Archive for ஏப்ரல், 2018

ஹபாயா / பர்தா விசயத்தை இந்து மகளிர் கல்லூரியில் பிரச்சினையாக்கி, ஶ்ரீலங்காவில் துலுக்கர் இந்து பெண்களை தூஷிப்பது, ஆபாசமாக சித்தரிப்பது (2)

ஏப்ரல் 28, 2018

ஹபாயா / பர்தா விசயத்தை இந்து மகளிர் கல்லூரியில் பிரச்சினையாக்கி, ஶ்ரீலங்காவில் துலுக்கர் இந்து பெண்களை தூஷிப்பது, ஆபாசமாக சித்தரிப்பது (2)

Muslims denigrating comments-3

சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் உள்ளவர்களை கண்டு பிடிக்க வேண்டும்: சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் உள்ளவர்களை உடனடியாக கண்டுபிடிக்குமாறு திருகோணமலை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார, திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்[1]. திருகோணமலை சன்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை சம்மந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார ஆகியோருக்கிடையில் 26.04.2018 அன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்ததாவது, “இந்த கல்லூரியில் நடந்தாக கூறப்படும் பிரட்சனையை அதிகாரிகள் மட்டத்தில் பேசி தீர்வொன்றை கண்டிருக்க முடியும். ஆனால் இவ்வாறானதொரு ஆர்பாட்டம் ஒன்றை நடாத்த வேண்டிய தேவை யாருக்கு காணப்பட்டது. அந்த ஆர்பாட்டத்தில் ஏந்தியிருந்த பதாதைகள் இந்த ஆர்பாட்டத்தின் நோக்கத்தை தாண்டி இனவாதத்தையே பிரதிபலித்தது. ஆகவே இந்த பிரட்சனையை பயன்படுத்தி யாராவது அரசியல் லாபம் தேட முயற்சித்தார்களா என ஆராய வேண்டிய தேவை உள்ளது. ஏன் எனில் மூவினமும் ஒற்றுமையாக வாழும் இந்த மாவட்டத்தில் இந்த ஆர்பாட்டத்தின் பின் இனவாத கருத்துக்கள் பரப்பபடுகின்றன.  தமிழக அரசியல்வாதியின் பேச்சைப் போலவே இவர் பேச்சு இருக்கிறது.

 Muslims denigrating comments-1

ஆர்பாட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டதா? அவர்களுக்கு பின்னால் அரசியல் லாபம் ஏதும் உண்டா என விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்: இம்ரான் மகரூப் தொடர்ந்து கூறியது, “முஸ்லிம் ஆசிரியர்கள் தமது கலாச்சார ஆடை அணிந்து வர மறுக்கப்படுவதால் இன்று முஸ்லிம் பாடசாலைகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் காலச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆடை அணிகலன்களை அணியக்கூடாது என கூறி இரு இனங்களுக்கு மத்தியில் முறுகல் ஒன்றை ஏற்படுத்த மூன்றாம் தரப்பொன்று முயல்வதாகவே தோன்றுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர் ஆர்பாட்டம் முஸ்லிம் பிரதேசங்களிலும் நடாத்தப்பட்டு இது நாடு முழுவதும் பரவுகின்ற அபாயம் காணப்படுகிறது. இது இரு சமூகங்களுக்கு மத்தியில் முறுகல் நிலையை தோற்றுவிப்பது மட்டுமல்லாமல் இரு சமூகங்களின் கல்வி நடவடிக்கைகளையும் பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இந்த ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் யார்? இந்த ஆர்பாட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டதா? அவ்வாறாயின் யாருக்கு அந்த அனுமதி வழங்கப்பட்டது? என கண்டுபிடித்து அவர்களுக்கு பின்னால் அரசியல் லாபம் ஏதும் உண்டா என விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் திருகோணமலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதே போன்ற ஒரு பிரட்சனை சிறிஜெயவர்தனபுற ஜனாதிபதி வித்யாலயத்திலும் ஏற்பட்டு அது உயர் நீதிமன்றம் வரை சென்றது அந்தமதத்தவர் தமது மதத்தை பிரதிபலிக்கும் கலாச்சார ஆடைகளை அணிவதில் எந்த தடையுமில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்பளித்தது நினைவுகூறத்தக்கது,” என தெரிவித்தார்[2].

