Posts Tagged ‘தமிழ் முஸ்லிம்கள்’

கிழக்கிலங்கையில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்படும் வீடுகளை முஸ்லிம்களுக்கு ஒதுக்குவதை எதிர்க்கும் தமிழர்கள்!

மே 24, 2013

கிழக்கிலங்கையில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்படும் வீடுகளை முஸ்லிம்களுக்கு ஒதுக்குவதை எதிர்க்கும் தமிழர்கள்!

Notice_at_urugamam_281x351_bbc_creditஇந்திய அரசின் உதவியுடன் கட்டப்படும் வீடுகளை முஸ்லிம்களுக்கு ஒதுக்குவதற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகம்:  முஸ்லிம்களுக்கு வீடுகள் – கிழக்கிலங்கையில் தமிழர்கள் எதிர்ப்பு: இலங்கையின் மட்டக்ப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை வீசியதான குற்றச்சாட்டில் இரண்டு தமிழ் இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்[1]. இந்திய அரசின் உதவியுடன் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் போது அதில் முஸ்லிம்கள் உள்வாங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததாக காவல்துறையினர் கூறுகிறார்கள்[2]. கைதுசெய்யப்பட்ட இராஜபுரத்தைச் சேர்ந்த கந்தசாமி யோகராசா மற்றும் உறுகாமத்தைச் சேர்ந்த பரமசிவம் சுரேஸ்குமார் ஆகிய இருவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் என்னென்னவோ நடக்கிறது, யாரும் கண்டு கொள்வதில்லை.

???????????????????????????????இரண்டு முறை ஆதாயம் பெறும் முஸ்லிம்கள்: மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடிப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிங்கள கிராமமான மங்களகம, தமிழ் கிராமமான பெரியபுல்லுமலை மற்றும் முஸ்லிம் கிராமமான உறுகாமம் ஆகிய இடங்களில் இது தொடர்பான நிகழ்வுகள் (15-05-2013) புதன்கிழமை இடம்பெற்றன. இதன்போது பெரியபுல்லுமலை மற்றும் உறுகாமம் ஆகிய இடங்களில் இலங்கைக்கான இந்தியத் தூதர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் இந்திய உதவியுடனான வீடுகள் கட்டும் திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது, முஸ்லிம்களுக்கு வீடுகள் வழங்கப்படுவது தொடர்பில் எதிர்ப்பை தெரிவித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் இந்த இரு தமிழ் இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். உறுகாமம்வாழ் தமிழ் மக்கள் எனும் பெயரில் வெளியாகியுள்ள அந்தத் துண்டுப் பிரசுரங்களில் இது இந்திய அரசின் வீட்டுத் திட்டமா அல்லது இஸ்லாமியக் குடியேற்றத் திட்டமா என்று கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போரின் காரணமாக 1990 ஆம் ஆண்டு உறுகாமத்திலிருந்து வெளியேறிய அனைத்து முஸ்லிம் குடும்பங்களுக்கும் ஏறாவூர் பகுதியில்  ஈராக் அரசாங்கத்தினால் சதாமுசைன் கிராமம் என்ற பெயரில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டுள்ளது[3]. வீடுகளும் காணிகளும் வழங்கப்பட்டுவிட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.

Damaged Hindu temple Sri Lanka5 by Muslimsநல்லிணக்கம் என்ற பெயரில் தமிழர்களிடமிருந்து தட்டிப்பறித்து இரண்டாவது தடவையாக சலுகை  பெறுவது: யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி 25 முஸ்லீம் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவதைக் கண்டித்து நேற்றைய  தினம் (22.05.2013) சென்றிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக்காந்தா மற்றும் பசில்ராஜபக்ச தலைமையிலான குழுவினரிடம் உறுகாமம் வாழ் தமிழர்கள் என்ற பெயரில் துண்டுபிரசுரங்களை வழங்கியுள்ளனர்.  ஆனால் இன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கென இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் வீடுகளை இன நல்லிணக்கம் என்றபெயரில் தமிழர்களிடமிருந்து தட்டிப்பறித்து இரண்டாவது தடவையாக குறிப்பிட்ட முஸ்லீம்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள உறுகாமம் வாழ் தமிழர்கள் இது சம்பந்தமாக ஒரு துண்டுபிரசுரத்தையும் வெளியிட்டுள்ளதுடன் குறிப்பிட்ட துண்டுபிரசுரங்களை நேற்று சென்றிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக்காந்தா மற்றும் பசில்ராஜபக்ச தலமையிலான குழுவினரிடம் வழங்கியுள்ளனர்[4].

