Posts Tagged ‘இலங்கை விடுதலைப் புலிகள்’

சுதர்ஸன் மற்றும் சூஸன்னா அருந்ததி ராய்: இந்தியாவா, சோனியா மெய்னோவா காங்கிறஸுக்கு எது வேண்டும்?

நவம்பர் 13, 2010

சுதர்ஸன் மற்றும் சூஸன்னா அருந்ததி ராய்: இந்தியாவா, சோனியா மெய்னோவா காங்கிறஸுக்கு எது வேண்டும்?

அருந்ததி ராயைப்போல, இவர் மீதும் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன[1]: இப்பொழுதுள்ள காங்கிரஸ்காரர்களுக்கு இந்தியாவைவிட, சோனியா மெய்னோ தான் பெரியது என்று மறுபடியும் அப்பட்டமாக மெய்ப்பித்து விட்டனர். முன்பு சோனியாவின் கால்களை காங்கிரஸார் நக்குவது மாதிரி கார்ட்டூன் போட்டபோது, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் கூட கட்காரி முலாயம், லல்லு போன்றோர், சோனியாவின் கால்களை நக்கும் நாய்கள் போல செயல்படுகின்றனர் என்று கமண்ட் அடித்தார். இப்பொழுது சுதர்ஸனன் கூறியதற்கு போலீசிடம் புகார் செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டுள்ளது (The case was filed under section 153 (B), and 505 and 500 of IPC) இதில் வேடிக்கையென்னவென்றால், சூஸன்னா  பேச்சிற்கு ஆதரவு தெரிவித்த அமைதியாக இருந்த ஜம்மு-காங்கிரஸார், இதற்கு மட்டும் தெருக்களில் போராட வந்துவிட்டனர்[2]. சொஹைப் லோன் முதலியோர் போராட்டத்தில் பங்கு கொண்டுள்ளனர்.

சுதர்ஸனன் அப்படியென்ன சொல்லிவிட்டார்? ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் சுதர்சனம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வின் ஏஜெண்டு என்றும் இந்திரா காந்தி- ராஜீவ்காந்தி கொலை சதியில் சோனியாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் 10-11-2010 அன்று கூறினார்[3] [While interacting with the media K S Sudarshan,the former Sarsanghchalak of RSS called Sonia Gandhi an American CIA agent and accused her of plotting assassinations of former prime minister Rajiv Gandhi and his mother Indira Gandhi ].

சோனியாவைப் பற்றி சந்தேகங்கள் எழுந்ததால், சோனியாவை விட்டுப் பிரிந்திருக்கக் கூட ராஜிவ் நினைத்தார் [ Sudarshan claimed that Rajiv Gandhi had some doubts about Sonia  and he was thinking of separation].

ராஜிவ் கொலை செய்யப்பட்டதற்கு அவர்தாம் காரணம் என்று கூறி, “ஏன் Z plus பாதுகாப்பு நீக்கப்பட்டது…………..உண்மையை அறிய ஏன் விசாரணை நடத்தப்படவில்லை”, என்று கேள்விகள் எழுப்பினார் [While holding her responsible for the killing of her husband,  RSS chief K S Sudarshan asked why the  Z plus security was not provided to him. He further asked why the probe is not being done to find out the truth].

சோனியா 1944ல் பிறந்தபோது, அவரின் தந்தை சிறையில் இருந்தார். ஆனால் சோனியா தான் ;பிறந்த வருடம் 1946 என்று திருத்திக் கொண்டார்.

இந்த விஷயங்களையெல்லாம் தனக்கு ஒரு காங்கிரஸ்காரரே கூறியதாகவும், ஆனால், அவரது பெரைச் சொல முடியாது என்று சில்லிவிட்டார் [He said that Sonia’s father was in jail at the time of her birth in 1944  and she misinterpreted her  date of birth  as 1946. He claims that all these reveleations has been done by a congressman and he refused to divulge the name of the congressman[4]].

சோனியா மெய்னோவின் வாழ்க்கை சர்ச்சைக்குரியதுதான்; ஃபெரன்ட்லைன் இதழ்களில் பலதடவை சோனியா மெய்னோவின் கிருத்துவ தொடர்பு, இத்தாலிய மூலங்கள் முதலியவை விளக்கப்பட்டுள்ளன[5], சுப்ரமணியசுவாமியின் இணைதளத்திலும் இவ்விஷயங்களை காணலாம்:

Do You Know Your Sonia? – by Dr. Subramanian Swamy

http://www.janataparty.org/soniainindia.html

http://www.janataparty.org/threelies.html

http://www.janataparty.org/kgb_sonia.html

http://www.janataparty.org/lawsofindia.html

http://www.janataparty.org/soniaisthemodern.html

சென்ற ஜூன் மாதம் கூட சோனியாவைப் பற்றி ஒரு புத்தகம் வெளிவருகின்ற வேளையில், காங்கிரஸ்காரர்கள் இப்படி கலாட்டா செய்தனர்[6]. சோனியாவின் அந்நிய குடிமகள், இந்தியக்குடிமகள், ஓட்டுரிமை, தேர்தலில் நிற்பது, பிரதமர் ஆவது, முதலிய பிரச்சினைகளைப் பற்றி, பலர் வழக்குகள் தொடர்ந்த போது, இவ்விஷயங்கள் வெளிவந்துள்ளன. அவ்வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ராஜிவ் இறந்த பிறகு, சோனியா இத்தாலிக்குச் சென்றுவிட தீர்மானித்தாரா? சோனியா இந்தியாவை விட்டு, இத்தாலிக்குச் சென்றுவிட தீர்மானித்தது குறித்து காங்கிரஸ்காரர்கள் கோபம் கொண்டது குறித்து, மோரோ குறிப்பிடுவதாவது, “இதைப் பற்றி இத்தாலிய நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. தன்னுடைய கணவன் இறந்தவுடன், அவளது தாயார், “எப்பொழுது இங்கு வருகிறாய்”, என்று கேட்டது, அப்படியொன்றும் யாருக்கும் புரியாதது அல்ல, அதற்கு ஒன்றும் பெரிய இலக்கிய நுண்ணறிவுத் தேவையில்லை“.

Javier Moro defended his claim that she had wanted to leave India. “There were articles in the Italian papers. After her husband died, her mother called, and it’s logical that she asked ‘when are you coming home’. It’s not far-fetched it’s a literary licence,” he said.

இவ்விஷயம், பொதுவாக எல்லோருக்கும் தெரிந்தது தான், ஆனால், சோனியா மனதை மாற்றிக்கொண்டு, அரசியலில் தீவிரமாக இறங்கியபோதுதான், அவரது மறைமுக திட்டங்கள் இருப்பது தெரியவந்தன. பிரியங்கா நளினியை ரகசியமாக சந்தித்துப் பேசியது முதலிய விவகாரங்கள் அவற்றை எடுத்துக்காட்டத்தான் செய்கின்றன.

