Archive for செப்ரெம்பர், 2015

பெரியார் பெயரில் அமெரிக்க மாமிசக் கறிக்கடை தாக்குதல் – மீன்கழிவு அபிஷேகம், அமெரிக்காவைத் திட்டி அர்ச்சனை, நோட்டிசுகளால் பூஜை!

செப்ரெம்பர் 25, 2015

பெரியார் பெயரில் அமெரிக்க மாமிசக் கறிக்கடை தாக்குதல் – மீன்கழிவு அபிஷேகம், அமெரிக்காவைத் திட்டி அர்ச்சனை, நோட்டிசுகளால் பூஜை!

kfc attacked in Pondicherry 1

kfc attacked in Pondicherry 1

பெரியார் சிந்தனை கழகம்: பெரியாரின் பெயரில் எத்தனை கழகங்கள் இயங்கி வருகின்றனவோ தெரியவில்லை. தமிழ்நாடு, புதுச்சேரியில் அமெரிக்காவின் கெஎஃப்சி உணவகத்தை பெரியார் சிந்தனை கழகத்தை சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது, என்று புதுச்சேரியில் நடந்த சிறிய நிகழ்ச்சியை இணைதளத்தில் செய்தியாக பார்த்தவுடன், “பெரியார் சிந்தனை கழகம்” பற்றி தேடிப் பார்த்தோம், ஒன்றும் கிடைக்கவில்லை.

ஆதித்தமிழர் கொடி

ஆதித்தமிழர் கொடி

ஆக திராவிடக் கழகம், பெரியார் திராவிடக் கழகம், பகுத்தறிவு பெரியார் திராவிடக் கழகம், பெரியார் பாசறை, பெரியார் சிந்தனையாளர்கள் கழகம், என்பது போல, இந்த “பெரியார் சிந்தனை கழகம்” முளைத்துள்ளது போலும்!

திக கொடி

திக கொடி

அம்பேத்கர், பெரியார் போன்ற பெயர்கள், உருவங்கள், சிலைகள் இன்றளவில் சின்னங்களாக, பிரச்சார அடையாளங்களாக, சித்தாந்த வியாபார முத்திரைகளாக, வணிக குறிகளாக மாறிவிட்டது தாராளமாக தெரிகிறது.

pdk-flag

pdk-flag

அத்தகைய அடையாளங்களை தாங்கள் உபயோகப்படுத்தினால், தங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலையும் உள்ளது என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் போலும்.

இலங்கைக்கு ஆதரவாக .நா.வில் தீர்மானம்: அமெரிக்கா திடீர் பல்டி! (ஆகஸ்ட்.2015): இலங்கை விவகாரத்தில் புதிய திருப்பமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அந்நாட்டுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா சார்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானம் இலங்கை மீதான விசாரணையை வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டுவரப்படும் என அமெரிக்காவின் மத்திய, தெற்காசிய விவகாரங்கள் துறை துணை அமைச்சர் நிஷா பிஸ்வால் தெரிவித்தார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிஷா பிஸ்வால், கொழும்பில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது[2]: ஜெனீவாவில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டமைப்பின் மாநாட்டில் இலங்கை விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இலங்கை அரசே போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளவதற்கு ஆதரவு தரப்படும். இலங்கை அரசுடனான நல்லுறவைப் பேணும் வகையில் இந்த தீர்மானம் அமையும். இலங்கையில் தற்போதைய சூழலில், வேற்றுமைகளை அகற்றி சமரசம் மலர ஏராளமான வாய்ப்புகள் உருவாகி இருப்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. அந்த வகையிலேயே இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவர அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இவ்வாறு நிஷா பிஸ்வால் கூறினார். இச்செதி வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது.

kfc attacked in Pondicherry 2

kfc attacked in Pondicherry 2

புதுச்சேரியில் கே.எப்.சி உணவகம் தாக்கப்படல் (24-09-2015)[3]: இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக உள்ளூர் விசாரணையே போதும் என்று, ஐ.நாவில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது. இதற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி காந்தி வீதி-ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பில்,  இயங்கி வரும் அமெரிக்காவின் கெஎஃப்சி உணவகத்தில் இன்று பெரியார் சிந்தனை கழகத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே புகுந்து, அங்கிருந்த கண்ணாடிகள், கதவுகள், கம்ப்யூட்டர், மேஜை, நாற்காலிகளை அடித்து உடைத்தனர்[4]. மேலும் அங்கிருந்த மீன் கழிவுகளை உணவகம் மீது கொட்டினர். மேலும், உள்ளே இருந்த மின் சாதனங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்[5].