Damaged Hindu school - for buiding mosqueதமிழர் நிலத்தை மசூதி கட்ட கொடுத்தது: கிழக்கு மாகாணத்தில், அம்பாரை மாவட்டத்தில் சம்மந்துறையில் கொரக்கார் என்ற கிராமத்தில் தமிழரது நிலத்தை கையகப்படுத்தி, மசூதி கட்டுவதற்கு கொடுக்கப்பட்டதை தமிழர்கள் எதிர்த்தனர்[5]. முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களுக்கு இடையே ஏற்பட்ட மதச் சண்டை மற்றும் கலவரங்களிமனால், 1990களில் 250 தமிழர் குடும்பங்கள், இங்கிருந்து வெளியேற நேர்ந்தது. சமீபத்தில் தமிழர்கள் திரும்ப வந்து ஒரு போலீஸ் ஷ்டேசனை கட்ட உத்தேசித்னர். கே. தர்மலிங்கம் குடும்பத்தினர் கொடுத்த நிலத்தில் ஒரு கூட்டுறவு சங்கத்தையும் நிறுவ ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், அந்த நிலம் அபகரிக்கப்பட்டு அங்கு ஒரு மசூதி கட்ட ஏற்பாடு நடக்கிறது. ஏற்கெனவே 500 மீட்டர் தொலைவில் இரண்டு மசூதிகள் உள்ளன. தமிழர்களிடையே சமரசம் செய்யும் மற்றும் வளர்ச்சிற்காக பாடுபடும் தலைமை இல்லாததால் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுகின்றன[6].

Distribution_of_Languages_and_Religious_groups_of_Sri_Lanka_1981தமிழ் பேசுபவர்கள் தமிழர்  ஆவார்களா இல்லையா  –  இலங்கையில் ஏன் இப்படி குழப்பம்:  இப்படி செய்திகள் வருவது வேடிக்கையாக இருக்கிறது, ஏனெனில், இன்னும்-இன்றும் தமிழர்கள் தாங்கள் யார் என்று அடையாளம் கண்டு கொள்ளமல் இருக்கிறார்கள் என்பதுதான். ஆறுமுக நாவலர் பிறந்த மண்ணில் தமிழர்கள் தாங்கள் இந்துக்கள் என்று அறியப்படாமல் அல்லது அடையாளம் காணப்படாமல், முஸ்லிம்களுடன் போராடி வருவது என்ன பிரயோஜனம் என்று தெரியவில்லை.  இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம்களாகத்தான் இருந்து செயல்பட்டனர், சாதித்துக் கொண்டனர். முன்பே பலமுறைக் குறிப்பிட்டப் படி, தமிழக மற்ரும் தமிழ் ஊடகங்களே “இலங்கை முஸ்லீம்கள்”, “இலங்கை தமிழர்கள்” என்று பிரித்துக் காட்டி, தமிழர்களை ஒதுக்கினர். “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லை, கருதப்படவில்லை. இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களாக இருந்து செயல்படவில்லை. கொழும்பில் 2000ல் “உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு” என்று தனியாக நடத்தியது. பிரபாகரன் தரப்பில், தனியாக இன்னொரு தமிழ் இலக்கிய மாநாடு யாழ்பாணத்தில் தனியாக நடத்தப் பட்டது.  தமிழர்களின் ஒற்றுமை அந்த அளவிற்கு இருந்தது! பாகிஸ்தானியர்கள், முஸ்லீம்களுக்கு உதவுவார்கள், தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள். அதுபோல, கிறிஸ்தவர்களும் தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள், ஆனால், உதவுவது போல நடிப்பார்கள். இதையெல்லாம் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், எந்த பிரயோஜனமும் இல்லை.

Damaged mosqueஇலங்கையில் தமிழர்கள் ஏன் இந்துக்கள் போல செயல் படவில்லை: முஸ்லிம் தான் முஸ்லிம் என்றும், கிருத்துவன் தான் கிருத்துவன் என்றும் செயல்படும்போது, இந்து ஏன் இந்துவாக செயல்படக்கூடாது? இலங்கயில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் தமிழர்களக இருந்து செயல்படவில்லையே? ஊடகங்கள் “இலங்கை தமிழர்” மற்றும் “இலங்கை முஸ்லிம்கள்” என்றுதானே பிரித்து வைத்துக் கெடுத்தனர்[7]. “இலங்கை தமிழர்” என்று ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடவில்லையே! தமிழ் இந்துக்கள், தமிழ் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டவில்லையே? பிறகு, இப்பொழுது என்ன இந்த முஸ்லிம்கள், கிருத்துவர்களுக்கு இந்துக்களுக்கு மேல் அக்கரை? தமிழகத்தில் மற்றும் இலங்கையில் உள்ள இந்துக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