Muslims denigrating comments-4

முஸ்லிம் அமைப்புகள் தங்களது சுயமுகங்களை வெளிக்காட்டியது: முஸ்லிம் அமைப்புகள், இதனை எதிர்த்து மதவாத ரீதியில் பதாகைகளை வைத்துக் கொண்டும், தூண்டும் வகையிலும் பேசி, ஆர்பாட்டம் செய்தனர்[3]. 27-04-2018 ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு, ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர்- சுலோச்சனா ஜெயபாலன், பாடசாலை நிர்வாகம் எதிர்த்து கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்தனர்[4]. “கலாச்சாரத்தின் பெயரால் ஆபாசத்தை ஆதரிக்காதே, உடலை மறைத்தால் காமுகர்கள் தான் கோபப் படுவார்கள், ………………..சேலை உலக மகா ஆபாசம்…………” என்றெல்லாம் பதாகைகள், கோஷங்கள், சமூகவளைத் தளங்களில் கேவலமான பதிவுகள், பிரச்சாரங்கள் முதலியவை, முகமதியரின் உண்மை முகத்தை வெளிக்காட்டி விட்டது[5]. இருப்பினும், இதைப் பற்றி சந்தோசமகாவே இருப்பதாக தெரிகிறது. ஏனெனில், அப்பாதகை புகைப் படங்களில் போட்டுப் பரப்பிக் கொண்டிருக்கிறர்கள்[6]. எப்படியாவது, அடிப்படைவாதத்தை, உரிமை என்று சொல்லி, பிரச்சினையை உண்டாக்கி, சமூகத்தில் கலவரத்தை உண்டாக்கத்தான் திட்டத்துடன் செயல்படுகின்றனர் என்று தெரிகிறது. இனி ஶ்ரீலங்காவில் குண்டுகள் வெடித்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

Muslims denigrating comments-5

துலுக்கரின் கேவலமான செயல்கள்[7]: தீவகம் என்ற ஶ்ரீலங்கா இணைதளம், இவ்விரங்களைக் கொடுக்கிறது: முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சிலரினால் மிகவும் அருவருக்கத்தக்கதும் மிகவும் கீழ்த்தரமான முறையில் தமிழ் பெண்களை சித்தரித்து பதிவு இடப்பட்டு வருகின்றன. முஸ்லிம் இளைஞர்களின் இந்த கேவலமான செயற்பாடு குறித்து ஒட்டுமொத்த தமிழ் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. கேவலம் கெட்ட சில முஸ்லிம்கள் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளை ஆபாச பொருளாக சித்தரிக்கும் வகையில் புகைப்படங்களை பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பெண் ஆசிரியர்களின் அவயங்களை ஆபாசமாக கோடிட்டு, ஒட்டுமொத்த தமிழ் பெண்களும் கேவலமானவர்கள் என்ற தொணியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கும் ஒருபடி மேல் சென்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவை, மிகவும் கீழ்த்தரமான முறையில் வர்ணித்து தங்கள் கேவலமான சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

Anti-Hindu demo - Kanni 27-04-2018-2

கடந்த வாரம் பாடசாலைக்குள் அத்துமீறி முஸ்லிம் ஆசிரியைகளின் கணவன்மார் மற்றும் சம்பந்தமற்ற சிலர் பாடசாலை அதிபரை எச்சரிக்கை விடுக்கும் தொனியில் நடந்து கொண்டுள்ளனர்.குறித்த பாடசாலையில் ஏற்கனவே மூன்று முஸ்லிம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் பாடசாலைக்குரிய சீருடையுடன் தமது மத விதிகளை மீறாமலும் ஸ்காப் அணிந்து வந்தனர். ஆனால் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியை ஒருவர், தான் அபாயாவுடன் தான் வருவேன் என்று கூறியுள்ளார். பாடசாலை விதியை மீறி வந்தும் உள்ளார். இந்த நிலையில் பாடசாலைக்குள் உட்புகுந்த குறித்த முஸ்லிம் ஆசிரியையின் கணவன் ‘அவா அப்படி தான் வருவார். உங்களால் முடிந்ததை பாருங்கள்’ என அதிபரை மிரட்டியுள்ளார். அத்துடன் ஏனைய முஸ்லிம் ஆசிரியைகளையும் அபாயாவுடன் வர வைப்பேன் என்று பலருடன் சென்று மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[8].