ராஜிவ் காந்தி கொலைக்கு அன்னிய தொடர்பு உள்ளதா, சோனியா சி.ஐ.ஏவின் ஏஜென்டா? இத்தகைய விவாதம் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. பொதுவாக எல்.டி.டி.இ.யினர் இத்தகைய குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இப்பொழுதும் பல இணைத்தளங்களில் காணலாம். எல்.டி.டி.இ.யினர் கைது செய்யப்பட்டு, பெங்களூர் ரங்கநாதன் போன்றோர் விடுதலையானபோது கூட பேசப்பட்டது[7]. தேசிய நாளிதழ்களில், சஞ்சிகைகளில் மிகவும் பரவலாக எழுதப்பட்ட விஷயமும் கூட[8]. ஜெயின் கமிஷன் அறிக்கை விவாதத்தின்போதும் இவ்விஷயம் பேசப்பட்டது[9]. சந்திரசாமியை பலமுறை சி.ஐ.ஏ, மொஸ்ஸாத் போன்ற உளவ்ய் நிறுவனங்களுடன் தொடர்பு படுத்தி பேசப்பட்டது[10]. பல புத்தகங்களிலும் விவரங்கள் வெளியிடப்பட்டன[11]. எல்லாவற்றையும் விட, பார்லிமென்டிலேயே, இதைப் பற்றிய விவாதம் ஏற்பட்டுள்ளது[12]. குட்ரோச்சியை முழுவதுமாக விடிவிக்க சோனியா மெய்னோவின் உதவி சந்தேகிக்கப்பட்டது[13], அதாவது, சி.பி.ஐ, ஏனோ-தானோ என்று வேலை செய்து 2009ல் தப்பிக்கவிட்டது[14]. பிறகு, அது மறக்கடிக்கப்பட்ட விஷயமாகி விட்டது. ஆனால், இப்பொழுது முன்னால் ஆர்.எஸ்.எஸ் தலைவர் “சோனியா சி.ஐ.ஏவின் ஏஜென்ட்”. என்று சொன்னதாக செய்தி வந்துள்ள நிலையில், மறுபடிடயும் அது விவகாரமாகியுள்ளது.

சோனியாவை விமர்சித்த சுதர்சனுக்கு காங்கிரஸ் கண்டனம்[15]: காங்கிரஸ் தலைவர் சோனியாவை, ஆர்.எஸ். எஸ்., முன்னாள் தலைவர் சுதர்சன் விமர்சித்ததற்கு, காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மத்திய பிரதேச மாநிலம் போபாலில், செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் பேசிய ஆர்.எஸ்.எஸ்., முன்னாள் தலைவர் சுதர்சன், காங்கிரஸ் தலைவர் சோனியாவை கடுமையாக விமர்சித்தார். அவரை, அமெரிக்க புலனாய்வு அமைப்பின் (சி.ஐ.ஏ.,) ஏஜன்ட் என்றும் கூறியிருந்தார். இந்த விவகாரம், காங்கிரசில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறுகையில், “காங்கிரஸ் தலைவர் சோனியா, மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறார். தனக்கு கிடைத்த பிரதமர் பதவியையே உதறியவர் அவர். அவரை குறுகிய மனப்பான்மையுடன் சுதர்சன் விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது’ என்றார்.

நேரு குடும்பத்தினர், நாட்டுக்காக பெரும் தியாகம் செய்துள்ளனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது: நேரு குடும்பத்தினர், நாட்டுக்காக பெரும் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகம் பற்றி நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரை, சுதர்சன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.தனக்கு ஏற்பட்ட ஆபத்தை பொருட்படுத்தாமல், காங்கிரஸ் கட்சியினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அரசியலுக்கு வந்தவர் சோனியா. சுதர்சனின் விமர்சனத்தை, நான் மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாட்டு மக்களுமே கண்டிக்கின்றனர்.இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.

ஆந்திராவில் ரோசையாவே 144வையும் மீறி போராட்டம் நடத்தினாராம்[16]! ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பஷீரா பாத்தில் முதல்வர் ரோசையா, மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ், மந்திரி தானம் நாகேந்திரன் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் சுதர்சனம் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணி வித்தனர். பஷீராபாத் பகுதியில் அடிக்கடி கலவரம் நடந்து வந்ததால் அங்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதையும் மீறி காங்கிரசார் அங்கு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று மந்திரி தானம் நாகேந்திரன் மற்றும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்தனர். முதல்வர் ரோசையா, மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாசை போலீசார் கைது செய்யவில்லை.

ரோசையாவை மட்டும் கைது செய்யாதது ஏன்? சந்திரபாபுநாயுடு, வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு சந்திரபாபுநாயுடு, வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சந்திரபாபு நாயுடு கூறும் போது, 144 தடை உத்தரவு அமலில் உள்ள பகுதிக்குள் போராட்டம் நடத்தக் கூடாது இதை மீறி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் முதல்வர் ரோசையாவை மட்டும் கைது செய்யாதது ஏன்? ரோசையா தனது பதவி வெறி காரணமாக சோனியாவுக்கு தனது விசுவாசத்தை காட்டுவதற்காக போராட்டம் நடத்தி உள்ளார். ஒரு மாநிலத்தில் முதல்வரே போராட்டம் நடத்துவது கேவலம். அவர் தனது பதவிக்குரிய மரியாதையை கெடுத்துவிட்டார். காங்கிரஸ் தொண்டர்களைப் போல ரோசையாவையும் கைது செய்ய வேண்டும் போலீசார் பாரபட்சத்துடன் செயல் படுகிறார்கள். ஆந்திராவில் அரசாங்கம் இருக்கிறதா? அது செயல் படுகிறதா என்பதே கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. சமீபகாலமாக ரோசையா தனது பதவி போய்விடுமோ என்ற பயத்தில் விசுவாசத்தை காட்டுவதற்காக போராட்டத்தில் குதித்துள்ளார். இதன் மூலம் அவர் முதல்வர் பதவியை களங்கப்படுத்தி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

வேதபிரகாஷ்

© 13-11-2010


[3] Former Rashtriya Swayamsevak Sangh chief K S Sudarshan on Wednesday called Congress President Sonia Gandhi a CIA agent and accused her of plotting assassinations of her husband and former Prime Minister Rajiv Gandhi and his mother Indira Gandhi.

http://www.ndchronicle.com/news/Former_RSS_chief_calls_Sonia_CIA_agent__accuses_her_of_plotting_Rajivs_assassination_1289541760/

[5] Vaiju Naravane, In Maino country: In pursuit of the Italian connection, a trip to a tiny, dusty industrial town on the suburbs of Torino where Sonia Gandhi grew up, VAIJU NARAVANE was
recently in Orbassano,

http://www.hinduonnet.com/fline/fl1509/15090140.htm

http://www.scribd.com/doc/13746840/Edvige-Antonia-Albina-Maino-Alias-Sonia-Gandhi

[6] வேதபிரகாஷ், சோனியாவைப் பற்றிய புத்தகம்: தடை ஏன்?, http://secularsim.wordpress.com/2010/06/03/why-ban-book-on-sonia-maino/

