Posts Tagged ‘தமிழ்நாடு’

ஹபாயா / பர்தா விசயத்தை உண்டாக்கி, பிரச்சினையாக்கி, ஶ்ரீலங்காவில் துலுக்கர் இந்து பெண்களை தூஷிப்பது, ஆபாசமாக சித்தரிப்பது (1)

ஏப்ரல் 28, 2018

ஹபாயா / பர்தா விசயத்தை உண்டாக்கி, பிரச்சினையாக்கி, ஶ்ரீலங்காவில் துலுக்கர் இந்து பெண்களை தூஷிப்பது, ஆபாசமாக சித்தரிப்பது (1)

Sri shanmuga college-purdha enters -in Hindu college

திடீரென்று முகமதிய ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வந்தது:  ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன்னால் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து 26-04-2018 அன்று காலை 7.30மணியவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “அண்மைக் காலமாக முழு ஆடையணிந்த ஐந்து முஸ்லிம் ஆசிரியர்களின் இந்துப் பாடசாலைகளின் வருகையும், அவர்களின் செயற்பாடுகளும் ஒரு சமயப் பாடசாலையின் பாரம்பரியத்தையும் ஒழுங்கு விதிகளையும் குழப்புவதாக உள்ளது[1]. அந்த வகையில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் நடந்து கொண்ட விதம் இந்த பாடசாலை ஒழுக்க விதிகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளதுடன், பாடசாலை சமூகத்தினர் அனைவரையும் வேதனைக்குட்படுத்தியுள்ளது[2]. இது காலவரையில் சேலை அணிந்து வந்த ஆசிரியர்கள் இனி ஹபாயா எனும் முழுச்சட்டையினையே அணிந்து வருவார்கள் என பாடசாலை அதிபரை குறித்த ஆசிரியர்களின் கணவர்மார்கள் மிரட்டியது பாடசாலை நாகரிகத்தையும் சட்டத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. அத்துடன், அதிபரின் பேச்சை அவமதித்து இவர்கள் ஹபாயா அணிந்து பாடசாலைக்கு வருவது ஒட்டுமொத்த நிர்வாகத்தை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது.

 Sri shanmuga college- emphacise no communalism in Hindu college

முகமதிய ஆசிரியைகளின் கணவன்மார் வந்து மிரட்டியது[3]: தொடர்ந்து அவர்கள் கூறியது, “ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் இவ்வாறு நடந்து கொள்வது மாணவர்களுக்கு எவ்வாறு நல்வழிகாட்டலாக அமையும் இப் பிரச்சினையால் மாணவர்கள் மத்தியில் முஸ்லிம் தமிழ் எனும் இன வேறுபாட்டை இவ்வாசிரியர்களால் தூண்டப்படுவது ஆரோக்கியமானது அல்ல. எனவே அத்துமீறி பாடசாலைக்குள் வந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே வருவார்கள் என மிரட்டிய கணவர்மார்கள் மீதும் குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாறு பாடசாலை நிர்வாகத்திற்கு குந்தகம் விளைவித்ததுடன், எமது பாடசாலை விதிமுறைகளுக்கு கட்டுப்படாத ஆசிரியர்கள் உடன் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறு மதக்காரணங்களை காட்டி பாரம்பரிய கலாச்சாரப் பாடசாலைகளுக்கு பொருத்தமில்லாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. ஆரம்ப நிலையில் இப் பிரச்சினையை கண்டுகொள்ளாத திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் ஆகியோரையும் கண்டிக்கின்றோம். இது போன்று தேவையற்ற சம்பவங்கள் எந்தப் பாடசாலைகளிலும் நிகழக்கூடாது,” என குறிப்பிட்டுள்ளனர்[4].