Anti-Hindu propagada, blaming RSS - 28-04-2018-

ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்துத்துவ தீவிரவாத RSS யோகேஸ்வரன் , புலி சாயம் கொண்ட கட்சிகளுக்கும் தொடர்பு[9]: திருகோணமலை ஆசிரியைகளின் ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்துத்துவ தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மட்டக் களப்பு மாராளுமன்ற சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் புலி சாயம் கொண்ட கட்சிகள் உள்ளமை தெரிய வந்துள்ளதாகவும், இது தொடபில் கலந்துரையாட எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தனை அழைத்தால் எம்மை அவமதிக்கும் முறையில் நடஎது கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் குற்றம் சாட்டியுள்ளார்[10]. இவ்வாறு முகமதிய இணைதளங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன. இந்தியர்களைப் ப்றுத்த வரையில் “அபயா” பிரச்சினை தெரிந்திருக்கலாம், ஆனால், நிச்சயமாக, “ஹபாயா” பிரச்சினை தெரியாது. தமிழக மற்றும் தமிழகப் பிரிவினைவாத, கம்யூனிஸ ஊடகக் காரர்களும், இதைப் பற்றி எந்த செய்தியினையும் வெளியிடாமல் இருக்கிறார்கள். இனி “இந்துத்துவ தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் புலி சாயம் கொண்ட கட்சிகள் உள்ளமை,” என்று போட்டு வைத்துள்ளதால், முகமதியர் மற்றும் அவர்களது விசுவாசமான தோழர்கள், இனி செய்தியைப் போட ஆரம்பிக்கலாம்.

© வேதபிரகாஷ்

28-04-2018

Anti-Hindu demo - Kanni 27-04-2018

[1] ஐபிசி.தமிழ், திருமலை பாடசாலை விவகாரம்; பின்னணியில் உள்ளவர்களை கண்டு பிடிக்கவும்!, April 27, 18

[2] https://news.ibctamil.com/ta/internal-affairs/Tirumala-school-affair-

[3] இம்போர்ட்.மிர்ரர், ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி, ஹபாயா அதிர்வு!!  கிண்ணியாவில் கண்டன ஆர்பாட்டம்!!, April 27, 2018.09.06.00 PM.

[4] http://www.importmirror.com/2018/04/blog-post_567.html

[5] நியூஸ்.வன்னி, உச்சத்தை தொட்ட முஸ்லிம் ஆசிரியையின் ஆடை விவகாரம்வெடித்தது போராட்டம், on: April 27, 2018.

[6] https://www.newsvanni.com/archives/60791

[7] தீவகம், தமிழ் பெண்களை கேவலப்படுத்தும் காவாலித்தனமான இளைஞர்களுக்கு எச்சரிக்கை!, on: April 27, 2018

[8]http://www.theevakam.com/2018/04/27/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/

[9] ஜாப்னா.முஸ்லிம், ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்துத்துவ தீவிரவாத RSS யோகேஸ்வரன் , புலி சாயம் கொண்ட கட்சிகளுக்கும் தொடர்பு, 28-04-2018.

[10] http://www.jaffnamuslim.com/2018/04/rss_28.html

ஹபாயா / பர்தா விசயத்தை உண்டாக்கி, பிரச்சினையாக்கி, ஶ்ரீலங்காவில் துலுக்கர் இந்து பெண்களை தூஷிப்பது, ஆபாசமாக சித்தரிப்பது (1)

ஏப்ரல் 28, 2018

ஹபாயா / பர்தா விசயத்தை உண்டாக்கி, பிரச்சினையாக்கி, ஶ்ரீலங்காவில் துலுக்கர் இந்து பெண்களை தூஷிப்பது, ஆபாசமாக சித்தரிப்பது (1)

Sri shanmuga college-purdha enters -in Hindu college

திடீரென்று முகமதிய ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வந்தது:  ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன்னால் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து 26-04-2018 அன்று காலை 7.30மணியவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “அண்மைக் காலமாக முழு ஆடையணிந்த ஐந்து முஸ்லிம் ஆசிரியர்களின் இந்துப் பாடசாலைகளின் வருகையும், அவர்களின் செயற்பாடுகளும் ஒரு சமயப் பாடசாலையின் பாரம்பரியத்தையும் ஒழுங்கு விதிகளையும் குழப்புவதாக உள்ளது[1]. அந்த வகையில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் நடந்து கொண்ட விதம் இந்த பாடசாலை ஒழுக்க விதிகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளதுடன், பாடசாலை சமூகத்தினர் அனைவரையும் வேதனைக்குட்படுத்தியுள்ளது[2]. இது காலவரையில் சேலை அணிந்து வந்த ஆசிரியர்கள் இனி ஹபாயா எனும் முழுச்சட்டையினையே அணிந்து வருவார்கள் என பாடசாலை அதிபரை குறித்த ஆசிரியர்களின் கணவர்மார்கள் மிரட்டியது பாடசாலை நாகரிகத்தையும் சட்டத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. அத்துடன், அதிபரின் பேச்சை அவமதித்து இவர்கள் ஹபாயா அணிந்து பாடசாலைக்கு வருவது ஒட்டுமொத்த நிர்வாகத்தை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது.