[8] “CIA seems to have a track record of destabilising governments while indulging in assassination plots.”……………………. “…there were moves to remove Rajiv and the hand of Chandraswami has been established.”

http://www.outlookindia.com/article.aspx?205868

http://www.asiantribune.com/index.php?q=node/5839

[9]A letter to J.N. Dixit, foreign secretary during P.V. Narasimha Rao’s time, for example, seeks information on any material the Ministry of External Affairs (MEA) may have “duly supported by an affidavit” on reports that the Israeli secret service Mossad and the CIA “could have been instrumental in the assassination of Shri Rajiv Gandhi”.

http://www.india-today.com/itoday/08121997/cov14.html

[10] On page 205 of Volume II, Justice Jain has pointed to evidence provided by former Cabinet Secretary Zafar Saifullah on Chandraswami’s links. “The statement of Shri Zafar Saifullah shows links of Shri Chandra- swami with CIA (Central Intelligence Agency) and Mossad and there were some intercepts relating to Shri Chandraswami emanated from Israeli Intelligence Agency MOSSAD (sic.),” Justice Jain found. “This circumstance which has come in the deposition of Shri Zafar Saifullah is of great significance as he has deposed on the basis of knowledge gained by him while functioning as Cabinet Secretary and while interacting with the authorities in the concerned intelligence agency.” Saifullah had said that while he had not seen the intercepts, officials had told him of their existence and of Chandraswami’s links with major international intelligence agencies.

http://www.hinduonnet.com/fline/fl1517/15170290.htm

[11] D. R. Kaarthikenyan, Radhavinod Raju, Radhavinod Raju, Rajiv Gandhi Assassination, Sterling Publications P. Ltd., New Delhi, 2004, p.34.

[12] Parliamentary debates: official report: Volume 159, Issues 17-19

Ramesh Dalal, Rajiv Gandhi’s assassination:  the mystery unfolds, UBSPD, 2001, p.156,163.

[14] Ottavio Quattrocchi is an Italian businessman who was being sought until early 2009 in India for criminal charges for acting as a conduit for bribes in the Bofors scandal. Quattrocchi’s role in this scandal, and his proximity to Indian prime minister Rajiv Gandhi through his Italian wife Sonia Gandhi (Antonia Maino), is thought to have contributed to the defeat of the Congress Party in the 1989 elections. Ten years later (1999), the Central Bureau of Investigation (CBI) named Quattrocchi in a chargesheet as the conduit for the Bofors bribe. The case against him was strengthened in June 2003, when Interpol revealed two bank accounts, 5A5151516M and 5A5151516L, held by Quattrocchi and his wife Maria with the BSI AG bank, London, containing Euros 3 million and $1 million, a “curiously large savings for a salaried executive”. In January 2006, these frozen bank accounts were unexpectedly released by India’s law ministry, apparently without the consent of the CBI which had asked for them to be frozen. On 6 February 2007, Ottavio Quattrocchi was detained in Argentina on the basis of the Interpol warrant. The Indian investigating agency CBI came under attack for putting up a half-hearted effort towards his extradition and India lost the case for his extradition in June 2007, the judge remarking that “India did not even present proper legal documents”. Embarrassingly, India was asked to pay Ottavio’s legal expenses. He was present in India at the time of his father’s Argentina arrest in February 2007, and there is speculation that he may have met Priyanka Vadra around that time.

[15] தினமலர், சோனியாவை விமர்சித்த சுதர்சனுக்கு கண்டனம், நவம்பர் 11, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=124540

[16] மாலைமலர், சோனியா பற்றி விமர்சித்த ஆர்.எஸ். எஸ். தலைவரை கண்டித்து ஆந்திர காங்கிரசார் போராட்டம்; மந்திரி உள்பட 1000 பேர் கைது , சனிக்கிழமை, நவம்பர் 13, 2010

http://www.maalaimalar.com/2010/11/13120934/minister-combat-1000-man-arres.html

தமிழகம் மூலம் போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம் குறைந்துள்ளதா?

ஓகஸ்ட் 29, 2010

தமிழகம் மூலம் போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம் குறைந்துள்ளதா?

தீவிரவாதம் போதைமருந்து, ஆயுத சப்ளை: ஜேன்ஸ் பாதுகாப்பு வாரப்பத்திரிக்கை என்பதன்படி எல்.டி.டி.ஈ.யின் போதை மருந்து கடத்தல் வியாபாரம், அமெரிக்கா மற்று கனடா நாடுகளில் அதிக அளவில் இருப்பதாகக் கூறுகிறது[1]. இது எல்.டி.டி.ஈ.யிற்கு, ஆண்டிற்கு  USD 200-300 million வருவாயைக் கொடுக்கிறது. இது வெடிகுண்டுகள், ஆயுதங்கள் முதலியவற்றை வாங்க உபயோகப்பட்டது[2]. இதைத்தவிர, அமெரிக்காவின் போதை மருந்து கட்டுப்பாட்டகம், 1980களினின்றே இது தனது உள்நாட்டு கலகம் / போர் முதலிய காரியங்களுக்குத் தேவையான பணத்தை போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம் மூலம் பெற்றுவருகிறது என்று கூறியுள்ளது[3]. உலகத்திலேயே ஆப்கானிஸ்தானில்தான் 70% மேலான போதை மருந்துக்கு வேண்டிய பொருட்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. அவை இந்தியாவின் மூலம், அதன் மூலமாக மற்ற நாடுகளுக்குச் செல்கின்றது. சென்ற வருடத்தில் அதன் வீழ்ச்சிற்குப் பிறகு, இது குறையிம் என்று எதிர்பார்க்கப்பட்டது[4]. இலங்கையில் விடுதலைப் புலிகளின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, சென்னை வழியாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு நடத்தப்பட்டு வந்த போதை பொருள் கடத்தல் குறைந்து வருகிறது, என்று கருதினாலும், அது கேடமைன் மற்றும் இதர வடிவங்களில் செல்ல ஆரம்பித்துள்ளன[5].

எல்டி.டி.ஈ – ஆப்கானிஸ்தான் தொடர்பு: சர்வதேச அளவில், ஆப்கானிஸ்தானில் தான் அதிகமான அளவில் போதை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை, பல்வேறு வழிகளில் கடத்தப்பட்டு, உலக நாடுகளில் செயல்படும் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கி, பணமாகின்றன. இந்த பணத்தை கொண்டு, பயங்கரவாத கும்பல்கள் அவ்வப்போது வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்து சென்னை வழியாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்பட்டு வந்தன.  இதில் தமிழகத்தில் இருந்த ச்லருக்கும் தொடர்பும் இருந்தது.