Sri shanmuga college- emphacise no communalism

முகமதியர் ஏதோ ஒரு திட்டத்துடன் இப்பிரச்சினையை ஆரம்பித்துள்ளனர்: ஆக இதிலிருந்து தெரிவதாவது:

  1. இந்து மகளிர் கல்லூரியில், முகமதிய பெண்களுக்கும் பணி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முகமதிய கல்லூரியில் அவ்வாறுள்ளதா என்று தெரியவில்லை.
  2. இதுவரை சேலைக் கட்டிக் கொண்டு வந்திருந்த, முகமதிய ஆசிரியைகள், திடீரென்று ஹபாயா / புர்கா / பர்தா அணிந்து வருவோம் என்று, கல்லூரி அதிபர் / நிர்வாகத்திடம் சொல்லியிருக்கின்றனர்.
  3. ஏனிப்படி திடீரென்று செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு, அது எங்கள் உரிமை, அதனால் செய்யப் போகிறோம் என்று பிடிவாதம் பிடித்தனர்.
  4. மறுத்தபோது, எழுத்து மூலம் ஹபாயா அண்ணிந்து வர அனுமதி கோரினர்.
  5. அதையும் மறுத்தபோது, அவர்களது கணவன்மார் வந்து கத்தி பேசி, மிரட்டியுள்ளனர்.
  6. அதனால், அக்கல்லூரி, “இந்து மகளிர் கல்லூரி” என்பதால், அவ்வாறு செய்ய முடியாது, பிறகு, அவரவர் வேவ்வேறு விதமான ஆடைகளை அணிந்து வர ஆரம்பித்து விடுவார்கள் என்றும் சொல்லியிருக்கின்றனர்.
  7. அந்நிலையில் அவர்களது கணவன்மார் மறுபடியும் வந்த வந்து கத்தி பேசி, திட்டி, “விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என்ற ரீதியில் மிரட்டியுள்ளனர்.
  8. இதனால் தான், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து 26-04-2018 அன்று காலை30மணியவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  9. இதனால், எதிர்மறை விளைவு ஏற்படும் என்றறிந்தவுடன், மதரீயில் பிரச்சாரம் மற்றும் கண்டன ஆர்பாட்ட,ம் என்று முகமதியர் ஆரம்பித்தனர்.

Muslims threaten Sri shanmuga college

இன ரீதியான பாடசாலைகள் தோற்றம் பெற்றதற்கு ஒரு வரலாறு இருக்கிறது[5]: அதற்கேற்றபடி, அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாடசாலைகளில் கிறிஸ்தவம் மதம் முன்னிலைப்படுத்தப்பட்டதால், இந்து மற்றும் பெளத்த மறுமலர்ச்சி இயக்கங்கள் தங்களது சமய விழுமியங்களை காப்பற்றும் நோக்கில் தனியான பாடசாலைகளை அமைத்தன என தெரிவித்துள்ளார்[6]. தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “திருகோணமலையில் தமிழ் பாடசாலையொன்றில் ஆசிரியைகள் அபாயா அணிந்து செல்லமுடியாது என்ற குழப்பத்தை ஒரு குழு ஏற்படுத்தியிருக்கிறது[7]. பாடசாலைகளில் தங்களுடைய கலாசாரம் குறித்த விடயங்களில் ஒரு நெகிழ்வுப் போக்கோடு நடந்துகொள்ளாத நிர்வாகங்களின் மீது, தாக்கம் செலுத்தமுடியாத ஒரு கல்விமுறையின் கீழ்தான் நாங்கள் பயிற்றுவிக்கப்படுகிறோமா என்ற துர்ப்பாக்கிய நிலையையும் நாங்கள் பேசித்தான் ஆகவேண்டும்,” என குறிப்பிட்டுள்ளார்[8]. பிறகு, ஒரு குறிப்பிட்ட கல்லூரியில், அடுத்தவர் எப்படி தங்களுடைய உரிமை என்று பிரச்சினை ஏற்படுத்த முடியும்?

Sri Shanmuga college demo agfainst Muslims - 26-04-2018-

ஹாபாயா அணிந்து வருவேன் என்ற ஆசிரியைகளுக்கு இடமாற்றம் கொடுத்தது: கொழும்பு கல்வி அமைச்சினால் தீர்வு வழங்கப்படும் வரை ஹபாய அணிவதற்கு அனுமதி கோரிய, [ஹபாயா அணிந்தபடி கடமைக்கு செல்லும் ஆசிரியைக்கு[9]], சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்[10]. ஹபாயா விவகாரம் தொடர்பாக வலயக்கல்வி அலுவலகத்தில் 26-04-2018 அன்று நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்[11]. ஒவ்வொரு மதத்துடைய கலாச்சார விழுமியங்களை மதித்து புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்[12]. நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பாடசாலையின் சமய-கலாச்சாரம் பேணப்பட வேண்டும்[13]. ஆசிரியர்கள் பாடசாலைக்குப் பொருத்தமான, பாடசாலையால் தீர்மானிக்கப்பட்ட உடைகளை அணிய வேண்டும் என்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. இதேவேளை இந்த விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள், பெற்றோர் 25-04-2018 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

