Posts Tagged ‘இலங்கை’

ஹபாயா / பர்தா விசயத்தை உண்டாக்கி, பிரச்சினையாக்கி, ஶ்ரீலங்காவில் துலுக்கர் இந்து பெண்களை தூஷிப்பது, ஆபாசமாக சித்தரிப்பது (1)

ஏப்ரல் 28, 2018

ஹபாயா / பர்தா விசயத்தை உண்டாக்கி, பிரச்சினையாக்கி, ஶ்ரீலங்காவில் துலுக்கர் இந்து பெண்களை தூஷிப்பது, ஆபாசமாக சித்தரிப்பது (1)

Sri shanmuga college-purdha enters -in Hindu college

திடீரென்று முகமதிய ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வந்தது:  ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன்னால் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து 26-04-2018 அன்று காலை 7.30மணியவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “அண்மைக் காலமாக முழு ஆடையணிந்த ஐந்து முஸ்லிம் ஆசிரியர்களின் இந்துப் பாடசாலைகளின் வருகையும், அவர்களின் செயற்பாடுகளும் ஒரு சமயப் பாடசாலையின் பாரம்பரியத்தையும் ஒழுங்கு விதிகளையும் குழப்புவதாக உள்ளது[1]. அந்த வகையில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் நடந்து கொண்ட விதம் இந்த பாடசாலை ஒழுக்க விதிகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளதுடன், பாடசாலை சமூகத்தினர் அனைவரையும் வேதனைக்குட்படுத்தியுள்ளது[2]. இது காலவரையில் சேலை அணிந்து வந்த ஆசிரியர்கள் இனி ஹபாயா எனும் முழுச்சட்டையினையே அணிந்து வருவார்கள் என பாடசாலை அதிபரை குறித்த ஆசிரியர்களின் கணவர்மார்கள் மிரட்டியது பாடசாலை நாகரிகத்தையும் சட்டத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. அத்துடன், அதிபரின் பேச்சை அவமதித்து இவர்கள் ஹபாயா அணிந்து பாடசாலைக்கு வருவது ஒட்டுமொத்த நிர்வாகத்தை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது.

 Sri shanmuga college- emphacise no communalism in Hindu college

முகமதிய ஆசிரியைகளின் கணவன்மார் வந்து மிரட்டியது[3]: தொடர்ந்து அவர்கள் கூறியது, “ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் இவ்வாறு நடந்து கொள்வது மாணவர்களுக்கு எவ்வாறு நல்வழிகாட்டலாக அமையும் இப் பிரச்சினையால் மாணவர்கள் மத்தியில் முஸ்லிம் தமிழ் எனும் இன வேறுபாட்டை இவ்வாசிரியர்களால் தூண்டப்படுவது ஆரோக்கியமானது அல்ல. எனவே அத்துமீறி பாடசாலைக்குள் வந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே வருவார்கள் என மிரட்டிய கணவர்மார்கள் மீதும் குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாறு பாடசாலை நிர்வாகத்திற்கு குந்தகம் விளைவித்ததுடன், எமது பாடசாலை விதிமுறைகளுக்கு கட்டுப்படாத ஆசிரியர்கள் உடன் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறு மதக்காரணங்களை காட்டி பாரம்பரிய கலாச்சாரப் பாடசாலைகளுக்கு பொருத்தமில்லாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. ஆரம்ப நிலையில் இப் பிரச்சினையை கண்டுகொள்ளாத திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் ஆகியோரையும் கண்டிக்கின்றோம். இது போன்று தேவையற்ற சம்பவங்கள் எந்தப் பாடசாலைகளிலும் நிகழக்கூடாது,” என குறிப்பிட்டுள்ளனர்[4].