குறைந்தது சென்னை வழியாக போதை பொருள் கடத்தல்[6]: இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததையடுத்து, சென்னை வழியான போதை மருந்து கடத்தல் குறைந்துள்ளது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இலங்கையில் 2008ம் ஆண்டு மத்தியில் உச்சக்கட்ட உள்நாட்டு போர் நடந்தது. வாழ்வா, சாவா என்ற முடிவோடு புலிகள் இலங்கை ராணுவத்தை எதிர்கொண்டனர். இந்த கால கட்டத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து சென்னை விமான நிலையம் வழியாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அதிகமான அளவில் போதை பொருட்கள் கடத்தப்பட்டன. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்,  மலேசியாவிற்கு செல்ல இருந்த சிவகங்கையைச் சேர்ந்த மாசிலாமணி (42) என்ற பயணியிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் கேடமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரும்பாலும் ஸ்ரீலங்கையைச் சேர்ந்த ஆசாமிகள் சிக்குகின்றனர்: சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பரியல் ரியானோ (29) என்ற பெண்ணிடம் இருந்து மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று  கிலோ ஹெராயின் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2008, ஆகஸ்ட் மாதத்தில் யாழ்பாணத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (35) என்பவரிடம் இருந்து  ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு 2008ம் ஆண்டு முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கை உள்நாட்டு போர் 2009ம் ஆண்டு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. இப்போரில், விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டார். இதையடுத்து, புலிகளின் சாம்ராஜ்யம் அங்கு முடிந்தது. சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து சென்னை வழியாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு நடந்து வந்த போதை பொருள் கடத்தல் குறைந்துள்ளது.

தமிழகத்தில் குறைந்தால், கேரளாவில் அதிகமாகிறது: அத்தகைய போக்கை 2005லேயே, அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள்[7]. இதனால், எல்.டி.டி.ஈ.யினர் தமக்கு தமிழகத்தில் உள்ள வெளிப்படையான மற்றும் மறைமுகமான ஆதரவு கூட்டங்களை பாதிக்க எல்.டி.டி.ஈ.யினர் விரும்பவில்லை. குறிப்பாக, தமிழகக் கூட்டணி ஆட்சியில், திமுக எல்.டி.டி.ஈ.யினரை ஆதரிக்கவேண்டியிருந்தது, ஆனால், காங்கிரஸ் எதிர்க்கவேண்டியிருந்தது. அதுமட்டுமலாது, கேரள தொடர்பு, முஸ்லீம்களை கூட்டில் சேர்த்துக் கொள்ள ஏதுவாயிற்று. ஆனால், ஸ்ரீலங்கா அரசு பாகிஸ்தானிடம் ஆயுதங்களை வாங்க ஆரம்பித்து விட்டது.

இந்திய போதைக் கட்டுப்பாட்டுத் துறை சிறப்பாகச் செயல்படுவது: தேசிய போதைமருந்து தடுப்பகம் மற்றும் சென்னை விமான நிகையத்தைச் சேர்ந்த சுங்க அதிகாரிகல் பலதடவை போதை மருந்து கடத்தல்காரர்ககளை கையும் களவுமாகப் புடித்துள்ளனர். இது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவரை கேட்டபோது, “சென்னை வழியாக போதை பொருட்கள் கடத்துவது குறைந்துள்ளதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. கஸ்டம்ஸ் அதிகாரிகளின் கெடுபிடிகளால் கடத்தல் கும்பல், தங்களின் கடத்தலை சென்னையை தவிர்த்து, வேறு விமான நிலையங்களின் வழியாக நடத்திக் கொண்டிருக்கலாம். ஒரு சில ஆசிய நாடுகளில்  பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் குறைந்துள்ளதாலும் கடத்தல் குறைந்திருக்க வாய்ப்புண்டு’ என்றார். அவர்கள் முறைந்துள்ளது என்றுதான் சொல்கிறார்களே தவிர, இல்லை என்று சொல்லவில்லை. சமீபத்தில் தமிழகத்தில் நடக்கும் சில நிகழ்ச்சிகள், அவர்களது இருக்கும் தன்மையினைப் புலப்படுத்துகிறது[8].

தமிழகத்தில் எல்.டி.டி.ஈ.யின் வாரிசு / அதிகாரச் சண்டை நடக்கிறதா? எல்.டி.டி.ஈ.யின் வாரிசு சண்டை தமிழக அரசியல் கட்சிகள், பெரிய புள்ளிகள் மற்றும் சித்தாந்தவாதிகளிடம் அதிகமாகவே வெளிப்படுகிறது. முன்பு, ஒரு நபரால் கட்டுக்கோப்பாக வைத்திருந்தது, சிதறிவிட்டது போல இருக்கிறது. எல்.டி.டி.ஈ.யின் பங்கு போதை மருந்து கடத்தல், விநியோகம் மற்றும் வியாபாரம், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் வாங்கல்-விற்றல், தமிழ்த் திரைப்பட விநியோகம், திருட்டு சிடி-விசிடி, குறிப்பிட்ட மின்னணு உதிரிகள் என பல விஷயங்களில் இருந்தது, இன்றும் இருக்கிறது. ஆனால், அதிகாரப் பிரயோகம், அதிகாரப் பகிர்வு முதலியன யாரிடம் இருப்பது என்பது பற்றிதான் சண்டை-சச்சரவு நடந்து கொண்டிருக்கிறது. இதில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள், ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டிலும் இல்லது கனடா-பாரிஸ்-அமெரிக்காவில் இருப்பவர்கள் என்று மூன்று குழுக்களாக செயல்படுகின்றனர்[9]. திரைத்துறை, அரசியல் முதலிய பகிர்வு போராட்டங்கள் வைகோ, நெடுமாறன், செபாஸ்டியன் சீமான்[10], ஜெகத் காஸ்பர்…………என்று பலநேரங்களில் வெளிப்படும். கடந்த குறுகிய காலத்தில், நிறைய அளவு பணம் திரைப்படம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள் முதலியவற்றில் முததலீடு செய்யப்படுகிறது. அந்நிலையில், குறிப்பிட்ட தனிநபர்கள், குழுமங்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் குவியும் போது, நிச்சயமாக சண்டை வரத்தான் செய்கிறது. அதுமட்டுமல்லாது மத்தியில் மற்றும் மாநிலத்தில் தனித்தனி கூட்டணிக் கட்சியினருக்கு, பெரும்பாலான பணம் செல்லும்போதும் மற்றவர்களுக்கு கடுப்பாகிறது.


[1] Citing Royal Canadian Mounted Police sources the Jane’s Intelligence Review said the Liberation Tigers of Tamil Eelam (LTTE) controls portion of US Dollar one billion drug market in the Canadian city of Montreal.

[2] The Jane’s Intelligence Review said that one of the main ways of earning money out of its USD 200-300 million annual income of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) is narcotics smuggling using its merchant ships, which also transports illicit arms and explosives which they procure all over the world for a separatist insurgency in the Indian Ocean island of Sri Lanka.