© வேதபிரகாஷ்

28-04-2018


Sri Shanmuga college

[1] பட்டி.நியூஸ், அதிபருடன் ஆசிரியர்கள், கணவன்மார்கள் முர்ரண்பட்டமையே ஹபாய ;பிரச்சினைக்கு காரணம் இது எந்த ஒரு இனத்திற்கும் எதிரானதல்லஏற்பாட்டாளர்கள், வெள்ளிக்கிழமை, April 27, 2018.

[2] http://www.battinews.com/2018/04/blog-post_839.html

[3] தினப்புயல், திருகோணமலைஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம், April 26, 2018.

[4] http://www.thinappuyalnews.com/archives/152305

[5] குவிக்,நியூஸ்.தமிழ், இன ரீதியான பாடசாலைகள் தோற்றம்பெற்றதற்கு ஒரு வரலாறு இருக்கிறது, April 28, 2018.

[6]  https://www.quicknewstamil.com/2018/04/28/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/

[7]தமிழ்வின், இன ரீதியான பாடசாலைகள் தோற்றம் பெற்றதற்கு ஒரு வரலாறு இருக்கிறது, April 28, 2018.

[8]  http://www.tamilwin.com/community/01/181129?ref=recommended3

[9] பேஜ்.தமிழ், ஶ்ரீ சண்முகா மகளிர் கல்லூரிஹபாயா ஆசிரியைக்கு இடமாற்றம்: பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு!, April 28, 2018.; http://www.pagetamil.com/2661/

[10] குவிக்,நியூஸ்.தமிழ், சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஹபாயா விவகாரம்! முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்!, April 26, 2018

[11]https://www.quicknewstamil.com/2018/04/26/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/

[12] தமிழ்வின், திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் ஹபாயா விவகாரம்: விசேட கலந்துரையாடல், April 26, 2018.

[13] http://www.tamilwin.com/community/01/181016

இந்திய-ஸ்ரீஇலங்கை பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கை, விளைவுகள் – 2010

ஜூன் 13, 2010

இந்திய-ஸ்ரீஇலங்கை பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கை, விளைவுகள் – 2010

1991லிருந்து தொடர்ந்து வரும் இந்திய-ஸ்ரீஇலங்கை நாடுகளின் இருதரப்பு பேச்சுவார்த்தைகள்: இருநாடுகளும் 1991லிருந்து அமோகமாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனவாம்[1], அவை நன்றாகவும், உருப்படியாகவும் இருந்தனவாம். இந்தியா இத்தகைய நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, இந்த இருதரப்பு நல்லுறவை மேன்மைபடுத்தி, பலபடுத்த வேண்டுமாம். உயர்ந்துவரும் இந்தியா, இலங்கையின்மீது எந்தவிதமான சரத்துகளையும் திணிக்காமல் / முட்டுக்கட்டைகள் போடாமல், இலங்கைத் தமிழர்களுடைய துன்பங்கள் குறிப்பிட்ட வரைமுறைகளில் செயல்பட்டு மேன்பட, இலங்கை தலைமையினை உற்சாகப்படுத்தவேண்டுமாம். ஆமாம், இதெல்லாம் 12-06-2010 அன்றைய “தி ஹிந்து” நாளிதழின் தலையங்கத்தின் சாராம்சமாகும்[2]. பிறகு ஏன் இவ்வாறெல்லாம் நடந்திருக்க வேண்டும் என்பது புரியவில்லை. தி ஹிந்து நளிதழும், ஏதோ பொடி வைத்து எழுதியுள்ளதா, நடந்ததை நியாயப்படுத்தியுள்ளதா, இல்லை நடந்தது நடந்து விட்டது, இனிமேலாகிலும் நல்லதை எதிர்பார்த்து பயனிப்போம் என்ற முறையில் சொல்லப்பட்டதா ஏன்று நோக்கவேண்டியுள்ளது. ஏனெனில், அத்தகைய அமோகமான பேச்சு வார்த்தைகள் நடந்திருந்தால், இம்மாதிரியாக மக்கள் உயிரிழந்திருக்க வேண்டாம், வீடுகளை-உடமைகளை அழிவிற்குட்படுத்தியிருக்கவேண்டாம்……………….