Sri shanmuga college- emphacise no communalism

முகமதியர் ஏதோ ஒரு திட்டத்துடன் இப்பிரச்சினையை ஆரம்பித்துள்ளனர்: ஆக இதிலிருந்து தெரிவதாவது:

  1. இந்து மகளிர் கல்லூரியில், முகமதிய பெண்களுக்கும் பணி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முகமதிய கல்லூரியில் அவ்வாறுள்ளதா என்று தெரியவில்லை.
  2. இதுவரை சேலைக் கட்டிக் கொண்டு வந்திருந்த, முகமதிய ஆசிரியைகள், திடீரென்று ஹபாயா / புர்கா / பர்தா அணிந்து வருவோம் என்று, கல்லூரி அதிபர் / நிர்வாகத்திடம் சொல்லியிருக்கின்றனர்.
  3. ஏனிப்படி திடீரென்று செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு, அது எங்கள் உரிமை, அதனால் செய்யப் போகிறோம் என்று பிடிவாதம் பிடித்தனர்.
  4. மறுத்தபோது, எழுத்து மூலம் ஹபாயா அண்ணிந்து வர அனுமதி கோரினர்.
  5. அதையும் மறுத்தபோது, அவர்களது கணவன்மார் வந்து கத்தி பேசி, மிரட்டியுள்ளனர்.
  6. அதனால், அக்கல்லூரி, “இந்து மகளிர் கல்லூரி” என்பதால், அவ்வாறு செய்ய முடியாது, பிறகு, அவரவர் வேவ்வேறு விதமான ஆடைகளை அணிந்து வர ஆரம்பித்து விடுவார்கள் என்றும் சொல்லியிருக்கின்றனர்.
  7. அந்நிலையில் அவர்களது கணவன்மார் மறுபடியும் வந்த வந்து கத்தி பேசி, திட்டி, “விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என்ற ரீதியில் மிரட்டியுள்ளனர்.
  8. இதனால் தான், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து 26-04-2018 அன்று காலை30மணியவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  9. இதனால், எதிர்மறை விளைவு ஏற்படும் என்றறிந்தவுடன், மதரீயில் பிரச்சாரம் மற்றும் கண்டன ஆர்பாட்ட,ம் என்று முகமதியர் ஆரம்பித்தனர்.

Muslims threaten Sri shanmuga college

இன ரீதியான பாடசாலைகள் தோற்றம் பெற்றதற்கு ஒரு வரலாறு இருக்கிறது[5]: அதற்கேற்றபடி, அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாடசாலைகளில் கிறிஸ்தவம் மதம் முன்னிலைப்படுத்தப்பட்டதால், இந்து மற்றும் பெளத்த மறுமலர்ச்சி இயக்கங்கள் தங்களது சமய விழுமியங்களை காப்பற்றும் நோக்கில் தனியான பாடசாலைகளை அமைத்தன என தெரிவித்துள்ளார்[6]. தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “திருகோணமலையில் தமிழ் பாடசாலையொன்றில் ஆசிரியைகள் அபாயா அணிந்து செல்லமுடியாது என்ற குழப்பத்தை ஒரு குழு ஏற்படுத்தியிருக்கிறது[7]. பாடசாலைகளில் தங்களுடைய கலாசாரம் குறித்த விடயங்களில் ஒரு நெகிழ்வுப் போக்கோடு நடந்துகொள்ளாத நிர்வாகங்களின் மீது, தாக்கம் செலுத்தமுடியாத ஒரு கல்விமுறையின் கீழ்தான் நாங்கள் பயிற்றுவிக்கப்படுகிறோமா என்ற துர்ப்பாக்கிய நிலையையும் நாங்கள் பேசித்தான் ஆகவேண்டும்,” என குறிப்பிட்டுள்ளார்[8]. பிறகு, ஒரு குறிப்பிட்ட கல்லூரியில், அடுத்தவர் எப்படி தங்களுடைய உரிமை என்று பிரச்சினை ஏற்படுத்த முடியும்?

Sri Shanmuga college demo agfainst Muslims - 26-04-2018-

ஹாபாயா அணிந்து வருவேன் என்ற ஆசிரியைகளுக்கு இடமாற்றம் கொடுத்தது: கொழும்பு கல்வி அமைச்சினால் தீர்வு வழங்கப்படும் வரை ஹபாய அணிவதற்கு அனுமதி கோரிய, [ஹபாயா அணிந்தபடி கடமைக்கு செல்லும் ஆசிரியைக்கு[9]], சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்[10]. ஹபாயா விவகாரம் தொடர்பாக வலயக்கல்வி அலுவலகத்தில் 26-04-2018 அன்று நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்[11]. ஒவ்வொரு மதத்துடைய கலாச்சார விழுமியங்களை மதித்து புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்[12]. நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பாடசாலையின் சமய-கலாச்சாரம் பேணப்பட வேண்டும்[13]. ஆசிரியர்கள் பாடசாலைக்குப் பொருத்தமான, பாடசாலையால் தீர்மானிக்கப்பட்ட உடைகளை அணிய வேண்டும் என்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. இதேவேளை இந்த விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள், பெற்றோர் 25-04-2018 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