[3] Steven W. Casteel, Narco-Terrorism: International Drug Traffickingand Terrorism – a Dangerous Mix, Statement of Steven W. Casteel Assistant Administrator for Intelligence Before theSenate Committee on the Judiciary May 20, 2003; http://www.justice.gov/dea/pubs/cngrtest/ct052003.html

[4] Kartikeya, LTTE fall will alter drug trade in India, TOI, May 30, 2009, Read more: ‘LTTE fall will alter drug trade in India’ – Mumbai – City – The Times of India http://timesofindia.indiatimes.com/city/mumbai/LTTE-fall-will-alter-drug-trade-in-India/articleshow/4595554.cms#ixzz0xzdLhzpw

http://timesofindia.indiatimes.com/city/mumbai/LTTE-fall-will-alter-drug-trade-in-India/articleshow/4595554.cms

[5] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=59432;

ஆகஸ்ட் 29,2010 சென்னை புளியந்தோப்பு பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 20 கிலோ மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட போதைப் பொருள் ஹெராயின் வகையைச் சேர்ந்ததா என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. போதைப் பொருள் குறித்து போதைப் பொருள் கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=72853

[6] தினமலர், குறைந்தது சென்னை வழியாக போதை பொருள் கடத்தல், ஆகஸ்ட் 29, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=72601

[7] Heroin smugglers avoid Tamil Nadu, prefer Kerala as landing point (April 3, 2005)

By K.T. Sangameswaran ; CHENNAI, APRIL 2. Smugglers of heroin, meant for Sri Lanka, are now choosing Kerala as the landing point, going by the haul made by the Narcotics Control Bureau (NCB) in the last one year. The smugglers seem to avoid Tamil Nadu and even if their crossing the State is inevitable, they ensure that their exposure is minimal, say narcotics control authorities.

“Avoid Tamil Nadu to the extent possible for landings and transit of the drugs. Don’t be in the State for long.” This seems to be the instruction of the druglords to their operators, Shankar Jiwal, NCB’s south zonal Director, told The Hindu .

http://www.hindu.com/2005/04/03/stories/2005040306420400.htm

[8] Editor, Asian Tribune, LTTE down, but not out; Tamil Diaspora keeps them alive , Mon, 2010-06-21

http://www.asiantribune.com/news/2010/06/21/ltte-down-not-out-tamil-diaspora-keeps-them-alive

[9] http://www.eurasiareview.com/201006143193/sri-lanka-ltte-diaspora-wars-south-asia-intelligence-review.html

[10] செபாஸ்டியன் சீமான், ஜகத் காஸ்பரை இந்தியாவின் ஒற்றன் என்றெல்லாம் சொல்வதும், ஏதோ பெரிய விடுதலைப் போராளி போல நடந்து கொள்வதும், அதேபோல ஜகத் காஸ்பர் வெளிப்படையாக எல்.டி.டி.ஈ.யினரை ஆதரித்து பேசுவது-எழுதுவது சென்று செய்தாலும், கண்டு கொள்ளாமல் இருப்பது, முதலியவை தமிழகத்தில் வேடிக்கையான விஷயங்களே.

இந்திய-ஸ்ரீஇலங்கை பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கை, விளைவுகள் – 2010

ஜூன் 13, 2010

இந்திய-ஸ்ரீஇலங்கை பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கை, விளைவுகள் – 2010

1991லிருந்து தொடர்ந்து வரும் இந்திய-ஸ்ரீஇலங்கை நாடுகளின் இருதரப்பு பேச்சுவார்த்தைகள்: இருநாடுகளும் 1991லிருந்து அமோகமாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனவாம்[1], அவை நன்றாகவும், உருப்படியாகவும் இருந்தனவாம். இந்தியா இத்தகைய நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, இந்த இருதரப்பு நல்லுறவை மேன்மைபடுத்தி, பலபடுத்த வேண்டுமாம். உயர்ந்துவரும் இந்தியா, இலங்கையின்மீது எந்தவிதமான சரத்துகளையும் திணிக்காமல் / முட்டுக்கட்டைகள் போடாமல், இலங்கைத் தமிழர்களுடைய துன்பங்கள் குறிப்பிட்ட வரைமுறைகளில் செயல்பட்டு மேன்பட, இலங்கை தலைமையினை உற்சாகப்படுத்தவேண்டுமாம். ஆமாம், இதெல்லாம் 12-06-2010 அன்றைய “தி ஹிந்து” நாளிதழின் தலையங்கத்தின் சாராம்சமாகும்[2]. பிறகு ஏன் இவ்வாறெல்லாம் நடந்திருக்க வேண்டும் என்பது புரியவில்லை. தி ஹிந்து நளிதழும், ஏதோ பொடி வைத்து எழுதியுள்ளதா, நடந்ததை நியாயப்படுத்தியுள்ளதா, இல்லை நடந்தது நடந்து விட்டது, இனிமேலாகிலும் நல்லதை எதிர்பார்த்து பயனிப்போம் என்ற முறையில் சொல்லப்பட்டதா ஏன்று நோக்கவேண்டியுள்ளது. ஏனெனில், அத்தகைய அமோகமான பேச்சு வார்த்தைகள் நடந்திருந்தால், இம்மாதிரியாக மக்கள் உயிரிழந்திருக்க வேண்டாம், வீடுகளை-உடமைகளை அழிவிற்குட்படுத்தியிருக்கவேண்டாம்……………….

DMK-Rajapakshe-Kanimozhi

DMK-Rajapakshe-Kanimozhi

திராவிட கட்சிகளின் போலித்தனம், இரட்டைவேடம், துரோகத்தனம்: ஸ்ரீலங்காப் பிரச்சினையில் திராவிட கட்சிகளின் போலித்தனம், இரட்டைவேடம்[3], துரோகத்தனம், முதலியன நாளுக்கு நாள் அளவுகடந்து, பொறுமையின் எல்லைகளைத்தாண்டி கேவலமாக, விரசமாகிக்கொண்டு வருகின்றன[4]. ஆனால், அதில் சம்பந்தப்பட்ட திராவிட எம்.பிக்கள், அமைச்சர்கள், முதல் மந்திரி, பிரதம மந்திரி, பின்னின்று ஆட்டிவைக்கும் சூத்திரதாரி, இத்தாலி சோனியா முதலியோருக்கு எந்தவிதமான வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. டில்லியில் மஹிந்தரபக்ஷேவுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவது (09-06-2010), சென்னையில் கொடும்பாவி எரிப்பது என்ற விதத்தில் தான் அவர்களின் வீரத்தின் தன்மை உள்ளது. வெறும் வெட்டிப்பேச்சுகள், போலித்தனமான எழுத்துகள், என்றுதான் உள்ளன[5]. இத்தகைய முரண்பாடுகள் முதலியவற்றை எடுத்துக் காட்டினால், மற்றவர்களை மிரட்டுவது என்ற நிலை வருகிறது. தமிழர்களின் துரோகி என்று ஏசுதல், வசவாடுதல், அவதூறு பேசுவது என்ற ரீதியில் மாறுகிறது. இத்தகைய எழுத்து-பேச்சுத் தீவிரவாதங்களுடன் தான், திராவிட-தமிழ்-சித்தாந்தி மறவர்களும் காலத்தைக் கழித்து வருகின்றனர்.