DMK-Rajapakshe-Kanimozhi

DMK-Rajapakshe-Kanimozhi

திராவிட கட்சிகளின் போலித்தனம், இரட்டைவேடம், துரோகத்தனம்: ஸ்ரீலங்காப் பிரச்சினையில் திராவிட கட்சிகளின் போலித்தனம், இரட்டைவேடம்[3], துரோகத்தனம், முதலியன நாளுக்கு நாள் அளவுகடந்து, பொறுமையின் எல்லைகளைத்தாண்டி கேவலமாக, விரசமாகிக்கொண்டு வருகின்றன[4]. ஆனால், அதில் சம்பந்தப்பட்ட திராவிட எம்.பிக்கள், அமைச்சர்கள், முதல் மந்திரி, பிரதம மந்திரி, பின்னின்று ஆட்டிவைக்கும் சூத்திரதாரி, இத்தாலி சோனியா முதலியோருக்கு எந்தவிதமான வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. டில்லியில் மஹிந்தரபக்ஷேவுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவது (09-06-2010), சென்னையில் கொடும்பாவி எரிப்பது என்ற விதத்தில் தான் அவர்களின் வீரத்தின் தன்மை உள்ளது. வெறும் வெட்டிப்பேச்சுகள், போலித்தனமான எழுத்துகள், என்றுதான் உள்ளன[5]. இத்தகைய முரண்பாடுகள் முதலியவற்றை எடுத்துக் காட்டினால், மற்றவர்களை மிரட்டுவது என்ற நிலை வருகிறது. தமிழர்களின் துரோகி என்று ஏசுதல், வசவாடுதல், அவதூறு பேசுவது என்ற ரீதியில் மாறுகிறது. இத்தகைய எழுத்து-பேச்சுத் தீவிரவாதங்களுடன் தான், திராவிட-தமிழ்-சித்தாந்தி மறவர்களும் காலத்தைக் கழித்து வருகின்றனர்.

Raja-kani-Tamil-MPs

Raja-kani-Tamil-MPs

முன்பு கொழும்புவில் எப்படி எம்பிக்கள் சென்று பேச்சு வார்த்தைகள் நடத்தினரோ, அதே ரீதியில் தான், இப்பொழுதும் நடத்தியுள்ளதாக உள்ளது. “தமிழர் பிரச்சினை” என்பதனால் காங்கிரஸ் சாமர்த்தியமாக, அவர்களை வைத்தே முடிவுக்கு வரும் அளவில் தள்ளியுள்ளது[6]. நாளைக்கு பிரச்சினை –  பேச்சு வார்த்தைகள் தோல்வி, ரூ. 500 கோடிகள் இந்திய அரசு கொடுத்தது, ஆனால் தமிழர்களைச் சென்று அடையவில்லை………………..என்று ஏதாவது பிரச்சினை வந்தால், இலகுவாக ஒதுங்கிவிட வாய்ப்பை மத்திய அரசு (காங்கிரஸ் தலைமை) ஏற்படுத்திக் கொண்டுள்ளது. கூட காங்கிரஸ் எம்பிக்களையும் சேர்த்துக் கொண்டுள்ளதால், மாநிலத்திலும், காங்கிரஸின் அதிகாரம் உள்ளது என்று தங்களை நிலைநிறுத்திக் கொள்ள சாமர்த்தியமாக வேலை செய்துள்ளது.

