Posts Tagged ‘இலங்கை இந்து’

ஹபாயா / பர்தா விசயத்தை இந்து மகளிர் கல்லூரியில் பிரச்சினையாக்கி, ஶ்ரீலங்காவில் துலுக்கர் இந்து பெண்களை தூஷிப்பது, ஆபாசமாக சித்தரிப்பது (2)

ஏப்ரல் 28, 2018

ஹபாயா / பர்தா விசயத்தை இந்து மகளிர் கல்லூரியில் பிரச்சினையாக்கி, ஶ்ரீலங்காவில் துலுக்கர் இந்து பெண்களை தூஷிப்பது, ஆபாசமாக சித்தரிப்பது (2)

Muslims denigrating comments-3

சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் உள்ளவர்களை கண்டு பிடிக்க வேண்டும்: சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்கு பின்னால் உள்ளவர்களை உடனடியாக கண்டுபிடிக்குமாறு திருகோணமலை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார, திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்[1]. திருகோணமலை சன்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை சம்மந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார ஆகியோருக்கிடையில் 26.04.2018 அன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்ததாவது, “இந்த கல்லூரியில் நடந்தாக கூறப்படும் பிரட்சனையை அதிகாரிகள் மட்டத்தில் பேசி தீர்வொன்றை கண்டிருக்க முடியும். ஆனால் இவ்வாறானதொரு ஆர்பாட்டம் ஒன்றை நடாத்த வேண்டிய தேவை யாருக்கு காணப்பட்டது. அந்த ஆர்பாட்டத்தில் ஏந்தியிருந்த பதாதைகள் இந்த ஆர்பாட்டத்தின் நோக்கத்தை தாண்டி இனவாதத்தையே பிரதிபலித்தது. ஆகவே இந்த பிரட்சனையை பயன்படுத்தி யாராவது அரசியல் லாபம் தேட முயற்சித்தார்களா என ஆராய வேண்டிய தேவை உள்ளது. ஏன் எனில் மூவினமும் ஒற்றுமையாக வாழும் இந்த மாவட்டத்தில் இந்த ஆர்பாட்டத்தின் பின் இனவாத கருத்துக்கள் பரப்பபடுகின்றன.  தமிழக அரசியல்வாதியின் பேச்சைப் போலவே இவர் பேச்சு இருக்கிறது.

 Muslims denigrating comments-1

ஆர்பாட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டதா? அவர்களுக்கு பின்னால் அரசியல் லாபம் ஏதும் உண்டா என விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்: இம்ரான் மகரூப் தொடர்ந்து கூறியது, “முஸ்லிம் ஆசிரியர்கள் தமது கலாச்சார ஆடை அணிந்து வர மறுக்கப்படுவதால் இன்று முஸ்லிம் பாடசாலைகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் காலச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆடை அணிகலன்களை அணியக்கூடாது என கூறி இரு இனங்களுக்கு மத்தியில் முறுகல் ஒன்றை ஏற்படுத்த மூன்றாம் தரப்பொன்று முயல்வதாகவே தோன்றுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர் ஆர்பாட்டம் முஸ்லிம் பிரதேசங்களிலும் நடாத்தப்பட்டு இது நாடு முழுவதும் பரவுகின்ற அபாயம் காணப்படுகிறது. இது இரு சமூகங்களுக்கு மத்தியில் முறுகல் நிலையை தோற்றுவிப்பது மட்டுமல்லாமல் இரு சமூகங்களின் கல்வி நடவடிக்கைகளையும் பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இந்த ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் யார்? இந்த ஆர்பாட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டதா? அவ்வாறாயின் யாருக்கு அந்த அனுமதி வழங்கப்பட்டது? என கண்டுபிடித்து அவர்களுக்கு பின்னால் அரசியல் லாபம் ஏதும் உண்டா என விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் திருகோணமலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதே போன்ற ஒரு பிரட்சனை சிறிஜெயவர்தனபுற ஜனாதிபதி வித்யாலயத்திலும் ஏற்பட்டு அது உயர் நீதிமன்றம் வரை சென்றது அந்தமதத்தவர் தமது மதத்தை பிரதிபலிக்கும் கலாச்சார ஆடைகளை அணிவதில் எந்த தடையுமில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்பளித்தது நினைவுகூறத்தக்கது,” என தெரிவித்தார்[2].