© வேதபிரகாஷ்

28-04-2018


Sri Shanmuga college

[1] பட்டி.நியூஸ், அதிபருடன் ஆசிரியர்கள், கணவன்மார்கள் முர்ரண்பட்டமையே ஹபாய ;பிரச்சினைக்கு காரணம் இது எந்த ஒரு இனத்திற்கும் எதிரானதல்லஏற்பாட்டாளர்கள், வெள்ளிக்கிழமை, April 27, 2018.

[2] http://www.battinews.com/2018/04/blog-post_839.html

[3] தினப்புயல், திருகோணமலைஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம், April 26, 2018.

[4] http://www.thinappuyalnews.com/archives/152305

[5] குவிக்,நியூஸ்.தமிழ், இன ரீதியான பாடசாலைகள் தோற்றம்பெற்றதற்கு ஒரு வரலாறு இருக்கிறது, April 28, 2018.

[6]  https://www.quicknewstamil.com/2018/04/28/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/

[7]தமிழ்வின், இன ரீதியான பாடசாலைகள் தோற்றம் பெற்றதற்கு ஒரு வரலாறு இருக்கிறது, April 28, 2018.

[8]  http://www.tamilwin.com/community/01/181129?ref=recommended3

[9] பேஜ்.தமிழ், ஶ்ரீ சண்முகா மகளிர் கல்லூரிஹபாயா ஆசிரியைக்கு இடமாற்றம்: பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு!, April 28, 2018.; http://www.pagetamil.com/2661/

[10] குவிக்,நியூஸ்.தமிழ், சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஹபாயா விவகாரம்! முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்!, April 26, 2018

[11]https://www.quicknewstamil.com/2018/04/26/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/

[12] தமிழ்வின், திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் ஹபாயா விவகாரம்: விசேட கலந்துரையாடல், April 26, 2018.

[13] http://www.tamilwin.com/community/01/181016

பெரியார் பெயரில் அமெரிக்க மாமிசக் கறிக்கடை தாக்குதல் – மீன்கழிவு அபிஷேகம், அமெரிக்காவைத் திட்டி அர்ச்சனை, நோட்டிசுகளால் பூஜை!

செப்ரெம்பர் 25, 2015

பெரியார் பெயரில் அமெரிக்க மாமிசக் கறிக்கடை தாக்குதல் – மீன்கழிவு அபிஷேகம், அமெரிக்காவைத் திட்டி அர்ச்சனை, நோட்டிசுகளால் பூஜை!

kfc attacked in Pondicherry 1

kfc attacked in Pondicherry 1

பெரியார் சிந்தனை கழகம்: பெரியாரின் பெயரில் எத்தனை கழகங்கள் இயங்கி வருகின்றனவோ தெரியவில்லை. தமிழ்நாடு, புதுச்சேரியில் அமெரிக்காவின் கெஎஃப்சி உணவகத்தை பெரியார் சிந்தனை கழகத்தை சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது, என்று புதுச்சேரியில் நடந்த சிறிய நிகழ்ச்சியை இணைதளத்தில் செய்தியாக பார்த்தவுடன், “பெரியார் சிந்தனை கழகம்” பற்றி தேடிப் பார்த்தோம், ஒன்றும் கிடைக்கவில்லை.

ஆதித்தமிழர் கொடி

ஆதித்தமிழர் கொடி

ஆக திராவிடக் கழகம், பெரியார் திராவிடக் கழகம், பகுத்தறிவு பெரியார் திராவிடக் கழகம், பெரியார் பாசறை, பெரியார் சிந்தனையாளர்கள் கழகம், என்பது போல, இந்த “பெரியார் சிந்தனை கழகம்” முளைத்துள்ளது போலும்!