 Sri shanmuga college- emphacise no communalism in Hindu college

முகமதிய ஆசிரியைகளின் கணவன்மார் வந்து மிரட்டியது[3]: தொடர்ந்து அவர்கள் கூறியது, “ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் இவ்வாறு நடந்து கொள்வது மாணவர்களுக்கு எவ்வாறு நல்வழிகாட்டலாக அமையும் இப் பிரச்சினையால் மாணவர்கள் மத்தியில் முஸ்லிம் தமிழ் எனும் இன வேறுபாட்டை இவ்வாசிரியர்களால் தூண்டப்படுவது ஆரோக்கியமானது அல்ல. எனவே அத்துமீறி பாடசாலைக்குள் வந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே வருவார்கள் என மிரட்டிய கணவர்மார்கள் மீதும் குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாறு பாடசாலை நிர்வாகத்திற்கு குந்தகம் விளைவித்ததுடன், எமது பாடசாலை விதிமுறைகளுக்கு கட்டுப்படாத ஆசிரியர்கள் உடன் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறு மதக்காரணங்களை காட்டி பாரம்பரிய கலாச்சாரப் பாடசாலைகளுக்கு பொருத்தமில்லாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. ஆரம்ப நிலையில் இப் பிரச்சினையை கண்டுகொள்ளாத திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் ஆகியோரையும் கண்டிக்கின்றோம். இது போன்று தேவையற்ற சம்பவங்கள் எந்தப் பாடசாலைகளிலும் நிகழக்கூடாது,” என குறிப்பிட்டுள்ளனர்[4].

Sri shanmuga college- emphacise no communalism

முகமதியர் ஏதோ ஒரு திட்டத்துடன் இப்பிரச்சினையை ஆரம்பித்துள்ளனர்: ஆக இதிலிருந்து தெரிவதாவது:

  1. இந்து மகளிர் கல்லூரியில், முகமதிய பெண்களுக்கும் பணி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முகமதிய கல்லூரியில் அவ்வாறுள்ளதா என்று தெரியவில்லை.
  2. இதுவரை சேலைக் கட்டிக் கொண்டு வந்திருந்த, முகமதிய ஆசிரியைகள், திடீரென்று ஹபாயா / புர்கா / பர்தா அணிந்து வருவோம் என்று, கல்லூரி அதிபர் / நிர்வாகத்திடம் சொல்லியிருக்கின்றனர்.
  3. ஏனிப்படி திடீரென்று செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு, அது எங்கள் உரிமை, அதனால் செய்யப் போகிறோம் என்று பிடிவாதம் பிடித்தனர்.
  4. மறுத்தபோது, எழுத்து மூலம் ஹபாயா அண்ணிந்து வர அனுமதி கோரினர்.
  5. அதையும் மறுத்தபோது, அவர்களது கணவன்மார் வந்து கத்தி பேசி, மிரட்டியுள்ளனர்.
  6. அதனால், அக்கல்லூரி, “இந்து மகளிர் கல்லூரி” என்பதால், அவ்வாறு செய்ய முடியாது, பிறகு, அவரவர் வேவ்வேறு விதமான ஆடைகளை அணிந்து வர ஆரம்பித்து விடுவார்கள் என்றும் சொல்லியிருக்கின்றனர்.
  7. அந்நிலையில் அவர்களது கணவன்மார் மறுபடியும் வந்த வந்து கத்தி பேசி, திட்டி, “விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என்ற ரீதியில் மிரட்டியுள்ளனர்.
  8. இதனால் தான், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து 26-04-2018 அன்று காலை30மணியவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  9. இதனால், எதிர்மறை விளைவு ஏற்படும் என்றறிந்தவுடன், மதரீயில் பிரச்சாரம் மற்றும் கண்டன ஆர்பாட்ட,ம் என்று முகமதியர் ஆரம்பித்தனர்.

