Posts Tagged ‘கலை நிகழ்ச்சிகள்’

அமிதாப் – வருவார், ஆனால் வரமாட்டார்!

மே 8, 2010

அமிதாப்புக்கு சீமான் நன்றி
புதன், 28 ஏப்ரல் 2010( 15:56 IST )
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1004/28/1100428066_1.htm

இலங்கையில் நடக்கயிருக்கும் விருது வழங்கும் விழா குறித்து மறுப‌ரிசீலனை செய்வதாக தெ‌ரிவித்திருக்கும் அமிதாப்பச்சனுக்கு இயக்குனரும், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் நன்றி தெ‌ரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களை‌க் கொன்று குவித்த பாசிஸ ராஜபக்சேவுக்கு சர்வதேச சமூகம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. அவரை‌ப் போர் குற்றவாளியாக அறிவிக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை நீர்த்துப்போகச் செய்யும் எதிர் நடவடிக்கையில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் கை கோர்த்துள்ளது. இந்திய அரசின் அழுத்தம் காரணமாக சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு தூதராக அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இலங்கை சென்ற அமிதாப் பாசிஸ ராஜபக்சேவை சந்தித்து விழா குறித்து பேசியதுடன் சிங்களர்களை வெகுவாகப் புகழ்ந்து பேட்டியளித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெ‌ரிவிக்கவும், அமிதாப் விருது விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நாம் தமிழர் இயக்கத்தினர் கடந்த ஞாயிறன்று அமிதாப்பின் வீட்டு முன் கறுப்பு‌க் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது வீட்டிலிருந்த அமிதாப் ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்து விவரங்களை‌த் தெ‌ரிந்து கொண்டார். இதுகுறித்து தனது ப்ளாக்கில் எழுதியிருக்கும் அமிதாப், தமிழர்களின் சென்டிமெண்‌ட்டை தான் மதிப்பதாகவும், விருது விழா நடத்துகிறவர்களிடம் இது குறித்து பேசயிருப்பதாகவும், விருது விழா குறித்த முடிவை மறு ப‌ரிசீலனை செய்யவிருப்பதாகவும் தெ‌ரிவித்துள்ளார்.

அமிதாப்பச்சனின் இந்த முடிவுக்கு சீமான் நன்றி தெ‌ரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட மற்ற பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த விழாவை புறக்கணிக்க வேண்டும் என தனது அறிக்கையில் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமிதாப்-ஷாரூக் வருகையை யாராலும் தடுக்க முடியாது!: இலங்கை

வெள்ளிக்கிழமை, மே 7, 2010, 13:59[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/05/07/iifa-colombo-srilanka-amitabh-bachchan-sharukh.html

இலங்கையில் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் திட்டமிட்டபடி பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள், அதை யாராலும் தடுக்க முடியாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது. கொழும்பில் வரும் ஜூன் 3 முதல் 5 வரை நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விருது வழங்கும் விழாவில், பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட குழுவினர் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை என அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

சர்வதேச இந்திய திரைப்பட அகடமியின் விருது வழங்கும் விழா குறித்து இலங்கை அரசு நேற்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இத்தகவலை உறுதியாகத் தெரிவித்தார். “அமிதாப், ஷாரூக்கான் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்க மாட்டார்கள் என்று சிலர் கூறி வருகிறார்கள். அவர்களைப் பங்கேற்க விடாமல் செய்ய சிலர் முயற்சித்தும் வருகிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் மீறி, அமிதாப்பும் ஷாரூக்கானும் பங்கேறபார்கள்” என்றார் லக்ஷ்மண் யாப்பா. இலங்கை இப்போது முன்னேற்றப் பாதையில் வெற்றி நடை போடுவதாகவும், இந்தத் தருணத்தில் இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் இலங்கையில் நடப்பது, நாட்டின் முகத்தையே மாற்றி அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.