ரஜபக்ஷேவை-மகிழ்விக்கும்-தமிழ்-எம்பிக்கள்

ராஜபக்ஷேவை-மகிழ்விக்கும்-தமிழ்-எம்பிக்கள்

மக்களின் சாவில், கருமாந்திரத்தில், இழவில் கூட காசு வருகிறது என்றால் கொள்ளையடிக்கத் தயாராக உள்ள கூட்டங்கள்: அப்பாவி மக்களின் சாவில், கருமாந்திரத்தில், இழவில் கூட காசு வருகிறது என்றால், இன்றைய திராவிட சித்தாந்திகள் மற்றும் கருப்பு-சிவப்பு-பச்சை கூட்டங்கள், அதை பறிக்கக் கிளம்பிவிடுகின்றன. சுனாமி நிதியை எப்படி அந்த கிருத்துவக் கூட்டங்கள் ஈவு-இரக்கமின்றி கொள்ளையடித்தனவோ[7], அதைவிட கேவலமாக, இந்த சித்தாந்தி-குழுமங்கள் கொள்ளையடிக்க தயாராக உள்ளனர். சென்னை மாநகராட்சியில், தினமும் ஒரு சாவு என்றால், அதற்கு வாங்கும் லஞ்சத்தில், கவுன்சிலருக்கு பங்கு போகிறதாம். இப்படி இருக்கும் திராவிட கலாச்சாரத்தில், ஏன் இந்த கூட்டங்கள், பிணங்களின்மீது கூட லாப-நஷடக் கணக்குகளைப் பார்த்து அடித்துக் கொள்ளாது? இந்த கேவலமான நிலைதான், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உள்ளது. குவியல்-குவியலாக பிணங்கள், தோண்ட-தோண்ட பிணங்கள், மனித உரிமை மீறல்கள், போர்குற்றவாளி மகேந்திரபக்ஷே, தமிழ் மக்களின் உயீரைக்குடித்த எமன்…………………………இப்படி ஏராளமான செய்திகள்…………………பிறகெப்படி, இந்த 14-எம்பி கூட்டம் அந்த எமனுடன், ராக்ஷ்ஸனுடன் கைகுலுக்கி, சிரித்துக் கொண்டு அமுத்தலாக பேச்சு வார்த்தைகள் நடத்துகின்றன? சோம-சுரா பானங்களை குடித்துக் கொண்டு, விருந்துண்ணுகின்றன?

TamilMPs-met-Rajapakse

TamilMPs-met-Rajapakse

கருணாநிதியின் கடிதங்களும், ராஜபக்ஷேவின் வார்த்தைகளும்: பாம்பின் கால் பாபு அறியும்: தில்லிக்குச் சென்று ராஜபக்ஷேவுடன் நானே பேச்சு வார்த்தைகள் நடத்துகிறேன், அவருடைய போலித்தனத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறேன் என்று கருணாநிதி சவால் விடவில்லை. மாறாக, “ராஜபக்ஷே தமது வாக்குறுதிகளினின்று பின்வாங்கிவிட்டார்”, என்று பேச ஆரம்பித்து விட்டார். 80,000  தமிழர்கள் இன்னும் கூடாரங்களில் வசிக்கின்றனர். அவர்கள் உடனடியாக குடியமர்த்தப்படவேண்டும் என்று கடிதம் எழுதிவிட்டேன் என்று மார்தட்டிக் கொள்கிறார்[8]. கடிதங்கள் எழுதினால் காரியங்கள் நடக்குமா? மகள்-மகன்-மறுமகன்களுக்கு மந்திரி பதவி கொடுங்கள் என்று கடிதம் எழுதிவிட்டு சென்னையிலேயே உட்கார்ந்து கொள்ளாலாமே? அப்பொழுது மட்டும் ஏன் தில்லிக்குச் சென்று சோனியாவிடம் நேரிடையாக பேசவேண்டும், மிரட்டவேண்டும்? போதாக்குறைக்கு ராஜாவைவிட்டு நீரா ராடியாவை வைத்துக் கொண்டு உறவாட வேண்டும். தமிழர்களின் மீது, உண்மையிலேயே அக்கரை இருந்திருந்தால், இத்தகைய ஏமாற்று வேலைகளை செய்யவேண்டாமே? இதைப்போலத்தான் அந்த ராஜபக்ஷேவின் வார்த்தைகளும், வாக்குறுதிகளும். ஏன் அவருக்குத்தெரியாதா, கருணாநிதியைப் பற்றி? பாம்பின் கால் பாம்பறியாதா? இத்தகைய வஞ்சக பேரங்களில், எப்படி தமிழர்கள் மீண்டு வாழ்வர்?