kfc attacked in Pondicherry 3

kfc attacked in Pondicherry 3

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டவர்கள், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் அமெரிக்காவின் நிறுவனமே தமிழகத்திலிருந்து வெளியேறு என்றும் முழக்கமீட்டுள்ளனர். இந்த சம்பவத்தால், கடைக்கு சிக்கன் சாப்பிட வந்திருந்த வெளிநாட்டினர் உள்ளிட்டோர் அச்சத்தில் வெளியேறினர்[6]. பின்னர், அமெரிக்காவுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்[7]. இப்படியொரு கலாட்டா செய்ய 5 பேர் போதும் போலும்! இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த புதுச்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த சிறிய செய்தியை விகடனும் அப்படியே போட்டுள்ளது[8]. மேலும் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்[9]. விரைந்து வந்த போலீஸார் தேடி வருகின்றனர் என்பதே வேடிக்கையாக இருக்கின்றது. சிசிடிவியில் ஒன்றும் பதிவாகவில்லையா? சென்ற வாரம், கோவையில், நாம் தமிழர் கட்சியினர் இத்தகைய உணவகத்தை முற்றுகையிட்டு, கைதாகினர்.

kfc attacked in Pondicherry 4

kfc attacked in Pondicherry 4

13-09-2015 அன்று கோவை கே.எஃப்.சி உணவகத்தை தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்[10]: கோவையில் கே.எஃப்.சி உணவகத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 26 பேரை போலீஸார் கைது செய்தனர். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக உள்நாட்டு விசாரணையே போதுமானது என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்து கே.எஃ.ப்சி நிறுவனத்தின் ஆர்.எஸ்.புரம் கிளையை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழ்செல்வன் (எ) அப்துல்வகாப் தலைமை வகித்தார். இதில், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக இலங்கையில் உள்நாட்டு விசாரணை நடத்தினால் போதும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கண்டிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்[11].

பெரியாரைக் காப்போம்

பெரியாரைக் காப்போம்

விளம்பரத்திற்கு இவ்வாறு செய்யலாம் போலிருக்கிறது: பெரிய ஊடகங்களே, இன்றளவில், செய்திகளை தயாரித்து வெளியிடுகின்றன. இந்தியில் பேசியதைத் திரித்தி, ஆங்கிலத்தில் வெளியிட்டு பிரச்சினையாக மாற்ற முயற்சித்துள்ளனர், அது தொடர்ந்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் இலங்கைப் பிரச்சினை, ஒரு உணர்ச்சிப்பூர்வமானது. அவ்விசயத்தில், யாராவது எதிராக மூச்சுவிட்டல் கூட, தமிழ்-விரோதி என்று கிளம்பி விடுவர். பெரியாரின் 137வது பிறந்தநாளை ஐநா சார்பாக வீரமணி மாநாடு நடத்தினார். ஆனால், அதே பெரியார் சின்னத்தை, இன்னொரு கூட்டம், அமெரிக்காவுக்கு எதிராக உபயோகப்படுத்துகிறது. மாட்டுக்கறி தடை என்றால், மாட்டுக்கறி சாப்பிட்டார்கள்; உண்ணாவிரதம் என்றால் உண்ணும் விரதம் கொண்டாடினார்கள்; ஆனல், இப்பொழுது கறிக்கடையை ஏன் பெரியார் பெயரில் தாக்குகிறார்கள்?

© வேதபிரகாஷ்

25-09-2015

[1] தமிழ்.ஒன்.இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக .நா.வில் தீர்மானம்: அமெரிக்கா திடீர் பல்டி!, Posted by: Mathi, Published: Thursday, August 27, 2015, 7:56 [IST].

[2] http://tamil.oneindia.com/news/srilanka/major-shift-us-policy-backs-sri-lanka-s-own-war-crimes-probe-234334.html

[3] ஆர்த்தி, கே.எப்.சி உணவகத்தை அடித்து நொறுக்கிய பெரியார் சிந்தனை கழகம்!, சென்னை, வியாழன், 24.2015.23.56.

[4] http://www.pathivu.com/?p=43510

[5] http://puducherrynews.com/?p=29648

[6] புதுச்சேரி செய்திகள், இலங்கை பிரச்சனையில் அமெரிக்காவிற்கு எதிர்ப்பு: கேஎப்சி உணவகம் மீது திடீர் தாக்குதல், Posted by Puducherry News on September 24, 2015.

[7] யாழ், .நாவில் அமெரிக்கத் தீர்மானம்! புதுச்சேரியில் அமெரிக்க உணவகம் அடித்து உடைப்பு, Started by தமிழரசு, 10 hours ago

[8] http://www.vikatan.com/news/article.php?aid=52829

[9] http://www.yarl.com/forum3/topic/163540-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

[10] தினமணி, கே.எஃப்.சி உணவகம் முற்றுகை:26 பேர் கைது, By கோவை, First Published : 14 September 2015 03:21 AM IST.

[11]http://www.dinamani.com/edition_coimbatore/coimbatore/2015/09/14/%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8826-%E0%AE%AA/article3027086.ece