இந்தியர்களே வீடுகள் இல்லாமல் அவதி படும்போது, இலங்கையில் வீடுகள் கட்ட இந்தியா உதவவேண்டுமா?

இந்தியர்களே வீடுகள் இல்லாமல் அவதி படும்போது, இலங்கையில் வீடுகள் கட்ட இந்தியா உதவவேண்டுமா?

இந்திய அரசு சார்பில் வீடுகட்டித் தரும் திட்டம் மூன்று கட்டங்களாக நடந்துள்ளன: இந்திய அரசு சார்பில் வீடு கட்டித்தரும் திட்டம் முதல் கட்டமாக நவம்பர் 2010ல் துவங்கி வைக்கப்பட்டு, ஆயிரம் வீடுகள் ஜூலை 2012ல் கட்டி முடிக்கப்பட்டன[1].  இரண்டாவது கட்டத்தில் பயனாளிகளே வீடு கட்டும் பணியில் பங்கும் கொள்ளும் முறையில் திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது[2]. 2012 முடிவில் தொடங்கிய மூன்றவது கட்டத்தில் ஏஜென்சிகளின் உதவியுடன் கட்டப்பட 2,000 வீடுகள் மிகவும் நலிவடைந்த-பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்டது (வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்) மற்றும் 4,000 வீடுகள் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த இந்திய வம்சாவளியினருக்கு (உவா மாகாணம்) என்று ஏற்படு செய்யப்பட்டது[3]. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  50,000 குடியிருப்புகளைக் கட்டுவதற்கு நிதியுதவி வழங்கும் இந்திய அரசின் திட்டத்தை அந்நாட்டு அரசு வெகுவாக பாராட்டி உள்ளது.

இலங்கைக்கு இந்தியாவின் உதவி: இந்தியாவுக்கு வெளியே மத்திய அரசு செயல்படுத்தி வரும் மிகப்பெரிய நிதியுதவித் திட்டங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகள் உடனான உள்நாட்டுப் போர் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன்பிறகு, போரினால் புலம் பெயர்ந்த தமிழர்களை அவரவர் பகுதிகளில் மறு குடியமர்த்துவதற்காக, மனிதாபிமான அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் 50,000 குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க இந்திய அரசு முன்வந்தது. இதற்கான திட்ட மதிப்பான ரூ.1,372 கோடி முழுவதையும் வழங்க இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதன்படி, வடக்கு மாகாணத்தில் பல்வேறு திட்டங்களை இலங்கைக்கான இந்திய தூதரகம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, அம்பாரா ஆகிய 2 மாவட்டங்களில் 4,000 குடியிருப்புகளை கட்டுவதற்கான திட்டத்தை மட்டக்களப்பில் 15-05-2-13 புதன்கிழமை தொடங்கி வைத்த பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் பசில் ராஜபட்ச, இந்தியாவின் இத்தகைய முயற்சியை பாராட்டி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய தூதர் அசோக் கே. காந்தா, போரின்போது வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியிலிருந்து புலம் பெயர்ந்தவர்களை விரைவாக மறுகுடியமர்த்த வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தினார்[4].

இடம்பெயர்ந்தவர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்கும் விழா,  பாராட்டு: வடக்கு மாகாணத்தில் இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் திருப்தி அளிப்பதாகவும் அவர் தேரிவித்தார். கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச, வடக்குப் பகுதியில் 50,000 குடியிருப்புகளைக் கட்டித் தருமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை வைத்தார்[5]. பின்னர் இந்தத் திட்டம் கிழக்குப் பகுதிக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டதாக பசில் நினைவு கூர்ந்தார்[6]. அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், இலங்கை அமைச்சருமான பசில் ராஜபக்சே கலந்து கொண்டு பேசியதாவது: “இலங்கைக்கு இந்தியா மிகவும் நட்பு நாடாக உள்ளது. எங்களது வளர்ச்சியில் இந்தியா எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இலங்கைக்கு ஒன்று என்றால் உதவி செய்வதில் முதன்மை நாடாக இந்தியா உள்ளது. போருக்கு பிறகு நாங்கள் செய்த மறுவாழ்வு திட்டங்களை இந்தியா பாராட்டி உள்ளது. இலங்கையில் இந்தியா தூதராக இருந்த அசோக் கந்தா இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிறப்பாக செய்துள்ளார்”, என இவ்வாறு பசில் பேசினார்[7]. ஆனால் ஊடகங்களின் குறிப்பாக “இலங்கை தமிழர் ஆதரவு” சார்பு இணைதளங்களில் முரண்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழர்கள் அதிகமாகவுள்ள கச்சத்கொடி மற்றும் படிப்பாழை கிராமங்களில் இரண்டு புத்த விஹாரங்கள் கட்டப்பட்டு, பௌத்தர்களை குடியேற்ற முயற்சிகள் நடப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்[8].