Douglas-met-Manmohan

Douglas-met-Manmohan

காங்கிரஸின் / சோனியாவின் கபட நாடகம்: போர்க்குற்றங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தால், விடிவு, முடிவு வந்து விடுமா? ஏன் மன்மோஹன்[9] சிங் அதைப் பற்றி பேசுவதில்லை? மன்மோஹன் சிங் ஏன் பேசுவதில்லை என்று சுதர்ஸன நாச்சியப்பன் ஏன் கேட்கவில்லை? ராஜிவ் காந்தி கொலைக்கரர்களின் சட்டப்படி நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலில், நளினியை நான் மன்னித்து விட்டேன் என்று சோனியா பேசுவதும், பிரியங்கா வேலூருக்கே வந்து நளினியுடன் ரகசிய பேச்சுகள் வைத்துக் கொண்டு செல்வதும், அறிந்தும் அறியாத மாதிரி காங்கிரஸ்-திமுக கோஷ்டிகள் நடித்திருப்பதும், ஏன் தமிழர்கள் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்? ஆட்டிவைக்கும் சோனியா ஒன்று பேசினால், ஜனாதிபதியோ, நீதிமன்றங்களோ, உள்துறையோ என்ன செய்யும்?  இந்த நுணுக்கம் கூடவா, அறிவு ஜீவிகளுக்குத் தெரியவில்லை? பிறகென்ன கருணை மனு பற்றிய பேச்சுகள், அதில்கூட “சீனியாரிடி” உள்ளது, அதன்படிதான் நடவடிக்கை எடுப்போம் என்ற ஒழுக்கமான பேச்சுகள் எல்லாம் ஏன் வருகின்றன?

Duglas-devananda-terrorist-rebel

Duglas-devananda-terrorist-rebel

சோனியாவின் போலித்தனம், இரட்டைவேடம், துரோகத்தனம்: ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வந்து, தனது கணவனின் பிண்டத்தைப் பார்த்தபோது, “போதும், இனி நாங்கள் அரசியலிலேயே தலையிட மாட்டோம்”, என்று நொந்து, அஞ்ஞானவாசம் வாழ்வேன் என்று ஏற்பட்ட விசனம், எப்படி இந்தியாவை ஆண்டே தீருவேன் என்று மாறியது என்று காங்கிரஸ்காரர்கள் யோசிப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரைக்கும் அம்மையார் இருந்தால், அவர்களுக்கு பதவிகள் கிடைக்கும், வசதிகள் தொடரும், பணம் கொட்டும் அவ்வளவே. ஆனால், அத்தகைய நுணுக்கத்தை அந்த ஜூலியன் மோரோ தனது புத்தகத்தில் எடுத்துக் காட்டிவிட்டால், அது மாபெரும் குற்றமாகி விடுகிறது[10]. உடனே சோனியா வக்கீல் நோட்டீஸ் விடுகிறார், மிரட்டுகிறார், அந்த புத்தகம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் விற்பதை தடுத்துவிடுவேன். பிறகெதற்கு நாட்டை ஆட்டிவைக்க வேண்டும் என்ற ஆசை? இந்தியாவை விட்டுச் சென்றுவிடவேண்டியதுதானே? ஆனால், சென்றுவிடுவேன் என்று மிரட்டி, தொடர்ந்து இருப்பதில் தான் உண்மையான நிலையுள்ளது. தனது கணவர் கொலையாளிகளின் கூட உறவுகள் தொடர்ந்தன, பேரங்கள் நடந்தன என்றால் அவற்றின் மர்மம் என்ன? ராஹுல் காந்தி பிரதமரானால் கொன்றுவிடுவோம் என்ற மிரட்டல் இருப்பதினால்தான், சோனியா நளினியுடன் பேரம் பேசுகிறார் என்ற பேச்சும் அடிபடுகிறது. நளினி மற்றும் முருகனை விடுதலை செய்யப்பட்டால், அவர்கள் இந்தியாவைவிட்டு சென்று விடுவோம், இனி பிரச்சினையிலேயே தலையிட மாட்டோம் என்று உறுதி பெறுவதற்குத்தான் பிரியங்கா மூலம் சோனியா பேரம் பேசியது உண்மையா-போய்யா என்பதை சோனியா மற்றும் காங்கிரஸ்தான் உறுதி செய்யவேண்டும்.