Raja-kani-Tamil-MPs

Raja-kani-Tamil-MPs

முன்பு கொழும்புவில் எப்படி எம்பிக்கள் சென்று பேச்சு வார்த்தைகள் நடத்தினரோ, அதே ரீதியில் தான், இப்பொழுதும் நடத்தியுள்ளதாக உள்ளது. “தமிழர் பிரச்சினை” என்பதனால் காங்கிரஸ் சாமர்த்தியமாக, அவர்களை வைத்தே முடிவுக்கு வரும் அளவில் தள்ளியுள்ளது[6]. நாளைக்கு பிரச்சினை –  பேச்சு வார்த்தைகள் தோல்வி, ரூ. 500 கோடிகள் இந்திய அரசு கொடுத்தது, ஆனால் தமிழர்களைச் சென்று அடையவில்லை………………..என்று ஏதாவது பிரச்சினை வந்தால், இலகுவாக ஒதுங்கிவிட வாய்ப்பை மத்திய அரசு (காங்கிரஸ் தலைமை) ஏற்படுத்திக் கொண்டுள்ளது. கூட காங்கிரஸ் எம்பிக்களையும் சேர்த்துக் கொண்டுள்ளதால், மாநிலத்திலும், காங்கிரஸின் அதிகாரம் உள்ளது என்று தங்களை நிலைநிறுத்திக் கொள்ள சாமர்த்தியமாக வேலை செய்துள்ளது.

ரஜபக்ஷேவை-மகிழ்விக்கும்-தமிழ்-எம்பிக்கள்

ராஜபக்ஷேவை-மகிழ்விக்கும்-தமிழ்-எம்பிக்கள்

மக்களின் சாவில், கருமாந்திரத்தில், இழவில் கூட காசு வருகிறது என்றால் கொள்ளையடிக்கத் தயாராக உள்ள கூட்டங்கள்: அப்பாவி மக்களின் சாவில், கருமாந்திரத்தில், இழவில் கூட காசு வருகிறது என்றால், இன்றைய திராவிட சித்தாந்திகள் மற்றும் கருப்பு-சிவப்பு-பச்சை கூட்டங்கள், அதை பறிக்கக் கிளம்பிவிடுகின்றன. சுனாமி நிதியை எப்படி அந்த கிருத்துவக் கூட்டங்கள் ஈவு-இரக்கமின்றி கொள்ளையடித்தனவோ[7], அதைவிட கேவலமாக, இந்த சித்தாந்தி-குழுமங்கள் கொள்ளையடிக்க தயாராக உள்ளனர். சென்னை மாநகராட்சியில், தினமும் ஒரு சாவு என்றால், அதற்கு வாங்கும் லஞ்சத்தில், கவுன்சிலருக்கு பங்கு போகிறதாம். இப்படி இருக்கும் திராவிட கலாச்சாரத்தில், ஏன் இந்த கூட்டங்கள், பிணங்களின்மீது கூட லாப-நஷடக் கணக்குகளைப் பார்த்து அடித்துக் கொள்ளாது? இந்த கேவலமான நிலைதான், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உள்ளது. குவியல்-குவியலாக பிணங்கள், தோண்ட-தோண்ட பிணங்கள், மனித உரிமை மீறல்கள், போர்குற்றவாளி மகேந்திரபக்ஷே, தமிழ் மக்களின் உயீரைக்குடித்த எமன்…………………………இப்படி ஏராளமான செய்திகள்…………………பிறகெப்படி, இந்த 14-எம்பி கூட்டம் அந்த எமனுடன், ராக்ஷ்ஸனுடன் கைகுலுக்கி, சிரித்துக் கொண்டு அமுத்தலாக பேச்சு வார்த்தைகள் நடத்துகின்றன? சோம-சுரா பானங்களை குடித்துக் கொண்டு, விருந்துண்ணுகின்றன?

TamilMPs-met-Rajapakse

TamilMPs-met-Rajapakse

கருணாநிதியின் கடிதங்களும், ராஜபக்ஷேவின் வார்த்தைகளும்: பாம்பின் கால் பாபு அறியும்: தில்லிக்குச் சென்று ராஜபக்ஷேவுடன் நானே பேச்சு வார்த்தைகள் நடத்துகிறேன், அவருடைய போலித்தனத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறேன் என்று கருணாநிதி சவால் விடவில்லை. மாறாக, “ராஜபக்ஷே தமது வாக்குறுதிகளினின்று பின்வாங்கிவிட்டார்”, என்று பேச ஆரம்பித்து விட்டார். 80,000  தமிழர்கள் இன்னும் கூடாரங்களில் வசிக்கின்றனர். அவர்கள் உடனடியாக குடியமர்த்தப்படவேண்டும் என்று கடிதம் எழுதிவிட்டேன் என்று மார்தட்டிக் கொள்கிறார்[8]. கடிதங்கள் எழுதினால் காரியங்கள் நடக்குமா? மகள்-மகன்-மறுமகன்களுக்கு மந்திரி பதவி கொடுங்கள் என்று கடிதம் எழுதிவிட்டு சென்னையிலேயே உட்கார்ந்து கொள்ளாலாமே? அப்பொழுது மட்டும் ஏன் தில்லிக்குச் சென்று சோனியாவிடம் நேரிடையாக பேசவேண்டும், மிரட்டவேண்டும்? போதாக்குறைக்கு ராஜாவைவிட்டு நீரா ராடியாவை வைத்துக் கொண்டு உறவாட வேண்டும். தமிழர்களின் மீது, உண்மையிலேயே அக்கரை இருந்திருந்தால், இத்தகைய ஏமாற்று வேலைகளை செய்யவேண்டாமே? இதைப்போலத்தான் அந்த ராஜபக்ஷேவின் வார்த்தைகளும், வாக்குறுதிகளும். ஏன் அவருக்குத்தெரியாதா, கருணாநிதியைப் பற்றி? பாம்பின் கால் பாம்பறியாதா? இத்தகைய வஞ்சக பேரங்களில், எப்படி தமிழர்கள் மீண்டு வாழ்வர்?

Douglas-met-Manmohan

Douglas-met-Manmohan

காங்கிரஸின் / சோனியாவின் கபட நாடகம்: போர்க்குற்றங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தால், விடிவு, முடிவு வந்து விடுமா? ஏன் மன்மோஹன்[9] சிங் அதைப் பற்றி பேசுவதில்லை? மன்மோஹன் சிங் ஏன் பேசுவதில்லை என்று சுதர்ஸன நாச்சியப்பன் ஏன் கேட்கவில்லை? ராஜிவ் காந்தி கொலைக்கரர்களின் சட்டப்படி நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலில், நளினியை நான் மன்னித்து விட்டேன் என்று சோனியா பேசுவதும், பிரியங்கா வேலூருக்கே வந்து நளினியுடன் ரகசிய பேச்சுகள் வைத்துக் கொண்டு செல்வதும், அறிந்தும் அறியாத மாதிரி காங்கிரஸ்-திமுக கோஷ்டிகள் நடித்திருப்பதும், ஏன் தமிழர்கள் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்? ஆட்டிவைக்கும் சோனியா ஒன்று பேசினால், ஜனாதிபதியோ, நீதிமன்றங்களோ, உள்துறையோ என்ன செய்யும்?  இந்த நுணுக்கம் கூடவா, அறிவு ஜீவிகளுக்குத் தெரியவில்லை? பிறகென்ன கருணை மனு பற்றிய பேச்சுகள், அதில்கூட “சீனியாரிடி” உள்ளது, அதன்படிதான் நடவடிக்கை எடுப்போம் என்ற ஒழுக்கமான பேச்சுகள் எல்லாம் ஏன் வருகின்றன?