திக கொடி

திக கொடி

அம்பேத்கர், பெரியார் போன்ற பெயர்கள், உருவங்கள், சிலைகள் இன்றளவில் சின்னங்களாக, பிரச்சார அடையாளங்களாக, சித்தாந்த வியாபார முத்திரைகளாக, வணிக குறிகளாக மாறிவிட்டது தாராளமாக தெரிகிறது.

pdk-flag

pdk-flag

அத்தகைய அடையாளங்களை தாங்கள் உபயோகப்படுத்தினால், தங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலையும் உள்ளது என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் போலும்.

இலங்கைக்கு ஆதரவாக .நா.வில் தீர்மானம்: அமெரிக்கா திடீர் பல்டி! (ஆகஸ்ட்.2015): இலங்கை விவகாரத்தில் புதிய திருப்பமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அந்நாட்டுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா சார்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானம் இலங்கை மீதான விசாரணையை வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டுவரப்படும் என அமெரிக்காவின் மத்திய, தெற்காசிய விவகாரங்கள் துறை துணை அமைச்சர் நிஷா பிஸ்வால் தெரிவித்தார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிஷா பிஸ்வால், கொழும்பில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது[2]: ஜெனீவாவில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டமைப்பின் மாநாட்டில் இலங்கை விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இலங்கை அரசே போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளவதற்கு ஆதரவு தரப்படும். இலங்கை அரசுடனான நல்லுறவைப் பேணும் வகையில் இந்த தீர்மானம் அமையும். இலங்கையில் தற்போதைய சூழலில், வேற்றுமைகளை அகற்றி சமரசம் மலர ஏராளமான வாய்ப்புகள் உருவாகி இருப்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. அந்த வகையிலேயே இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவர அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இவ்வாறு நிஷா பிஸ்வால் கூறினார். இச்செதி வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது.

kfc attacked in Pondicherry 2

kfc attacked in Pondicherry 2

புதுச்சேரியில் கே.எப்.சி உணவகம் தாக்கப்படல் (24-09-2015)[3]: இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக உள்ளூர் விசாரணையே போதும் என்று, ஐ.நாவில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது. இதற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி காந்தி வீதி-ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பில்,  இயங்கி வரும் அமெரிக்காவின் கெஎஃப்சி உணவகத்தில் இன்று பெரியார் சிந்தனை கழகத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே புகுந்து, அங்கிருந்த கண்ணாடிகள், கதவுகள், கம்ப்யூட்டர், மேஜை, நாற்காலிகளை அடித்து உடைத்தனர்[4]. மேலும் அங்கிருந்த மீன் கழிவுகளை உணவகம் மீது கொட்டினர். மேலும், உள்ளே இருந்த மின் சாதனங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்[5].

kfc attacked in Pondicherry 3

kfc attacked in Pondicherry 3

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டவர்கள், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் அமெரிக்காவின் நிறுவனமே தமிழகத்திலிருந்து வெளியேறு என்றும் முழக்கமீட்டுள்ளனர். இந்த சம்பவத்தால், கடைக்கு சிக்கன் சாப்பிட வந்திருந்த வெளிநாட்டினர் உள்ளிட்டோர் அச்சத்தில் வெளியேறினர்[6]. பின்னர், அமெரிக்காவுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்[7]. இப்படியொரு கலாட்டா செய்ய 5 பேர் போதும் போலும்! இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த புதுச்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த சிறிய செய்தியை விகடனும் அப்படியே போட்டுள்ளது[8]. மேலும் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்[9]. விரைந்து வந்த போலீஸார் தேடி வருகின்றனர் என்பதே வேடிக்கையாக இருக்கின்றது. சிசிடிவியில் ஒன்றும் பதிவாகவில்லையா? சென்ற வாரம், கோவையில், நாம் தமிழர் கட்சியினர் இத்தகைய உணவகத்தை முற்றுகையிட்டு, கைதாகினர்.

kfc attacked in Pondicherry 4

kfc attacked in Pondicherry 4

13-09-2015 அன்று கோவை கே.எஃப்.சி உணவகத்தை தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்[10]: கோவையில் கே.எஃப்.சி உணவகத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 26 பேரை போலீஸார் கைது செய்தனர். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக உள்நாட்டு விசாரணையே போதுமானது என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்து கே.எஃ.ப்சி நிறுவனத்தின் ஆர்.எஸ்.புரம் கிளையை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழ்செல்வன் (எ) அப்துல்வகாப் தலைமை வகித்தார். இதில், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக இலங்கையில் உள்நாட்டு விசாரணை நடத்தினால் போதும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கண்டிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்[11].