Muslims denigrating comments-4

முஸ்லிம் அமைப்புகள் தங்களது சுயமுகங்களை வெளிக்காட்டியது: முஸ்லிம் அமைப்புகள், இதனை எதிர்த்து மதவாத ரீதியில் பதாகைகளை வைத்துக் கொண்டும், தூண்டும் வகையிலும் பேசி, ஆர்பாட்டம் செய்தனர்[3]. 27-04-2018 ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு, ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர்- சுலோச்சனா ஜெயபாலன், பாடசாலை நிர்வாகம் எதிர்த்து கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்தனர்[4]. “கலாச்சாரத்தின் பெயரால் ஆபாசத்தை ஆதரிக்காதே, உடலை மறைத்தால் காமுகர்கள் தான் கோபப் படுவார்கள், ………………..சேலை உலக மகா ஆபாசம்…………” என்றெல்லாம் பதாகைகள், கோஷங்கள், சமூகவளைத் தளங்களில் கேவலமான பதிவுகள், பிரச்சாரங்கள் முதலியவை, முகமதியரின் உண்மை முகத்தை வெளிக்காட்டி விட்டது[5]. இருப்பினும், இதைப் பற்றி சந்தோசமகாவே இருப்பதாக தெரிகிறது. ஏனெனில், அப்பாதகை புகைப் படங்களில் போட்டுப் பரப்பிக் கொண்டிருக்கிறர்கள்[6]. எப்படியாவது, அடிப்படைவாதத்தை, உரிமை என்று சொல்லி, பிரச்சினையை உண்டாக்கி, சமூகத்தில் கலவரத்தை உண்டாக்கத்தான் திட்டத்துடன் செயல்படுகின்றனர் என்று தெரிகிறது. இனி ஶ்ரீலங்காவில் குண்டுகள் வெடித்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

Muslims denigrating comments-5

துலுக்கரின் கேவலமான செயல்கள்[7]: தீவகம் என்ற ஶ்ரீலங்கா இணைதளம், இவ்விரங்களைக் கொடுக்கிறது: முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சிலரினால் மிகவும் அருவருக்கத்தக்கதும் மிகவும் கீழ்த்தரமான முறையில் தமிழ் பெண்களை சித்தரித்து பதிவு இடப்பட்டு வருகின்றன. முஸ்லிம் இளைஞர்களின் இந்த கேவலமான செயற்பாடு குறித்து ஒட்டுமொத்த தமிழ் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. கேவலம் கெட்ட சில முஸ்லிம்கள் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளை ஆபாச பொருளாக சித்தரிக்கும் வகையில் புகைப்படங்களை பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பெண் ஆசிரியர்களின் அவயங்களை ஆபாசமாக கோடிட்டு, ஒட்டுமொத்த தமிழ் பெண்களும் கேவலமானவர்கள் என்ற தொணியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கும் ஒருபடி மேல் சென்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவை, மிகவும் கீழ்த்தரமான முறையில் வர்ணித்து தங்கள் கேவலமான சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

Anti-Hindu demo - Kanni 27-04-2018-2

கடந்த வாரம் பாடசாலைக்குள் அத்துமீறி முஸ்லிம் ஆசிரியைகளின் கணவன்மார் மற்றும் சம்பந்தமற்ற சிலர் பாடசாலை அதிபரை எச்சரிக்கை விடுக்கும் தொனியில் நடந்து கொண்டுள்ளனர்.குறித்த பாடசாலையில் ஏற்கனவே மூன்று முஸ்லிம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் பாடசாலைக்குரிய சீருடையுடன் தமது மத விதிகளை மீறாமலும் ஸ்காப் அணிந்து வந்தனர். ஆனால் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியை ஒருவர், தான் அபாயாவுடன் தான் வருவேன் என்று கூறியுள்ளார். பாடசாலை விதியை மீறி வந்தும் உள்ளார். இந்த நிலையில் பாடசாலைக்குள் உட்புகுந்த குறித்த முஸ்லிம் ஆசிரியையின் கணவன் ‘அவா அப்படி தான் வருவார். உங்களால் முடிந்ததை பாருங்கள்’ என அதிபரை மிரட்டியுள்ளார். அத்துடன் ஏனைய முஸ்லிம் ஆசிரியைகளையும் அபாயாவுடன் வர வைப்பேன் என்று பலருடன் சென்று மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[8].