Duglas-devananda-terrorist-rebel

Duglas-devananda-terrorist-rebel

சோனியாவின் போலித்தனம், இரட்டைவேடம், துரோகத்தனம்: ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வந்து, தனது கணவனின் பிண்டத்தைப் பார்த்தபோது, “போதும், இனி நாங்கள் அரசியலிலேயே தலையிட மாட்டோம்”, என்று நொந்து, அஞ்ஞானவாசம் வாழ்வேன் என்று ஏற்பட்ட விசனம், எப்படி இந்தியாவை ஆண்டே தீருவேன் என்று மாறியது என்று காங்கிரஸ்காரர்கள் யோசிப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரைக்கும் அம்மையார் இருந்தால், அவர்களுக்கு பதவிகள் கிடைக்கும், வசதிகள் தொடரும், பணம் கொட்டும் அவ்வளவே. ஆனால், அத்தகைய நுணுக்கத்தை அந்த ஜூலியன் மோரோ தனது புத்தகத்தில் எடுத்துக் காட்டிவிட்டால், அது மாபெரும் குற்றமாகி விடுகிறது[10]. உடனே சோனியா வக்கீல் நோட்டீஸ் விடுகிறார், மிரட்டுகிறார், அந்த புத்தகம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் விற்பதை தடுத்துவிடுவேன். பிறகெதற்கு நாட்டை ஆட்டிவைக்க வேண்டும் என்ற ஆசை? இந்தியாவை விட்டுச் சென்றுவிடவேண்டியதுதானே? ஆனால், சென்றுவிடுவேன் என்று மிரட்டி, தொடர்ந்து இருப்பதில் தான் உண்மையான நிலையுள்ளது. தனது கணவர் கொலையாளிகளின் கூட உறவுகள் தொடர்ந்தன, பேரங்கள் நடந்தன என்றால் அவற்றின் மர்மம் என்ன? ராஹுல் காந்தி பிரதமரானால் கொன்றுவிடுவோம் என்ற மிரட்டல் இருப்பதினால்தான், சோனியா நளினியுடன் பேரம் பேசுகிறார் என்ற பேச்சும் அடிபடுகிறது. நளினி மற்றும் முருகனை விடுதலை செய்யப்பட்டால், அவர்கள் இந்தியாவைவிட்டு சென்று விடுவோம், இனி பிரச்சினையிலேயே தலையிட மாட்டோம் என்று உறுதி பெறுவதற்குத்தான் பிரியங்கா மூலம் சோனியா பேரம் பேசியது உண்மையா-போய்யா என்பதை சோனியா மற்றும் காங்கிரஸ்தான் உறுதி செய்யவேண்டும்.

குறிப்பு: கனிமொழியின் ஆடைகள் மாறியிருக்கின்றன. முதலில் சிகப்பு நிறம் சேலை-ஜாக்கெட் என்றுள்ளது, பிறகு அது பச்சைநிற பார்டர் போட்ட வெளிர் மரக்கலர் நிறத்தில் மாறியிருக்கிறது. ஆக,  – இரண்டு முறை (ஒரே நாளில் அல்லது அடுத்தடுத்த நாட்களில்) அவர்கள் ராஜபக்ஷேவைப் பார்த்து பேசியிருக்கிறார்கள். சிவராஜ் பாட்டீல் மாதிரி ஆடைகளை மாற்றுவதில் தான் கனிமொழி கவனம் செல்லுத்தியிருக்கிறார் என்று தெரிகிறது. இங்கே, இவ்வளவு வெறுப்பு, காழ்ப்பு, ஆக்ரோஷம், விரோதம், துவேஷம்,…………………முதலியவற்றுடன் பேசினாலும், அங்கு அமைதியாக, நாகரிகமாக, சிரித்துக் கொண்டு, …………………சால்வைகளைப் போத்தி மரியாதை செய்து…………………………………. , முகச்சிரிப்போடு……………..அப்பப்பா, நடிப்பா, உண்மையா………..என்றே தெரியாமல் அளவில்………… அவர்கள் அந்நேரங்களில் பேசிய விவரங்கள் என்னவென்று தெரியவில்லை.


[1] Indian Peace Keeping Force (IPKF) withdrew from Sri Lanka in 1990. In 1991, after the IPKF withdrawal was complete and the LTTE had assassinated former Indian Prime Minister Rajiv Gandhi, India brought its involvement in Sri Lanka’s internal ethnic conflict to a complete halt.

[2] Editorial, Productive Visit, The Hindu dated 12-06-2010. From 1991, successive governments in New Delhi have conducted Sri Lanka policy on sound and constructive lines. The time has come to take the bilateral relationship to a new level by exploring its full potential. As part of this, rising India must – without imposing itself – continue to encourage the Sri Lankan leadership to find a satisfactory resolution to Tamil grievances within an improved devolution framework.

http://beta.thehindu.com/opinion/editorial/article453209.ece

[3] DMK president and Chief Minister M  Karunanidhi on Tuesday 03 Feb 2009 said the LTTE had lost the sympathies of the party way back in 1987 itself as its chief V Prabhakaran was planning to adopt a dictatorial form of government in Tamil Eelam for which they were fighting.

[4] http://timesofindia.indiatimes.com/India/Karunanidhi-lauds-LTTE-as-Sonia-looks-on/articleshow/4507318.cms

After calling LTTE chief Prabhakaran his good friend, Tamil Nadu Chief Minister M Karunanidhi on Monday flip-flopped from his stand, saying India could not forgive the LTTE for assassinating Rajiv Gandhi. http://ibnlive.in.com/news/karunanidhi-flip-flops-says-cant-forgive-ltte/90663-37.html

[5] http://www.thehindu.com/2010/06/08/stories/2010060859770300.htm

http://beta.thehindu.com/news/states/tamil-nadu/article449715.ece

[6] சுதர்ஸன நாச்சியப்பன், இந்த 14-எம்பி குழுவில் இருந்திருக்கிறார். பிரபாகரனை எதிர்க்கும் பட்சத்தில், காங்கிரஸ் இலங்கையாட்சியாளர்களுக்கு சாதகமாத்தான் செயல்படும் என்பது நிதர்சனமாகிறது.

[7] ஸெவன்த் டே அட்வென்டிஸ்ட் என்ற கூட்டாத்தார், தடபுடலாக, அமெரிக்காவிலிருந்து மில்லியன் கணக்கில் டாலர்களைப் பெற்று, மிகவும் தரக்குறைவான ஓட்டை வீடுகளைக் கட்டிக் கொடுத்து, சரியாக மாட்டிக் கொண்டனர். சென்னை உயர்நீதிமன்றமே இவர்களைக் கடுமையாக சாடி கண்டித்தது. மறுபடியும் வீடுகளைக் கட்டித்தருமாறு ஆணையிட்டது.