பெரியாரைக் காப்போம்

பெரியாரைக் காப்போம்

விளம்பரத்திற்கு இவ்வாறு செய்யலாம் போலிருக்கிறது: பெரிய ஊடகங்களே, இன்றளவில், செய்திகளை தயாரித்து வெளியிடுகின்றன. இந்தியில் பேசியதைத் திரித்தி, ஆங்கிலத்தில் வெளியிட்டு பிரச்சினையாக மாற்ற முயற்சித்துள்ளனர், அது தொடர்ந்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் இலங்கைப் பிரச்சினை, ஒரு உணர்ச்சிப்பூர்வமானது. அவ்விசயத்தில், யாராவது எதிராக மூச்சுவிட்டல் கூட, தமிழ்-விரோதி என்று கிளம்பி விடுவர். பெரியாரின் 137வது பிறந்தநாளை ஐநா சார்பாக வீரமணி மாநாடு நடத்தினார். ஆனால், அதே பெரியார் சின்னத்தை, இன்னொரு கூட்டம், அமெரிக்காவுக்கு எதிராக உபயோகப்படுத்துகிறது. மாட்டுக்கறி தடை என்றால், மாட்டுக்கறி சாப்பிட்டார்கள்; உண்ணாவிரதம் என்றால் உண்ணும் விரதம் கொண்டாடினார்கள்; ஆனல், இப்பொழுது கறிக்கடையை ஏன் பெரியார் பெயரில் தாக்குகிறார்கள்?

© வேதபிரகாஷ்

25-09-2015

[1] தமிழ்.ஒன்.இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக .நா.வில் தீர்மானம்: அமெரிக்கா திடீர் பல்டி!, Posted by: Mathi, Published: Thursday, August 27, 2015, 7:56 [IST].

[2] http://tamil.oneindia.com/news/srilanka/major-shift-us-policy-backs-sri-lanka-s-own-war-crimes-probe-234334.html

[3] ஆர்த்தி, கே.எப்.சி உணவகத்தை அடித்து நொறுக்கிய பெரியார் சிந்தனை கழகம்!, சென்னை, வியாழன், 24.2015.23.56.

[4] http://www.pathivu.com/?p=43510

[5] http://puducherrynews.com/?p=29648

[6] புதுச்சேரி செய்திகள், இலங்கை பிரச்சனையில் அமெரிக்காவிற்கு எதிர்ப்பு: கேஎப்சி உணவகம் மீது திடீர் தாக்குதல், Posted by Puducherry News on September 24, 2015.

[7] யாழ், .நாவில் அமெரிக்கத் தீர்மானம்! புதுச்சேரியில் அமெரிக்க உணவகம் அடித்து உடைப்பு, Started by தமிழரசு, 10 hours ago

[8] http://www.vikatan.com/news/article.php?aid=52829

[9] http://www.yarl.com/forum3/topic/163540-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

[10] தினமணி, கே.எஃப்.சி உணவகம் முற்றுகை:26 பேர் கைது, By கோவை, First Published : 14 September 2015 03:21 AM IST.

[11]http://www.dinamani.com/edition_coimbatore/coimbatore/2015/09/14/%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8826-%E0%AE%AA/article3027086.ece

ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்கன் திட்டத்தில் யாழ் தமிழன் – இப்படி விஷமத்தனமாக செய்திகளை வெளியிடுவது ஏன்?

ஜூன் 2, 2013

ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்கன் திட்டத்தில் யாழ் தமிழன் – இப்படி விஷமத்தனமாக செய்திகளை வெளியிடுவது ஏன்?