சைனா போட்டிப் போட்டுக் கொண்டு உதவுவது: சைனாவின் உதவி $1.05 billion  என்றுள்ளது. ஐந்தாண்டுகளில் (1971- 2012) இந்தியாவின் உதவித்தொகை $1.45 billion ஆகும், அதில் $1.12 billion கடனாகவும், $326 million உதவித்தொகையாகவும் கொடுக்கப்பட்டுள்ளன. அதே காலத்தில் சைனாவின் உதவித்தொகை $5.05 billion ஆக உள்ளது, அதில் $4.76 billion கடந்த எட்டாண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது[9]. சைனா தனது ஆதிக்க மற்றும் தென்னாசியாவில் விரிவாக்க எண்ணத்தில் இவ்வாறு உதவி செய்யும் போது, இந்திய தனது ஏழ்மை நிலைமையும் – “தனக்கு மிஞ்சினால் தான் தானம்” என்பதை மறந்து செய்து வருகிறது.

சிங்கள இந்துக்கள் தனிமைப் படுத்துவது, சிறுபான்மையினராக்குவது, பாதிக்கப்படுவது: சிங்களவர் என்று ஒருமையாகப் பாராமல், பௌத்தர்கள், தமிழர்கள் என்று பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஶ்ரீலங்கையில் உள்ளவர்கள் சிங்களவர்கள், அவர்கள் எந்த மதத்தையும் பின்பற்றலாம், மொழியையும் பேசலாம். மதத்தின் மீது ஆதாரமாகப் பிரிப்பதானால், வாதிப்பதானால், சிங்கள பௌத்தர்கள், சிங்கள இந்துக்கள், சிங்கள முஸ்லிம்கள், சிங்கள கிறிஸ்தர்கள், என்றுதான் பேசவேண்டும். மொழியின் மீது ஆதாரமாகப் பிரிப்பதானால், வாதிப்பதானால், சிங்கள தமிழர்கள்/ தமிழ் பேசும் சிங்களவர், பாலி பேசும் சிங்களவர், உருது பேசும் சிங்களவர், என்றுதான் பிசித்துப் பேசவேண்டும். ஆனால், இதில், சிங்களத் தமிழர், தமிழர் என்றுதான் மற்றவர்களை விட்டு வேறுவிதமாக ஊடகங்களில் குறிக்கப்படுகிறார்கள். இதனால் தமிழ்பேசும் மக்களின் ஒற்றுமையைக் குலைக்கிறார்கள்.

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலரரை மறந்த ஶ்ரீலங்கைத் தமிழர்கள், இந்துக்கள்:  இந்தியா வம்சாவளி சிங்கள மக்கள், மதம்-மொழி இரண்டினாலும் தங்களது அடையாளத்தை நீர்த்து சிறுபான்மையினராக்கி, அதிலும் குறைக்கப்படுகின்றனர். இதுதான் உண்மை. அவ்வாறு பாதிக்கப்பட்டது, படுவது – சிங்கள இந்துக்களே. அவர்கள் தங்களை இந்துக்கள் என்று ஸ்திரமாக பாவிக்காமல் இருப்பதினால் தான், மற்ற மதத்தினர் அவர்களை தங்களது சுயநலங்களுக்காக உபயோகப் படுத்திக் கொள்கிறார்கள்.

  • பௌத்தர்கள், இந்துமதத்திற்குட்பட்ட கடனையும் மறந்து, இலங்கை இந்துக்களை கொடுமைப் படுத்தி வருகிறார்கள்.
  • கிறிஸ்தவர்கள் மதம் மாறியதால் உண்மையறியாமலோ, அறிந்தோ இலங்கை இந்துக்களை சதாய்க்கிறர்கள், கொடுமைப் படுத்தி வருகிறார்கள்.
  • முஸ்லிம்களும் மதம் மாறியதால் உண்மையறியாமலோ, அறிந்தோ இலங்கை இந்துக்களை சதாய்க்கிறர்கள், கொடுமைப் படுத்தி வருகிறார்கள். தனியாக அடையாளங் காட்டிக் கொள்கிறார்கள்.