PrabhakaranEscapePlans-May20,20101990களில் ஏற்பட்ட பிளவு: அக்டோபர் 1990ல் பிரபாகரன் சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்களை ஜாப்னாவிலிருந்து வெளியேரச் சொன்னதால், முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடுள்ளது. தமிழ் பேசும் இந்துக்கள் மற்றும் கிருத்துவர்கள் கூட சேர்ந்து வாழாமல், தங்களுடைய அடையாளத்தைத் தனியாக வைத்துக் கொள்ளத் தீர்மானித்தனர்.  இதனால் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் [The Sri Lanka Muslim Congress (SLMC)] என்ற அரசிய சக்தியை உருவாக்கிக் கொண்டனர். 2002 பிறகு மறுபடியும் பிரச்சினை ஏற்பட்டது. வடகிழக்கில் புலிகள் [Liberation Tigers of Tamil Eelam (LTTE)] ஆட்சி செய்தாலும் அவர்கள் தமிழர்களை இலங்கை அரசு நடத்துவது போலத்தான் நடத்தியது. கிழக்கில் உள்ள முஸ்லிம்கள், விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள் முதலியோரை மிரட்டி பணம் வசூலித்து வந்தது. இப்படி தொடர்ந்து நடந்த நிகழ்சிகளால் குழுக்களுக்குள் அமைதி இல்லாமல் இருந்தது[8]. முஸ்லிம்கள் தனித்திருப்பது என்பது கட்டாயமானது. ஆகவே, முஸ்லிம்களைப் போல இந்துக்களும் தங்களது பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும்.

seeman-kapeleswarar-templeதமிழ்பேசும் இந்துக்கள் கிறிஸ்தவர்களிடமும் ஜாக்கிரத்தையாகத் தான் இருக்கவேண்டும்: கிருத்துவர்கள் தங்களது ஆதாயத்திற்காகத் தான், அவர்கள் தமிழர்களுடன் அடையாளம் காண விழைகிறார்கள். ஆனால், மற்ற விஷயங்களில் தனித்துதான் தங்களது மத உணர்வோடு இருக்கிறார்கள். இந்தியாவில் கூட செபாஸ்டியன் சீமான் இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன் என்று[9], தனது கிறிஸ்தவ கூட்டத்தாருடன் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார். கனடாவில் இந்து கோயில்களை சுயநலத்திற்காகத்தான் உபயோகப்படுத்திக் கொண்டு, கெட்டப் பெயரை வாங்கிக் கொடுத்தனர்[10]. தமிழ் இந்துக்களுக்கு யாரும் ஆதரவாக வரமாட்டார்கள். இந்தியர்கள் வரலாம் ஆனால், அவர்களையும் செக்யூலரிஸ்டுகள் “கம்யூனலிஸ்டுகள்” என்று மிரட்டி வருகின்றனர். ஒருமுறை இலங்கைத் தமிழர் “இந்துக்கள்” என்று சொல்லிக் கொண்டு பிஜேபி தலைவர்களைச் சென்று பார்த்தனர். ஆனால் என்னவாயிற்று என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

24-05-2013


[2] பிபிசி தமிழ், கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 மே, 2013 – 11:18 ஜிஎம்டி

p>[6] Chammaanthu’rai Tamils, Muslims oppose land appropriation causing tension[TamilNet, Friday, 08 June 2012, 23:48 GMT].Tamils and Muslims at the Koarakkar village of Chammaanthu’rai in Ampaa’rai district of the Eastern province, oppose an appropriation of Tamil land for the construction of a mosque that causes tension between communities. 250 Tamil families of the village were displaced in 1990s after communal disturbances between Tamils and Muslims. When the families returned recently, they have found some of their lands appropriated for the construction of a police station. In addition, a land that had been earlier allotted for the construction of a cooperative society by the family of K. Tharmalingam, has been now appropriated for the construction of a mosque, despite the presence of two more mosques within 500 meters. Both the Tamils and Muslims of the village in the pre-dominantly Muslim division of Chammaanthu’rai are worried about such activities causing disharmony. Lack of a genuine arbitrating agency from the point of nation-building of the Tamil speaking people is the problem, the people said.  The late Mr. Tharmalingam allotted his private land when there was a need to build a cooperative society for the village.  The Tamil families of the village largely come from the washermen community. The appropriation of lands for the police station has also affected many Tamil families from resettling.