Anti-Hindu propagada, blaming RSS - 28-04-2018-

ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்துத்துவ தீவிரவாத RSS யோகேஸ்வரன் , புலி சாயம் கொண்ட கட்சிகளுக்கும் தொடர்பு[9]: திருகோணமலை ஆசிரியைகளின் ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்துத்துவ தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மட்டக் களப்பு மாராளுமன்ற சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் புலி சாயம் கொண்ட கட்சிகள் உள்ளமை தெரிய வந்துள்ளதாகவும், இது தொடபில் கலந்துரையாட எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தனை அழைத்தால் எம்மை அவமதிக்கும் முறையில் நடஎது கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் குற்றம் சாட்டியுள்ளார்[10]. இவ்வாறு முகமதிய இணைதளங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன. இந்தியர்களைப் ப்றுத்த வரையில் “அபயா” பிரச்சினை தெரிந்திருக்கலாம், ஆனால், நிச்சயமாக, “ஹபாயா” பிரச்சினை தெரியாது. தமிழக மற்றும் தமிழகப் பிரிவினைவாத, கம்யூனிஸ ஊடகக் காரர்களும், இதைப் பற்றி எந்த செய்தியினையும் வெளியிடாமல் இருக்கிறார்கள். இனி “இந்துத்துவ தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் புலி சாயம் கொண்ட கட்சிகள் உள்ளமை,” என்று போட்டு வைத்துள்ளதால், முகமதியர் மற்றும் அவர்களது விசுவாசமான தோழர்கள், இனி செய்தியைப் போட ஆரம்பிக்கலாம்.

© வேதபிரகாஷ்

28-04-2018

Anti-Hindu demo - Kanni 27-04-2018

[1] ஐபிசி.தமிழ், திருமலை பாடசாலை விவகாரம்; பின்னணியில் உள்ளவர்களை கண்டு பிடிக்கவும்!, April 27, 18

[2] https://news.ibctamil.com/ta/internal-affairs/Tirumala-school-affair-

[3] இம்போர்ட்.மிர்ரர், ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி, ஹபாயா அதிர்வு!!  கிண்ணியாவில் கண்டன ஆர்பாட்டம்!!, April 27, 2018.09.06.00 PM.

[4] http://www.importmirror.com/2018/04/blog-post_567.html

[5] நியூஸ்.வன்னி, உச்சத்தை தொட்ட முஸ்லிம் ஆசிரியையின் ஆடை விவகாரம்வெடித்தது போராட்டம், on: April 27, 2018.

[6] https://www.newsvanni.com/archives/60791

[7] தீவகம், தமிழ் பெண்களை கேவலப்படுத்தும் காவாலித்தனமான இளைஞர்களுக்கு எச்சரிக்கை!, on: April 27, 2018

[8]http://www.theevakam.com/2018/04/27/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/

[9] ஜாப்னா.முஸ்லிம், ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்துத்துவ தீவிரவாத RSS யோகேஸ்வரன் , புலி சாயம் கொண்ட கட்சிகளுக்கும் தொடர்பு, 28-04-2018.

[10] http://www.jaffnamuslim.com/2018/04/rss_28.html

ஶ்ரீலங்கையில் இந்துக்கள் இருக்கிறார்களாம், அவர்கள் கோவில்கள் இடிக்கப்படுகின்றனவாம், உரிமைகள் பறிக்கப்படுகின்றனவாம்!

செப்ரெம்பர் 14, 2013

ஶ்ரீலங்கையில் இந்துக்கள் இருக்கிறார்களாம், அவர்கள் கோவில்கள் இடிக்கப்படுகின்றனவாம், உரிமைகள் பறிக்கப்படுகின்றனவாம்!