[8] http://beta.thehindu.com/news/national/article450225.ece

[9] http://www.thehindu.com/2010/06/10/stories/2010061057650100.htm

[10] ஜூலியன் மோரோ என்பவர் எழுதிய புத்தகத்திற்கு காங்கிரஸ்காரர்கள் அதிக அளவில் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

கருணாநிதி-நெடுமாறன் விவாதம் தொடர்கிறது!

நவம்பர் 19, 2009
தமிழினம் கருணாநிதியை மன்னிக்காது: பழ.நெடுமாறன்
First Published : 19 Nov 2009 12:38:39 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=&SectionName=Tamilnadu

சென்னை, நவ. 18:   “”இலங்கை விவகாரத்தில் பிரச்னையைத் திசை திருப்பத் தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் கருணாநிதியைத் தமிழினம் ஒருபோதும் மன்னிக்காது” என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.  இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  “”இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ள சில செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து முதல்வர் கருணாநிதி கொஞ்சமும் கவலைப்படவில்லை.  ரணில் கூறிய செய்திகளை வைத்துக் கொண்டு, புலிகள் மீது அவதூறு சேற்றை அள்ளி வீசி இருக்கிறார் அவர்.  விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நார்வே பிரதிநிதிகள் முன்னிலையில் ஆறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.  இதைத் தொடர்ந்து, இலங்கை அரசு கடந்த 2003-ம் ஆண்டு ஜூலையில் தாற்காலிக நிர்வாக அமைப்புத் திட்டத்தை அறிவித்தது.  அதில், நிலம், காவல் துறை, பாதுகாப்பு, வரிவசூலித்தல் போன்றவை தொடர்பான எந்த அதிகாரமும் இந்த அமைப்புக்கு அளிக்கப்படவில்லை. இந்த அதிகாரங்கள் அனைத்தும் இலங்கை அரசிடமே இருக்கும். இந்தத் திட்டத்தை ஏற்க மறுத்த புலிகள் மாற்றுத் திட்டத்தை அளித்தனர்.  இதை ஏற்பது குறித்து பேச்சு நடத்த சிங்கள அரசு மறுத்தது. இதனால், பேச்சுவார்த்தை முறிந்தது. சிங்கள அரசு பிடிவாதமாக ஒற்றையாட்சி முறையில் இருந்து விலகி நிற்க மறுத்ததுதான் பேச்சுவார்த்தை முறிவுக்குக் காரணமே தவிர பிரபாகரன் அல்ல.  முற்றிலும் தவறு…  கடந்த 2005-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதை பிரபாகரன் தவிர்த்தார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறு. அந்த மாநாட்டுக்கு விடுதலைப் புலிகள் அழைக்கப்படவே இல்லை.  இந்தத் தவறை மூடி மறைத்து ரணில் கூறியவற்றை முதல்வர் கருணாநிதி திரும்பவும் கூறியிருப்பது வேண்டுமென்றே புலிகளை அவதூறு செய்வதாகும்.  அதிபர் தேர்தலில் ரணிலை ஆதரிப்பதற்கு புலிகள் தவறி விட்டார்கள் என்பதும் கருணாநிதியின் மற்றொரு குற்றச்சாட்டு. போர் நிறுத்த உடன்பாட்டில் பிரதமர் ரணிலும், பிரபாகரனும் கையெழுத்திட்டனர்.  ஆனால், அந்த உடன்பாட்டில் உள்ள அம்சங்களை நிறைவேற்ற பிரதமர் ரணில் காலம் கடத்தினார். இந்தக் காலத்தில் சிங்கள ராணுவ வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி பயிற்சி அளிக்கச் செய்தார். புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்த சதி செய்தார்.  இந்த நிலையில், தேர்தலால் தங்களுக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை எனத் தமிழர்கள் கருதினர். அவர்களது விருப்பத்துக்கு மாறாக எதுவும் கூற புலிகள் விரும்பவில்லை.  பிரச்னையைத் திசை திருப்புவதற்காக கருணாநிதி தொடர்ந்து செய்யும் முயற்சிகள் ஒருபோதும் பயன் அளிக்கப் போவதில்லை. தமிழனம் அவரை மன்னிக்கப் போவதும் இல்லை” என்று பழ.நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புலிகளின் உதவி பெறும் மாவோயிஸ்ட்கள் * ஆந்திர டி.ஜி.பி., அதிர்ச்சி தகவல்

நவம்பர் 1, 2009
புலிகளின் உதவி பெறும் மாவோயிஸ்ட்கள் * ஆந்திர டி.ஜி.பி., அதிர்ச்சி தகவல்
நவம்பர் 01,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13707

இந்தியாவில் உள்ள மாவோயிஸ்ட்களுக்கும், இலங்கை விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு உண்டு. தங்களின் வன்முறை செயல்திட்டங்களை அமல்படுத்த மாவோயிஸ்ட்கள், விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெறுகின்றனர்,” என ஆந்திர மாநில டி.ஜி.பி., கிரிஷ் குமார் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:

இலங்கை விடுதலைப் புலிகள், இங்குள்ள மாவோயிஸ்ட்களுக்கு உதவி செய்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மாவோயிஸ்ட்களுக்கு ஆயுத உதவி மற்றும் பயிற்சி போன்றவற்றை விடுதலைப் புலிகள் அளிக்கின்றனர்.நாட்டின் மத்திய பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில், மாவோயிஸ்ட்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இணைந்த கூட்டுப் பயிற்சிகள் மற்றும் கூட்டங்கள் நடந்ததாக புலனாய்வுத் துறையினரும் எச்சரித்துள்ளனர்.

புலனாய்வுத் துறை தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, விடுதலைப் புலிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ள, “ஆபரேஷன் கிரீன் ஹன்ட்’ என்ற தாக்குதலுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக் கொள்ள, மாவோயிஸ்ட்கள் கொரில்லா போரில் தேர்ச்சி பெற்ற விடுதலைப் புலிகளின் உதவியைக் கோர லாம் என நம்பப்படுகிறது.

ஆந்திர மாநிலம் முன்னர் மாவோயிஸ்ட்களின் கோட்டையாக இருந்தது. அந்த நிலையை அவர்கள் திரும்பப் பெற முடியாது. சட்டீஸ்கர்,பிற மாநிலங்களில், மாவோயிஸ்ட்களுக்கு எதிரானதாக்குதல்கள் நடத்தப்படுவதால், அவர்கள் ஆந்திராவிற்குள் ஊடுருவும் வாய்ப்பு உள்ளதால், எல்லையில் உள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.கடலோரப் பகுதிகளில் புதிய போலீஸ் நிலையங்கள் அமைத்து, அப்பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட்கள் மீண்டும் இங்கு செயல்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு கிரிஷ் குமார் கூறினார்.