Muslims threaten Sri shanmuga college

இன ரீதியான பாடசாலைகள் தோற்றம் பெற்றதற்கு ஒரு வரலாறு இருக்கிறது[5]: அதற்கேற்றபடி, அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாடசாலைகளில் கிறிஸ்தவம் மதம் முன்னிலைப்படுத்தப்பட்டதால், இந்து மற்றும் பெளத்த மறுமலர்ச்சி இயக்கங்கள் தங்களது சமய விழுமியங்களை காப்பற்றும் நோக்கில் தனியான பாடசாலைகளை அமைத்தன என தெரிவித்துள்ளார்[6]. தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “திருகோணமலையில் தமிழ் பாடசாலையொன்றில் ஆசிரியைகள் அபாயா அணிந்து செல்லமுடியாது என்ற குழப்பத்தை ஒரு குழு ஏற்படுத்தியிருக்கிறது[7]. பாடசாலைகளில் தங்களுடைய கலாசாரம் குறித்த விடயங்களில் ஒரு நெகிழ்வுப் போக்கோடு நடந்துகொள்ளாத நிர்வாகங்களின் மீது, தாக்கம் செலுத்தமுடியாத ஒரு கல்விமுறையின் கீழ்தான் நாங்கள் பயிற்றுவிக்கப்படுகிறோமா என்ற துர்ப்பாக்கிய நிலையையும் நாங்கள் பேசித்தான் ஆகவேண்டும்,” என குறிப்பிட்டுள்ளார்[8]. பிறகு, ஒரு குறிப்பிட்ட கல்லூரியில், அடுத்தவர் எப்படி தங்களுடைய உரிமை என்று பிரச்சினை ஏற்படுத்த முடியும்?

Sri Shanmuga college demo agfainst Muslims - 26-04-2018-

ஹாபாயா அணிந்து வருவேன் என்ற ஆசிரியைகளுக்கு இடமாற்றம் கொடுத்தது: கொழும்பு கல்வி அமைச்சினால் தீர்வு வழங்கப்படும் வரை ஹபாய அணிவதற்கு அனுமதி கோரிய, [ஹபாயா அணிந்தபடி கடமைக்கு செல்லும் ஆசிரியைக்கு[9]], சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்[10]. ஹபாயா விவகாரம் தொடர்பாக வலயக்கல்வி அலுவலகத்தில் 26-04-2018 அன்று நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்[11]. ஒவ்வொரு மதத்துடைய கலாச்சார விழுமியங்களை மதித்து புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்[12]. நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பாடசாலையின் சமய-கலாச்சாரம் பேணப்பட வேண்டும்[13]. ஆசிரியர்கள் பாடசாலைக்குப் பொருத்தமான, பாடசாலையால் தீர்மானிக்கப்பட்ட உடைகளை அணிய வேண்டும் என்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. இதேவேளை இந்த விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள், பெற்றோர் 25-04-2018 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

© வேதபிரகாஷ்

28-04-2018


Sri Shanmuga college

[1] பட்டி.நியூஸ், அதிபருடன் ஆசிரியர்கள், கணவன்மார்கள் முர்ரண்பட்டமையே ஹபாய ;பிரச்சினைக்கு காரணம் இது எந்த ஒரு இனத்திற்கும் எதிரானதல்லஏற்பாட்டாளர்கள், வெள்ளிக்கிழமை, April 27, 2018.

[2] http://www.battinews.com/2018/04/blog-post_839.html

[3] தினப்புயல், திருகோணமலைஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம், April 26, 2018.

[4] http://www.thinappuyalnews.com/archives/152305

[5] குவிக்,நியூஸ்.தமிழ், இன ரீதியான பாடசாலைகள் தோற்றம்பெற்றதற்கு ஒரு வரலாறு இருக்கிறது, April 28, 2018.

[6]  https://www.quicknewstamil.com/2018/04/28/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/

[7]தமிழ்வின், இன ரீதியான பாடசாலைகள் தோற்றம் பெற்றதற்கு ஒரு வரலாறு இருக்கிறது, April 28, 2018.

[8]  http://www.tamilwin.com/community/01/181129?ref=recommended3

[9] பேஜ்.தமிழ், ஶ்ரீ சண்முகா மகளிர் கல்லூரிஹபாயா ஆசிரியைக்கு இடமாற்றம்: பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு!, April 28, 2018.; http://www.pagetamil.com/2661/

[10] குவிக்,நியூஸ்.தமிழ், சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஹபாயா விவகாரம்! முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்!, April 26, 2018

[11]https://www.quicknewstamil.com/2018/04/26/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/

[12] தமிழ்வின், திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் ஹபாயா விவகாரம்: விசேட கலந்துரையாடல், April 26, 2018.

[13] http://www.tamilwin.com/community/01/181016