குறிப்பு: கனிமொழியின் ஆடைகள் மாறியிருக்கின்றன. முதலில் சிகப்பு நிறம் சேலை-ஜாக்கெட் என்றுள்ளது, பிறகு அது பச்சைநிற பார்டர் போட்ட வெளிர் மரக்கலர் நிறத்தில் மாறியிருக்கிறது. ஆக,  – இரண்டு முறை (ஒரே நாளில் அல்லது அடுத்தடுத்த நாட்களில்) அவர்கள் ராஜபக்ஷேவைப் பார்த்து பேசியிருக்கிறார்கள். சிவராஜ் பாட்டீல் மாதிரி ஆடைகளை மாற்றுவதில் தான் கனிமொழி கவனம் செல்லுத்தியிருக்கிறார் என்று தெரிகிறது. இங்கே, இவ்வளவு வெறுப்பு, காழ்ப்பு, ஆக்ரோஷம், விரோதம், துவேஷம்,…………………முதலியவற்றுடன் பேசினாலும், அங்கு அமைதியாக, நாகரிகமாக, சிரித்துக் கொண்டு, …………………சால்வைகளைப் போத்தி மரியாதை செய்து…………………………………. , முகச்சிரிப்போடு……………..அப்பப்பா, நடிப்பா, உண்மையா………..என்றே தெரியாமல் அளவில்………… அவர்கள் அந்நேரங்களில் பேசிய விவரங்கள் என்னவென்று தெரியவில்லை.


[1] Indian Peace Keeping Force (IPKF) withdrew from Sri Lanka in 1990. In 1991, after the IPKF withdrawal was complete and the LTTE had assassinated former Indian Prime Minister Rajiv Gandhi, India brought its involvement in Sri Lanka’s internal ethnic conflict to a complete halt.

[2] Editorial, Productive Visit, The Hindu dated 12-06-2010. From 1991, successive governments in New Delhi have conducted Sri Lanka policy on sound and constructive lines. The time has come to take the bilateral relationship to a new level by exploring its full potential. As part of this, rising India must – without imposing itself – continue to encourage the Sri Lankan leadership to find a satisfactory resolution to Tamil grievances within an improved devolution framework.

http://beta.thehindu.com/opinion/editorial/article453209.ece

[3] DMK president and Chief Minister M  Karunanidhi on Tuesday 03 Feb 2009 said the LTTE had lost the sympathies of the party way back in 1987 itself as its chief V Prabhakaran was planning to adopt a dictatorial form of government in Tamil Eelam for which they were fighting.

[4] http://timesofindia.indiatimes.com/India/Karunanidhi-lauds-LTTE-as-Sonia-looks-on/articleshow/4507318.cms

After calling LTTE chief Prabhakaran his good friend, Tamil Nadu Chief Minister M Karunanidhi on Monday flip-flopped from his stand, saying India could not forgive the LTTE for assassinating Rajiv Gandhi. http://ibnlive.in.com/news/karunanidhi-flip-flops-says-cant-forgive-ltte/90663-37.html

[5] http://www.thehindu.com/2010/06/08/stories/2010060859770300.htm

http://beta.thehindu.com/news/states/tamil-nadu/article449715.ece

[6] சுதர்ஸன நாச்சியப்பன், இந்த 14-எம்பி குழுவில் இருந்திருக்கிறார். பிரபாகரனை எதிர்க்கும் பட்சத்தில், காங்கிரஸ் இலங்கையாட்சியாளர்களுக்கு சாதகமாத்தான் செயல்படும் என்பது நிதர்சனமாகிறது.

[7] ஸெவன்த் டே அட்வென்டிஸ்ட் என்ற கூட்டாத்தார், தடபுடலாக, அமெரிக்காவிலிருந்து மில்லியன் கணக்கில் டாலர்களைப் பெற்று, மிகவும் தரக்குறைவான ஓட்டை வீடுகளைக் கட்டிக் கொடுத்து, சரியாக மாட்டிக் கொண்டனர். சென்னை உயர்நீதிமன்றமே இவர்களைக் கடுமையாக சாடி கண்டித்தது. மறுபடியும் வீடுகளைக் கட்டித்தருமாறு ஆணையிட்டது.

[8] http://beta.thehindu.com/news/national/article450225.ece

[9] http://www.thehindu.com/2010/06/10/stories/2010061057650100.htm

[10] ஜூலியன் மோரோ என்பவர் எழுதிய புத்தகத்திற்கு காங்கிரஸ்காரர்கள் அதிக அளவில் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.