யப் பட்ட இயக்கமாக இருக்கிறது.

Latest indian and world political news information

திராவிடக் கட்சிகள், “எல்.டி.டி.ஈ”, போட்டிப் போட்டுக் கொண்டு உதவ வருகின்றனர்.

செபாஸ்டியன் சீமானைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். “வைக்கோ”தான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்.

சுப்ரீம் கோர்ட், பிரபாகரின் தாயாருடைய சிகிச்சைக்கான வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது என்று செய்தி வந்துள்ளது.

Supreme Court disposes plea on Prabhakaran’s mother

http://www.hindustantimes.com/Supreme-Court-disposes-plea-on-Prabhakaran-s-mother/Article1-543528.aspxThe Supreme Court on Friday disposed a petition seeking a direction to the central government to fly the ailing mother of the slain Tamil Tigers chief to Chennai for medical treatment.

Petitioner and Chennai-based lawyer R. Kuruppan also wanted the court to direct the central government to ensure that no foreigner who comes to the country with a valid Indian visa is forcibly deported. The petition assailed the central government’s decision to deport Parvathi Ammal, mother of Velupillai Prabhakaran, when she flew into Chennai airport from Malaysia. He said she was sent back to Malaysia despite holding a valid visa issued by the Indian high commission in Kuala Lumpur. Prabhakaran, the founder leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), was killed along with his top lieutenants in May last year by the Sri Lankan military.

தின்பதற்கு-தயார்

தின்பதற்கு-தயார்

கருணாநிதியோ பதிலே வரவில்லை என்கிறார்.

மந்திரி பதவி வாங்கத் தெரிந்தவர்களுக்கு ஏன் “எல்.டி.டி.ஈ” தடையை நீக்கமுடிவதில்லை?

ராஜாவிற்கு, அழகிரிக்கு, தயாநிதி மாறனுக்கு……………….மந்திரி பதவி வேண்டுமென்றால், குடும்பசகிதமாகச் சென்று, சோனியாவைப் பார்த்து வாங்கிக் கொண்டு வந்த் விடுகின்றனர்.

பிரியங்கா, சோனியா……………….பற்றி கேட்கவே வேண்டாம், “எல்.டி.டி.ஈ”  மன்னிக்கத் தயாராக உள்ளனர்.

பிறகு, சிதம்பரம் எப்படி தடையை நீட்டிக்கிறார்?

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 2 ஆண்டு நீடிப்பு: மத்திய அரசு
First Published : 15 May 2010 12:42:08 AM IST; Last Updated : 15 May 2010 06:05:27 AM IST – நன்றி தினமணி

புது தில்லி, மே 14, 2010: விடுதலைப் புலிகள் (எல்டிடிஈ) மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு – 2012 வரை, நீட்டிப்பதென மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

$ இலங்கைத் தமிழ் அமைப்புகள் சில தமிழகத்தில் ஒன்று சேர்ந்து மீண்டும் ஒரு குழுவை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக வந்த புலனாய்வு தகவல் அடிப்படையில் இந்த தடை நீடிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

$ இது தொடர்பான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சில தலைவர்கள் மீண்டும் தமிழகத்தில் ஒன்று சேர்வதாக இலங்கையிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

$ 1992-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் (எல்டிடிஈ) உள்ளது.

$ தனி நாடு கேட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசை எதிர்த்து போராடி வந்த இந்த அமைப்பை கடந்த ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவம் முற்றிலுமாக அழித்தது.

$ இந்த இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் தமிழகத்திலிருந்து மீண்டும் ஒன்று சேரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

$ இவர்கள் இலங்கைத் தமிழ் அகதிகள் என்ற போர்வையில் செயல்படுவதாக புலனாய்வு தகவல் வெளியாகியுள்ளது. இதை முற்றிலுமாக புறக்கணித்துவிட முடியாது.  அத்துடன் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றனர்.

$ இவர்கள் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தங்களது வீழ்ச்சிக்கு இந்திய அரசியல் தலைவர்கள்தான் காரணம் என இணையதளம் மூலம் அவர்கள் பிரசாரம் செய்து வருவதாகவும் அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.

$ தற்போதைய சூழலில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை அவசியம் என்பது உணரப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

$ முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு இந்தியாவில் எல்டிடிஈ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.