DG12_09_27_220.jpg

பெருமைப்படவேண்டிய விஷயத்தைக் குதர்க்க நோக்கத்தோடு வெளியிடும் நோக்கம் என்ன?: சிக்காகோவில் உள்ள இலினோயிஸ் பல்கலைக்கழகத்தில் UIC (University of Illinois at Chicago[1]) அமெரிக்காவிற்கு ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் திட்டத்தில், பிரதானமான ஒருவராக செயற்பட்டவர் ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது[2] என்று ஏதோ ரகசியத்தைக் கண்டுவிட்டது போல சில இணைதளங்கள் வெளியிட்டுள்ளன:

ஜாப்னா இந்து காலேஜ், தனது இணைதளத்திலும் பெருமையாக வெளியிட்டுள்ளது[6]. அக்கல்லூரியில் 1968-75 ஆண்டுகளில் படித்த மாணவன், 29-05-2013 அன்று வெள்ளைமாளிகை நிகழ்சியில் பாராட்டப் பட்டவர் என்று விவரங்களைக் கொடுத்துள்ளது[7].

Sivalingam Sivananthan, professor of physics

கௌரவிக்கப் பட்ட விஞ்ஞானி: விருது அந்த பல்கலைக்கழகத்தின் இணைத்தளத்தில் வெளிவந்துள்ள விவரத்தை, ஆங்கில இணையத்தளமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது[8], என்று குறிப்பிட்டு, உள்நோக்கத்தோடு வெளியிட்டிருப்பது தெரிகிறது. யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன், அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான “Champion of Change” விருது வழங்கி அண்மையில் கெளரவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த வெற்றிகரமான நடவடிக்கையை அடுத்து, வெள்ளை மாளிகையினால் மாற்றத்திற்கான விசேட நபர் என கௌரவப்படுத்தப் பட்டுள்ளார். கடந்த 30 ம் தேதி சிவலிங்கம் சிவநாதனுக்கு மதிப்பளிக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்ட விருதினை அடுத்தே இந்த தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்க பிரஜைகளை உலகில் சிறந்த மற்றும் முக்கியமான பிரஜைகளாக மாற்றுவதற்கு தமது அறிவை பயன்படுத்துபவர்களுக்கு இந்த கௌரவ விருது வழங்கப்படுவதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த நிகழ்சியின் விடியோவை இங்கு காணலாம்[9].

???????????????????????????????

உயர்ந்த தொழிற்நுட்பம் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்: உயர்ந்த தொழிற்நுட்பம் கொண்ட வெப்பங்காக்கும் கருவியை உருவாக்கியவர் சிவநாதன். போலிங்புரூக், Ill என்ற இடத்தில், சிவநாதன் லெபோரட்டரீஸ் இன்க் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். கண்ணுக்குப் புலப்படாத சிவப்புநிறக்கற்றை தொழிற்நுட்பம், கற்றை அலைகளைக் கண்டறிதல், திடப்பொருள் ஆராய்ச்சி முதலியவற்றில் இந்த ஆராய்ச்சிக் கூடம் ஈடுபட்டுள்ளது. ஒளிக்கற்றை ஆராய்ச்சியில் இது மிகவும் அடிப்படையானது மற்றும் முக்கியமானது என்பதால், இத்துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தன்னுடைய கண்டுபிடிப்புகளால் ஆராய்ச்சி மற்றும் தொழிற்சாலை உற்பத்தி இவைகளுக்கிடையே உள்ள தூரத்தைக் குறைக்க வழிசெய்கிறார் என்று பாராட்டப்படுகிறார்[10].

Sivanathan Laboratories

இலங்கைத் தமிழர் பாராட்டப் பட்டுள்ளார்: அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள இலினோயிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் சிவலிங்கம் சிவநாதன், அல் -குவைதா தலைவர் ஒசாமா பின் லேடனை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கைக்கு தேவையான தொழிற்நுட்பத்தை முழுமையாக கண்டுப்பிடித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு தேவையான நைட் விஷன் தொழிற்நுட்பம் உள்ளிட்ட உபகரணங்களை பேராசியரே தயாரித்துள்ளார். பேராசிரியர் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்காவின் பிரதான தொழிற்நுட்பட அதிகாரி டோட் பார்க், இப்படியான அறிவார்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வந்து தாம் அவர்களுடன் பணியாற்ற கிடைத்தமை மதிப்புக்குரியது என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பிரதேசத்தில் பிறந்த பேராசிரியர் சிவலிங்கம், அணுமின் தொழிற்நுட்பம் தொடர்பில் புகழ்பெற்றவர். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அவருக்கு சகல வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது தமது கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.