இதை இந்துக்கள் அல்லாத எல்லோரும் செய்து வருகிறார்கள். குறிப்பாக இந்தியர்கள், தமிழ்நாட்டில் வாழும் இந்தியர்கள், தமிழகத்தில் இருப்பவர்கள் மற்றும் தமிழர் என்று தமிழகத்தில், இந்தியாவில் இல்லாதவர்கள் அதிகமாகவே செய்து வருகிறார்கள். முடிவாக, மறுபடி-மறுபடி பாதிக்கப்படுவது, சிங்கள இந்துக்களே. இவர்களது அறியாமையை, மயக்கத்தை, போதையை, ஆயிரம் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர்கள் வந்தாலும் போக்கமுடியாது எனலாம்.

© வேதபிரகாஷ்

24-05-2013


[1] The first phase of 1,000 houses inaugurated in November 2010 was completed in July this year, 2012.

http://www.thehindu.com/news/international/second-phase-of-indias-largest-aid-project-launched/article3958901.ece

[2] The second phase of the project adopts an owner-driven methodology, under which owner-beneficiaries are involved in the process of construction.

http://www.thehindu.com/news/international/second-phase-of-indias-largest-aid-project-launched/article3958901.ece

The third phase of the housing project is expected to commence before the end of this year, 2012. In this phase, about 2,000 houses will be directly built by construction agencies for people from the most vulnerable sections of IDPs in the Northern and Eastern provinces unable to build their own houses and 4,000 houses for Indian-origin workers in tea estates in the Central and Uva provinces.

[3] http://www.thehindu.com/news/international/second-phase-of-indias-largest-aid-project-launched/article3958901.ece

[8] A part of the 50,000 housing aid promised by New Delhi for the war-affected people in the North and East is planned to be used for demographic genocide in the East at the village of Kachchat-kodi in the Paddip-pazhai division of Batticaloa district, according to Eastern Provincial council member R. Thurairatnam. The village, which was predominantly Tamil a few years ago and was affected by displacement during the war, now has 2 new Sinhala Buddhist Viharas constructed and a number of Sinhala families brought from outside settled with the assistance of Buddhist priests. http://www.naamthamilar.ca/?p=147199.html

[9] The Chinese commitment stood at $1.05 billion. “The total assistance extended by India during the last 5 year period was $1.45 billion of which $1.12 billion was loan assistance and $326 million was grant assistance,” the report said.The total assistance extended by China during the period between 1971 and 2012 was $5.05 billion of which $4.76 billion, representing around 94 per cent, was extended during the last 8-year period from 2005 to 2012, the report said.

http://www.thehindubusinessline.com/news/international/indian-development-aid-second-largest-in-sri-lanka/article4733187.ece

குறிச்சொற்கள்:

4 பதில்கள் to “இந்தியர்களே வீடுகள் இல்லாமல் அவதி படும்போது, இலங்கையில் வீடுகள் கட்ட இந்தியா உதவவேண்டுமா?”

  1. தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்த Says:

    […] [18] https://srilankanissue.wordpress.com/2013/05/24/how-and-why-india-helps-srilanka-for-building-houses-… […]

  2. காங்கிரஸ், முஸ்லிம்கள், திராவிட கட்சிகள் வழக்கம் போல ஆடும் நாடகங்கள்! | Indian Secularism Says:

    […] [14] https://srilankanissue.wordpress.com/2013/05/24/how-and-why-india-helps-srilanka-for-building-houses-… […]

  3. நிகாதத் சட்டத்தை எதிர்க்காத திராவிடத்தின் இன்னொரு போலித்தனம் – இஸ்லாமிடம் ஏமாந்தும் புத்த Says:

    […] [3] https://srilankanissue.wordpress.com/2013/05/24/how-and-why-india-helps-srilanka-for-building-houses-… […]

  4. ஶ்ரீலங்கையில் இந்துக்கள் இருக்கிறார்களாம், அவர்கள் கோவில்கள் இடிக்கப்படுகின்றனவாம், உரிமைக Says:

    […] https://srilankanissue.wordpress.com/2013/05/24/how-and-why-india-helps-srilanka-for-building-houses-… […]