 

இந்து மக்கள் கட்சி நடத்திய விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலங்கள் (13-09-2013): கோவையில் இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் நேற்று விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. ஐந்தாம் நாளான வெள்ளிக்கிழமை (13-09-2013) சிலைகள் அனைத்தும் விசர்ஜனத்துக்காக ராஜவீதி தேர்நிலைத் திடலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இலங்கை எம்.பி யோகேஸ்வரன், காஷ்மீர் இந்து இயக்க கூட்டமைப்பு தலைவர் அஸ்வனி குமார் சுருங்கோ, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ராமேஸ்வரத்தில் ஊர்வலத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஆனால், இங்கு எப்படி அனுமதிக்கப்பட்டார் என்று தெரியவில்லை. மழையில் காத்துக் கிடக்கக் கூட தயாராக இருக்கும் தமிழக ஊடகக் காரர்கள், இதைப் பற்றி ஒன்றும் வெளியிடாதது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

 

இந்துக்களின் உரிமைகள் பறிப்பு:  இலங்கை எம்.பி.,  வேதனை[1]: இலங்கையில், இந்து மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக இலங்கை எம்.பி., யோகேஸ்வரன் கூறினார். ஊர்வலத்தின் போது,  சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட  இலங்கை எம்.பி. யோகேஸ்வரன் பேசியதாவது: “இந்தியாவில், விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இலங்கையில் வெறும் நிகழ்ச்சியாக மட்டுமே கொண்டாடப்படுகிறது. இலங்கையின் பூர்வீக மக்கள் இந்து மக்கள் ஆவர்.  இலங்கை யில் உள்ள 2 கோடி மக்களில், 29 லட்சம் பேர் இந்துக்கள்.  அதன்பின்பே, புத்தர்கள் வந்தனர். காலப்போக்கில் அங்கு பெளத்த மதத்தினர் குடியேறி தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.  இந்து மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்த மண்ணில் தற்போது இந்து கோவிகள் இடிக்கப்பட்டு வருகின்றன[2]. இந்துக்களின் புரதாண சின்னங்கள் அழி்க்கப்படுகின்றன. அதற்குப் பதிலாக புத்த மதக் கோவில்கள் அங்கு கட்டப்பட்டு வருகின்றன[3]. இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் மீது வன்முறைகளும் அரங்கேறி வருகின்றன. இந்துக்களின் நிலங்கள், இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. தற்போது, யுத்தத்திற்கு பின் இலங்கையில், இந்து மக்கள் அதிகளவில் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்து வழிபாட்டு சின்னங்கள், இந்து புராதான சின்னங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டும், இந்துகளின் உரிமை தொடர்ந்து பறிக்கப்படுகிறது”, என்றார்[4].

 

போருக்குப் பிறகு இந்துக்களின் உரிமைகள் பறிக்கப் படுகின்றன: யோகேஸ்வரன் தொடர்ந்து சொன்னதாவது, “தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று 1952ல் அகிம்சை வழியில் போராட்டத்தை தொடர்ந்தனர்அதன் பின்னர் போடப் பட்ட ஒப்பந்தங்களை இலங்கை அரசு மதிக்க வில்லை. அதனால் தான் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட தொடங் கினர். 31 வருட போராட்டம் கடந்த 2009 மே 18ஆம்தேதி முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் 3 லட்சத்துக்கும் அதிக மான தமிழர்கள் முகாம் களில் அமர்த்தப்பட் டனர். இந்த போரின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போனார் கள். அவர்களின் நிலை என்ன என்பது தெரிய வில்லை. யுத்தம் முடிவுற்றதால், இலங்கையில் தமிழர் களுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர் பார்த்தோம். ஆனால்  அது நடக்கவில்லை. எங்களின் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் இலங்கை அரசு டன் 10 முறை பேச்சு வார்த்தை நடத்தினோம். ஆனால் இலங்கை அரசு நாங்கள் வைத்த கோரிக்கை களை ஏற்றுக்கொள்ளாததால் பேச்சு வார்த்தை பாதியில் நிற்கிறது[5].