Sivanathan - Lankasri mischief

விஷமத் தனத்தைத் தூண்டும் தமிழ் இணை தளங்கள்: உண்மையினைத் திரித்து, இப்படி துவேஷம் உண்டாக்கும் வகையில் இந்த தமிழ் இணைதளங்கள் செய்துள்ளது கண்டிக்கப்பட வேண்டியதாகும். வழக்கம் போல, இலங்கைத் தமிழனா, அமெரிக்கத் தமிழனா, தமிழ் பேசும் அமெரிக்கனா, அமெரிக்கக் குடிமகனா என்றெல்லாம் கற்பிப்பதை விட, இலங்கை வம்சாவளி என்று பெருமைப்படுவதை விடுத்து, இப்படி ஏன் வெளியிட வேண்டும்.  லங்காஶ்ரீ நியூஸ் என்ற ஆங்கிலத் தளமும், “US Honours Sivalingam Sivananthan for Technology Contribution to Raid in Which Osama Bin Laden was Killed [Saturday, 01 June 2013, 08:34.01 AM GMT +05:30 ]”, என்று வெளியிட்டுள்ளது[11]. உள்ளே அப்படியே ஆங்கிலத்தில் உள்ளவற்றைக் காப்பியடித்துப் போட்டுவிட்டு, தலைப்பு மட்டும் அப்படி போட்டுள்ளது. போதாகுறைக்கு, ஒசாமா பின் லேடனும், சிவநாதனும் சேர்ந்திருப்பது போல புகைப்படத்தையும் போட்டுள்ளது. தமிழ்.நெட்.காம் சரியாகப் போட்டுள்ளது[12].

 

மனைவியை விடுத்து படிக்க வந்த சிவநாதன்: சிவநாதன் 1983ல் தனது ஊரில் கலவரங்கள் ஏற்பட்டபோது கலங்கினான், ஏனெனில் அப்பொழுதுதான், இல்லினாயிஸ் பல்கலைகழகத்தில் நுழைவு தேர்விற்குத் தயார் படுத்திக் கொண்டிருந்தான்[15]. 2009ல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அப்பொழுது தனது மனைவியை தொடர்பு கொள்ளும் முயற்சிகளில் தோல்வியடைந்தான். “என் மனைவி எங்கு இருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை மறைந்திருக்கிறாளா என்பதும் தெரியவில்லை”, என்று கவலைப்பட்டார். பிறகு அவள் உயிரோடு இருந்ததை அறிந்து கொண்டார்[16]. இப்படி கஷ்டப்பட்டவர் தாம், இன்று கடின உழைப்பினால் முன்னேறி, விஞ்ஞானியாக புகழைப் பெற்றுள்ளார். ஆகவே, பாராட்ட மனமில்லை என்றால், சும்மா இருந்து விட்டு போகலாம். அதற்கு பதிலாக இப்படி விஷமத்தனத்தை செய்ய வேண்டாம்.

 

வேதபிரகாஷ்

© 02—06-2013


[7] Dr.Sivalingam Sivananthan, a distinquished old boy of Jaffna Hindu College (1968 -75) and currently professor of physics at the University of Illinois Chicago and founder of Sivananthan Laboratories in Bolingbrook, USA, has been named a White House Champion of Change, an honour that recognizes immigrant entrepreneurs. He was given this honor at a ceremony at the White House on May 29th 2013.

[10] Sivananthan is the founder of the high-tech, Bell-Labs-styled incubator, Sivananthan Laboratories, Inc. in Bolingbrook, Ill. The Laboratories’ focus is on infared technology, radiation detection, materials research and biosensors.Because, at its most fundamental, MCT technology is about transforming light into electricity, Sivananthan is also leading an effort to develop next-generation solar power. To that end, he helped found InSPIRE (the non-profit Institute for Solar Photovoltaic Innovation, Research, and Edu-training), whose mission is training Illinois’s workforce and exciting Illinois undergraduate and high school students to create a renewable energy and solar eco-system in Illinois.In Sivananthan Laboratories Sivananthan is promoting economic growth by fostering cutting-edge, fundamental research and development that bridges the gap between academia and industry.

