Posts Tagged ‘விடுதலைபுலிக் குழுக்கள்’

மந்திரி பதவி வாங்கத் தெரிந்தவர்களுக்கு ஏன் எல்.டி.டி.ஈ தடையை நீக்கமுடிவதில்லை?

மே 14, 2010

மந்திரி பதவி வாங்கத் தெரிந்தவர்களுக்கு ஏன் “எல்.டி.டி.ஈ” தடையை நீக்கமுடிவதில்லை?

எல்.டி.டி.ஈ மீதான தடை இன்னும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப் படுகிறது.

According to a notification issued by the Union Home Ministry, even though LTTE has been “decimated in Sri Lanka, recent reports reveal that remnant LTTE cadres and leaders are regrouping in Tamil Nadu“. The Liberation Tigers of Tamil Eelam has been banned since 1992 under the Unlawful Activities (Prevention) Act, 1967.

சிதம்பரத்தின் உள்தூரை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, “ஸ்ரீலங்காவில் ஒடுக்கப்பட்ட / குறைக்கப்பட்ட விடுதலைபுலிக் குழுக்கள் மற்றும் தலைவர்கள், தமிழ்நாட்டில் வேறுவிதமான மாற்றுக் குழுக்களாக வெளிப்படுகிறர்கள்“, என்று குறிப்பிடுகிறது. அந்த விடுதலைபுலிகள் இயக்கம் 1992லிருந்து, தடை செய்யப் பட்ட இயக்கமாக இருக்கிறது.

Latest indian and world political news information

திராவிடக் கட்சிகள், “எல்.டி.டி.ஈ”, போட்டிப் போட்டுக் கொண்டு உதவ வருகின்றனர்.

செபாஸ்டியன் சீமானைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். “வைக்கோ”தான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்.

சுப்ரீம் கோர்ட், பிரபாகரின் தாயாருடைய சிகிச்சைக்கான வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது என்று செய்தி வந்துள்ளது.

Supreme Court disposes plea on Prabhakaran’s mother

http://www.hindustantimes.com/Supreme-Court-disposes-plea-on-Prabhakaran-s-mother/Article1-543528.aspxThe Supreme Court on Friday disposed a petition seeking a direction to the central government to fly the ailing mother of the slain Tamil Tigers chief to Chennai for medical treatment.

Petitioner and Chennai-based lawyer R. Kuruppan also wanted the court to direct the central government to ensure that no foreigner who comes to the country with a valid Indian visa is forcibly deported. The petition assailed the central government’s decision to deport Parvathi Ammal, mother of Velupillai Prabhakaran, when she flew into Chennai airport from Malaysia. He said she was sent back to Malaysia despite holding a valid visa issued by the Indian high commission in Kuala Lumpur. Prabhakaran, the founder leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), was killed along with his top lieutenants in May last year by the Sri Lankan military.

தின்பதற்கு-தயார்

தின்பதற்கு-தயார்

கருணாநிதியோ பதிலே வரவில்லை என்கிறார்.

மந்திரி பதவி வாங்கத் தெரிந்தவர்களுக்கு ஏன் “எல்.டி.டி.ஈ” தடையை நீக்கமுடிவதில்லை?

ராஜாவிற்கு, அழகிரிக்கு, தயாநிதி மாறனுக்கு……………….மந்திரி பதவி வேண்டுமென்றால், குடும்பசகிதமாகச் சென்று, சோனியாவைப் பார்த்து வாங்கிக் கொண்டு வந்த் விடுகின்றனர்.

பிரியங்கா, சோனியா……………….பற்றி கேட்கவே வேண்டாம், “எல்.டி.டி.ஈ”  மன்னிக்கத் தயாராக உள்ளனர்.

பிறகு, சிதம்பரம் எப்படி தடையை நீட்டிக்கிறார்?

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 2 ஆண்டு நீடிப்பு: மத்திய அரசு
First Published : 15 May 2010 12:42:08 AM IST; Last Updated : 15 May 2010 06:05:27 AM IST – நன்றி தினமணி

புது தில்லி, மே 14, 2010: விடுதலைப் புலிகள் (எல்டிடிஈ) மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு – 2012 வரை, நீட்டிப்பதென மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

$ இலங்கைத் தமிழ் அமைப்புகள் சில தமிழகத்தில் ஒன்று சேர்ந்து மீண்டும் ஒரு குழுவை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக வந்த புலனாய்வு தகவல் அடிப்படையில் இந்த தடை நீடிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

$ இது தொடர்பான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சில தலைவர்கள் மீண்டும் தமிழகத்தில் ஒன்று சேர்வதாக இலங்கையிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

$ 1992-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் (எல்டிடிஈ) உள்ளது.

$ தனி நாடு கேட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசை எதிர்த்து போராடி வந்த இந்த அமைப்பை கடந்த ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவம் முற்றிலுமாக அழித்தது.

$ இந்த இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் தமிழகத்திலிருந்து மீண்டும் ஒன்று சேரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

$ இவர்கள் இலங்கைத் தமிழ் அகதிகள் என்ற போர்வையில் செயல்படுவதாக புலனாய்வு தகவல் வெளியாகியுள்ளது. இதை முற்றிலுமாக புறக்கணித்துவிட முடியாது.  அத்துடன் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றனர்.

$ இவர்கள் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தங்களது வீழ்ச்சிக்கு இந்திய அரசியல் தலைவர்கள்தான் காரணம் என இணையதளம் மூலம் அவர்கள் பிரசாரம் செய்து வருவதாகவும் அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.

$ தற்போதைய சூழலில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை அவசியம் என்பது உணரப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

$ முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு இந்தியாவில் எல்டிடிஈ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.