Posts Tagged ‘ஏர்டெல்’

நளினியிடம் இருந்து சிறையில் மொபைல் போன் பறிமுதல்: நான்கு வருடங்களுக்கும் மேலாக உபயோகித்ததாம்!

ஏப்ரல் 21, 2010
நளினியிடம் இருந்து சிறையில் மொபைல் போன் பறிமுதல்
ஏப்ரல் 21,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7278

Front page news and headlines today

வேலூர் : வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளி நளினியிடம் இருந்து மொபைல் போன், இரண்டு சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பலத்த பாதுகாப்பையும் மீறி சிறைக்குள் மொபைல் போன் சென்றது எப்படி என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின், ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற நளினியின் கணவர் முருகன் மற்றும் ராபர் பயாஸ் உள்ளிட்டபலர், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் 19 ஆண்டு தண்டனை அனுபவித்து வரும் நளினி, ‘தன்னை விடுதலை செய்ய வேண்டும்’ என, ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். ஐகோர்ட் உத்தரவுபடி அறிவுரை கமிட்டி அமைக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பியது. ஆனால், முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு மறுத்து விட்டது.

பெண்கள் சிறையில் நளினி அறையில் நேற்று காலை 8 மணிக்கு பெண்கள் சிறைசூப்பிரண்டென்ட் ராஜலெட்சுமி, துணை சிறை அலுவலர் லெட்சுமி ஆகியோர் திடீர் சோதனை செய்தனர்.அப்போது நளினி வைத்திருந்த பையில் ஒரு மொபைல் போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நளினி தங்கியிருந்த அறையில் சோதனை நடத்திய போது மேலும் இரண்டு சிம்கார்டுகள் சிக்கின. நளினியிடம், சிறைத்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, ‘தன்னிடம் மொபைல் போன் எப்படி வந்தது என தெரியவில்லை’ என்று, நளினி கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நளினியிடம் கைப்பற்றிய மொபைல் போனில் உள்ள சிம்கார்டு மற்றும் இரண்டு சிம்கார்டுகளைக் கொண்டு, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நளினி சிறையில் இருந்தபடி பேசியதும், குறிப்பாக வெளிநாடுகளுக்கு அதிகளவில் பேசியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நளினியிடம் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து நேற்று மாலை 7 மணி வரை முறையாக பாகாயம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்படவில்லை என, போலீசார் தெரிவித்தனர். நளினிக்கு மொபைல் போன் எப்படி கிடைத்தது, இதற்கு பெண்கள் சிறைத்துறை அதிகாரிகள், சிறைக்காவலர்கள் உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்து, சென்னையில் இருந்து சிறைத்துறை உயர் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளிகள் நளினியின் கணவர் முருகன் மற்றும் சாந்தன், பேரறிவாளன் ஆகியோரிடம் மொபைல் போன்கள் உள்ளனவா என்பது குறித்தும், ஆண்கள் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சிறைத்துறை காவலர்கள் கூறியதாவது:வேலூர் மத்திய ஆண்கள், பெண்கள் சிறைகளில் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் கிடைக்கும் நிலை உள்ளது. குறிப்பாக ராஜிவ் கொலையாளிகள் நளினி, முருகன் சம்பந்தப்பட்டவர்களிடம் பல ஆண்டுகளாகவே மொபைல் போன்கள் இருப்பதும், அவர்கள் அதன் மூலம் பல மணி நேரம் பேசி வருவதும் சிறைத்துறைஅதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். இந்த நிலையில் திடீர் என இந்த பிரச்னை இப்போது கிளம்பி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நளினியிடம் மொபைல் போன் சிக்கியுள்ளதையடுத்து, கடந்த ஒரு மாதமாக பெண்கள் சிறையில் பணியாற்றி வந்த அனைத்து அதிகாரிகள், சிறை காவலர்களிடம் விசாரணை நடத்த சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. பல அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புக்கள் இருப்பதாக சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.நளினியிடம் கைப்பற்றிய மொபைல் போன், சிம் கார்டுகளை அவர் எத்தனை ஆண்டுகளாக வைத்திருந்தார், யார், யாரிடம் பேசி இருக்கிறார், அந்த சிம்கார்டுகள் யார் பெயரில் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரம் சம்பந்தப்பட்ட மொபைல் போன் நிறுவனங்களிடம் சிறைத்துறை அதிகாரிகள் விரிவாக விசாரணை செய்து வருகின்றனர். நளினி மொபைல் போனில் பயன்படுத்திய சிம் கார்டு, ஏர்டெல் நிறுவனத்தைச் சார்ந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நளினி கனடா, லண்டன் முதலிய இடங்களுக்குப் பேசியது: கனடா, லண்டன் முதலிய இடங்களுக்குப் பேசியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், யாஅருடன் பேசியது என்ற தகவல்கள் சொல்லப்படவில்லை. நளினியின் வக்கீல் சிறை அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்காததால், தனது கிளையன்ட் துன்புறுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டுவதும் வியப்பாகத்தான் உள்ளது.