[15] In the summer of 1983, the microphysics pioneer at the University of Illinois at Chicago was preparing to take his preliminary examination at the university to begin his doctoral dissertation. That’s when he heard that riots had begun back home in Sri Lanka – the start of a civil war that only ended in 2009. Sivananthan wanted to head back right away. He had tried and failed to get in touch with his wife who was in the northern part of the country, the center of the violence. “We had not managed to make any connection with her, I didn’t know if she was hiding, where she was,” he said. http://news.medill.northwestern.edu/chicago/news.aspx?id=182831

அமிதாப் – வருவார், ஆனால் வரமாட்டார்!

மே 8, 2010

அமிதாப்புக்கு சீமான் நன்றி
புதன், 28 ஏப்ரல் 2010( 15:56 IST )
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1004/28/1100428066_1.htm

இலங்கையில் நடக்கயிருக்கும் விருது வழங்கும் விழா குறித்து மறுப‌ரிசீலனை செய்வதாக தெ‌ரிவித்திருக்கும் அமிதாப்பச்சனுக்கு இயக்குனரும், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் நன்றி தெ‌ரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களை‌க் கொன்று குவித்த பாசிஸ ராஜபக்சேவுக்கு சர்வதேச சமூகம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. அவரை‌ப் போர் குற்றவாளியாக அறிவிக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை நீர்த்துப்போகச் செய்யும் எதிர் நடவடிக்கையில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் கை கோர்த்துள்ளது. இந்திய அரசின் அழுத்தம் காரணமாக சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு தூதராக அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இலங்கை சென்ற அமிதாப் பாசிஸ ராஜபக்சேவை சந்தித்து விழா குறித்து பேசியதுடன் சிங்களர்களை வெகுவாகப் புகழ்ந்து பேட்டியளித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெ‌ரிவிக்கவும், அமிதாப் விருது விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நாம் தமிழர் இயக்கத்தினர் கடந்த ஞாயிறன்று அமிதாப்பின் வீட்டு முன் கறுப்பு‌க் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது வீட்டிலிருந்த அமிதாப் ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்து விவரங்களை‌த் தெ‌ரிந்து கொண்டார். இதுகுறித்து தனது ப்ளாக்கில் எழுதியிருக்கும் அமிதாப், தமிழர்களின் சென்டிமெண்‌ட்டை தான் மதிப்பதாகவும், விருது விழா நடத்துகிறவர்களிடம் இது குறித்து பேசயிருப்பதாகவும், விருது விழா குறித்த முடிவை மறு ப‌ரிசீலனை செய்யவிருப்பதாகவும் தெ‌ரிவித்துள்ளார்.

அமிதாப்பச்சனின் இந்த முடிவுக்கு சீமான் நன்றி தெ‌ரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட மற்ற பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த விழாவை புறக்கணிக்க வேண்டும் என தனது அறிக்கையில் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமிதாப்-ஷாரூக் வருகையை யாராலும் தடுக்க முடியாது!: இலங்கை

வெள்ளிக்கிழமை, மே 7, 2010, 13:59[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/05/07/iifa-colombo-srilanka-amitabh-bachchan-sharukh.html

இலங்கையில் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் திட்டமிட்டபடி பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள், அதை யாராலும் தடுக்க முடியாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது. கொழும்பில் வரும் ஜூன் 3 முதல் 5 வரை நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விருது வழங்கும் விழாவில், பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட குழுவினர் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை என அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

சர்வதேச இந்திய திரைப்பட அகடமியின் விருது வழங்கும் விழா குறித்து இலங்கை அரசு நேற்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இத்தகவலை உறுதியாகத் தெரிவித்தார். “அமிதாப், ஷாரூக்கான் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்க மாட்டார்கள் என்று சிலர் கூறி வருகிறார்கள். அவர்களைப் பங்கேற்க விடாமல் செய்ய சிலர் முயற்சித்தும் வருகிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் மீறி, அமிதாப்பும் ஷாரூக்கானும் பங்கேறபார்கள்” என்றார் லக்ஷ்மண் யாப்பா. இலங்கை இப்போது முன்னேற்றப் பாதையில் வெற்றி நடை போடுவதாகவும், இந்தத் தருணத்தில் இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் இலங்கையில் நடப்பது, நாட்டின் முகத்தையே மாற்றி அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.