 

வீடு  கட்டிக்  கொடுக்கப்  படவில்லை[6]: யோகேஸ்வரன் தொடர்ந்து சொன்னதாவது, “அங்குள்ள பிரச்சி னைக்கு இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் தான் தீர்வு காண முடியும்இலங்கை தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடு கட்டி கொடுக்கப் படும் என இந்திய அரசு அறிவித்தது. ஒன்றரை வருடங்கள் ஆகியும், ஆயிரம் வீடுகள் கூட முழுமையாக கட்டிக் கொடுக்கப்படவில்லை[7]. இந்திய அரசு வழங்கும் உதவிகள் முழுமையாக தமிழர்களை போய்ச் சேரவில்லை. தற்போது இலங்கையில் அவசர கால தடை சட்டத்தை விலக்கி கொள்வதாக இலங்கை அரசு அறிவித் தாலும் கூட, எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. பயங்கரவாத தடை சட்டத்தை பலப்படுத் தும் நடவடிக்கையை அந்த நாட்டு அரசு வேகப்படுத்தி இருக் கிறது. தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் இலங்கை தமிழர்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால் தமிழக முதல மைச்சர் ஜெயலலிதா, தேர்தலுக்கு பிறகும் கூட இலங்கை தமிழர் களுக்காக சட்டசபை யில் சில தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்”,  இவ்வாறு சீனிதம்பி யோ கேஸ்வரன் கூறினார்.

 

காஷ்மீரிலும்  இந்துக்கள்  தண்டிக்கப்  பட்டது,  போர் கொடுமைகளில் உட்பட்டது: காஷ்மீர் இந்து இயக்க கூட்டமைப்பு தலைவர் அஸ்வனி குமார் சுருங்கோ பேசியதாவது[8]: “நீண்ட நெடிய பாரம்பரியம், தமிழர்களுக்கு உள்ளது. மத்திய அரசின் தவறான வெளியுறவு கொள்கையால் இலங்கையில் இந்து தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். மத்திய தவறான உள்நாட்டு கொள்கையின் விளைவே காஷ்மீர் பிரச்னை. பாக்., நம் எதிரி நாடு. காஷ்மீர் பிரச்னை தொடர்பாக, நமது பிரதமர் மன்மோகன் சிங், பாக்., உடன் பேச வேண்டும் என்கிறார்; அது தவறான முடிவாகும்”, என்றார்.  இதன் பின், இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில், நகர் முழுவதும் பல இடங்களில், 18 சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலைகள், ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, முத்தண்ணன் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

 

மதுரையில்  விநாயகர்  சதுர்த்தி  விழா  கொண்டாட்டத்தின்  போது  யோகேஸ்வரன்  நிருபர்களிடம்  கூறியதாவது: மதுரையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பின்னர் யோகேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது[9]: “இலங்கையில் போரின் போது ஏராளமான இளைஞர்கள், பெண்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்களை கண்டுபிடிக்கக் கோரியும் இதுவரை இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது .நா. பிரதிநிதி நவநீதம் பிள்ளையின் அறிக்கை சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசு நீக்க வேண்டும். இலங்கை பிரச்சினையில் இந்தியா தலையிட்டால் சுமூக தீர்வு காணமுடியும். போருக்குப் பின் ஏற்பட்டுள்ள தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் தங்களை தாங்களே சுயாட்சி செய்யும் நிர்ணய உரிமையை இலங்கை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் இருந்து துணையாக இருப்பதால் இந்தியாவை பகைத்துக் கொள்ள முடியாது. வருகிற 21ந் தேதி இலங்கை வட மாகாண தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் முறையாக நடக்குமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக ஆட்சியை கைப் பற்றும். அதனை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு குளறுபடிகளை செய்ய திட்டம் தீட்டியுள்ளது. எனவே இந்த தேர்தலை சர்வதேச நாடுகளின் மேற்பார்வையில் நடத்த வேண்டும்”.

 

ராமேஸ்வரம்  விநாயகர்  ஊர்வலம் : இலங்கை  எம்.பி.  பங்கேற்க  தடை  (11-09-2013): இலங்கை மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சீனித்தம்பி யோகேஸ்வரன், ராமேஸ்வரத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. ராமேஸ்வரம் வந்திருந்த சீனித்தம்பி, இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத் தில் கலந்து கொள்ள வந்தார். ஆனால் அவரை ஊர்வலகத்தில் பங்கேற்க காவல்துறை அனுமதி மறுத்துவிட்டனர்[10].

 

ராமேஸ்வரத்தில்  யோகேஸ்வரன்  தடுக்கப்  பட்டதற்கு  யார்  காரணம்?: தேவையில்லாமல் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற காரணத்தால் போலோஸார் யோகேஸ்வரன் பங்குக் கொள்வதைத் தடுத்ததாக கூறப்படுகிறது. யோகேஸ்வரன் தான் தடுக்கப்பட்டது குறித்து, முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சொல்லப்போவதாகக் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்னர் டெலோ சேர்மென் மற்றும் TNAவின் எம்.பி, எம்.கே. சிவலிங்கம் ஒரு பிஜேபி கூட்டத்தில் பங்கு கொள்வதாக இருந்தது. ஆனால், அவர் ஆளும் காங்கிரசுக்கு எதிராகப் பேசக் கூடும் என்று விசா மறுக்கப்பட்டது என்று “சிலோன் டுடே” நாளிதழ் கூறுகிறது[11]. அதாவது, காங்கிரஸ் இம்முறை தடுத்ததா அல்லது ஜெயலலிதா தடுத்தாரா என்று தெரியவில்லை. 2014 தேர்தல் காலத்தில், கூட்டணிகள் மாறும் நேரத்தில், இப்படி இந்துக்கள் / தமிழர்கள் என்றெல்லாம் வார்த்தைகள் மாறுகின்றன போலும்!

 

விஷமத்தனத்தைத்  தூண்டும்  தமிழ்  இணைதளங்கள்: தமிழக, தமிழ், தமிழ்-இந்துக்களின் போலித்தனமா, நாத்திகமா எது அவர்களை கட்டுப்படுத்துகிறது என்று தெரியவில்லை. இங்கு கூட யோகேஸ்வரன் “தமிழர்கள்”, “இந்துக்கள்” என்று மாறி-மாறி குறிப்பிடுகின்றார். இதில் உள்ள அரசியல், திட்டம், சதி என்னவென்பது புரியவில்லை. ஶ்ரீலங்கையைப் பொறுத்தவரைக்கும், தமிழ்வழி குடிமகன்களாக இருந்தாலும், தமிழ் ஊடகங்கள் குறைவாகத்தான் விமர்சித்து வருகின்றன. ஜூன் மாதத்தில், சிவலிங்கம் சிவநாதன் என்ற விஞ்ஞானியைப் பற்றி இவ்வாறு செய்திகளை வெளியிட்டன[12]: உண்மையினைத் திரித்து, இப்படி துவேஷம் உண்டாக்கும் வகையில் இந்த தமிழ் இணைதளங்கள் செய்துள்ளது கண்டிக்கப்பட வேண்டியதாகும். வழக்கம் போல, இலங்கைத் தமிழனா, அமெரிக்கத் தமிழனா, தமிழ் பேசும் அமெரிக்கனா, அமெரிக்கக் குடிமகனா என்றெல்லாம் கற்பிப்பதை விட, இலங்கை வம்சாவளி என்று பெருமைப்படுவதை விடுத்து, இப்படி ஏன் வெளியிட வேண்டும்.  லங்காஶ்ரீ நியூஸ் என்ற ஆங்கிலத் தளமும், “US Honours Sivalingam Sivananthan for Technology Contribution to Raid in Which Osama Bin Laden was Killed [Saturday, 01 June 2013, 08:34.01 AM GMT +05:30 ]”, என்று வெளியிட்டுள்ளது[13]. உள்ளே அப்படியே ஆங்கிலத்தில் உள்ளவற்றைக் காப்பியடித்துப் போட்டுவிட்டு, தலைப்பு மட்டும் அப்படி போட்டுள்ளது. போதாகுறைக்கு, ஒசாமா பின் லேடனும், சிவநாதனும் சேர்ந்திருப்பது போல புகைப்படத்தையும் போட்டுள்ளது. தமிழ்.நெட்.காம் சரியாகப் போட்டுள்ளது[14].

 

ஶ்ரீலங்கை  இந்துக்கள்  என்ன  செய்து  கொண்டிருக்கிறார்கள்?: இந்தியவைப் போல ஶ்ரீலங்கையிலும், இந்துக்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ள, அடையாளம் கண்டுக் கொள்ள வெட்கப்படுகிறார்களா, பயப்படுகிறார்களா, அல்லது அவர்கள் இந்துக்களே இல்லையா என்று தெளிவு படுத்த வேண்டும். இல்லையெனில், இவ்வாறுத்தான் முடிவில்லாமல் பிரச்சினைகள் தொடரும். இந்துமதத்திலிருந்து பிரிந்த பௌத்தர்கள் இவ்வாறு ஏன் கொடுமைக்காரர்கள இருக்கவேண்டும் என்பதனையும் ஆராய வேண்டும். முஸ்லிம்கள் தங்களுக்கு இப்படி நடக்கிறது, அப்படி நடக்கிறது, உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்று இணைதளங்களில் நாள் முழுக்க நிரப்பி வருகிறார்கள். ஆனால், ஶ்ரீலங்கை இந்துக்கள் என்று யாரும் அவ்வாறு செய்வதில்லையே ஏன்?

 

© வேதபிரகாஷ்

14-09-2013


[2] Four Hindu temples vandalized in Batti by Our Batticaloa correspondent – Four Hindu temples in the Batticaloa District were ransacked and damaged by unidentified persons on Saturday (1). The well-crafted sculptures and other idols at the temples were vandalized and jewellery and money were looted, sources said. The vandalized temples are Sri Sellakathirgamar Temple, Maangadu Pillaiyar Temple, Kirankulam Iyanaar Temple and Pandiruppu Draupathai Amman Temple. According to sources, the temples were damaged by a group of unidentified persons. The attackers had damaged 19 statues of deities at the Batticaloa Kurukkal Madam Sri Sellakathirgarmar temple, and removed 20 gold sovereigns and a gold plate kept underneath a statue. The significant sculpture and other idols at the Pillaiyar Temple located at Batticaloa Maangadu village were also damaged. Meanwhile, the cash till and the gold jewellery were stolen from the Iyanar Temple located between Kirankulam village and Ambilanthurai, sources said. The temple administrations have made complaints regarding the incidents, to the Kaluwanchikudy Police. Meanwhile, the pinnacle of the Draupathai Amman Temple located close to Pandiriuppu and the Ampara District has also been removed by the vandals. The temple management has lodge a complaint with the Kalmunai Police, and investigations are currently underway. Tamil National Alliance (TNA) Batticaloa District Parliamentarians, P. Selvarasa, P. Ariyanenthiran and C. Yogeswaran have visited the damaged temples and made assessments of the damage.

http://www.ceylontoday.lk/51-34053-news-detail-four-hindu-temples-vandalized-in-batti.html

[4] பிறகு அங்குள்ள இந்துக்கள் ஏன் கவலைப் படாமல் இருக்கிறார்கள்? இலங்கை என்றாலே வீரிட்டு எழும் வீரர்கள், ஊடகங்களில் கூட ஏன் இதை எடுத்துக் காட்டுவதில்லை?

[7] மே மாதத்தில் இதைப் பற்றி நான் எடுத்துக் காட்டியிருந்தேன். ஆனால், தமிழ் ஊடகங்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. https://srilankanissue.wordpress.com/2013/05/24/why-tamils-oppose-muslims-in-the-allotment-of-houses-built-with-the-aid-from-india/

https://srilankanissue.wordpress.com/2013/05/24/how-and-why-india-helps-srilanka-for-building-houses-when-many-indians-live-roofless/

[8] தினமலர், இந்துக்களின் உரிமைகள் பறிப்பு: இலங்கை எம்.பி., வேதனை

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2013,23:29 IST

 

[11] The police officers had said they prevented the TNA Parliamentarian from taking part in the procession as it would lead to unwanted problems when it proceeded towards certain sensitive areas.

Yogeswaran, who was annoyed by the decision, said he would take up the issue with Tamil Nadu Chief Minister, Jayalalithaa Jeyaram, sources said. A couple of years ago, former TELO Parliamentarian and present TNA candidate at the Northern Provincial Council (NPC) polls, M.K. Sivajilingam, was deported from India, for addressing a Bharatiya Janatha Party (BJP) meeting against the ruling Congress Party in India. Since then, Sivajilingam has not been issued visas to enter India, sources noted.

http://www.ceylontoday.lk/51-42493-news-detail-tna-mp-barred-from-religious-procession.html