Posts Tagged ‘ஜோஸப் விஜய்’

ஜோஸப் விஜயும், விஜய் ஆன்டனியும், செபாஸ்டியன் சீமானும்!

திசெம்பர் 13, 2009

ஜோஸப் விஜயும், விஜய் ஆன்டனியும், செபாஸ்டியன் சீமானும்!

டிசம்பர் 2009ல் ஜோஸப் விஜயைப் பற்றி கன்ன-பின்னா என்று இணைத்தளங்களில் செய்திகள் வந்தன.

மீண்டும் விஜய்யுடன் இணையும் விஜய் ஆன்டனி!
சனிக்கிழமை, ஜூன் 26, 2010, 10:11[IST]

http://thatstamil.oneindia.in/movies/heroes/2010/06/26-actor-vijay-composer-vijay-antony-velayutham.html

விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு இசையமைப்பாளராக மீண்டும் ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் ஆன்டனி.

சிங்கள ராணுவம்  தமிழீழ விடுதலைப் படையைத் தோற்கடித்ததைக் கொண்டாடும் சிங்களப் பாடலுக்கு இசையமைத்தார் என தமிழர்களின் கோபத்துக்குள்ளானவர் விஜய் ஆன்டனி.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் இலங்கை ராணுவத்துக்காக கச்சேரிகள் நடத்தியதாகவும் கூறப்பட்டது. இந்த ஒரே காரணத்துக்காக முன்பு இவர் இசையமைத்த வேட்டைக்காரன் படத்தைப் புறக்கணிப்பதாக பல தமிழ் அமைப்புகள் அறிவித்தது நினைவிருக்கலாம்.

ஆரம்பத்தில் வேலாயுதம் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் வேட்டைக்காரன் படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், வேலாயுதத்துக்கும் விஜய் ஆன்டனியே இசையமைக்கட்டும் என்று விஜய் சொல்ல, அதற்கு இயக்குநர்  ஜெயம் ராஜாவும் ஒப்புக் கொண்டாராம்!

அடுத்தவாரம் வேலாயுதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

ஜோஸப் விஜய் என்கின்ற விஜய் என்ற தமிழ் நடிகன் மற்றும் செபாஸ்டியன் சீமான் என்கின்ற சீமான் என்ற தமிழ் இயக்குனர், ஸ்ரீலங்கை தமிழ் பிரச்சினையில் உள்ள ஆணுகுமுறை கருத்தில் கொள்ளவேண்டியதாக உள்ளது.

இதை இந்தியத் தமிழர் மற்றும் இந்தியர் அல்லாதத் தமிழர் என்று பார்க்கும்போது பல பிரச்சினைகள் வருகின்றன.

தமிழர்கள் சினிமாகாரர்களை-நடிகர்களை பல சமூக விஷயங்களுக்கு, பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் ஒட்டு மொத்தமாக, தமிழர்கள் இணைந்து பலமாக சாதிக்கவேண்டியதை சாதிக்க முடியாமல், பிரிந்துள்ளனர், பிரிக்கப்பட்டுள்ளனர், பிரிந்து செயல்படுகின்றனர் போலத் தெரிகிறது.

இதில் அமைதியாக, பிரச்சினை கவனித்துப் பார்த்தால், எவ்வாறெல்லாம் தமிழ் முகமூடி அணிந்துகொண்டு தமக்கு எந்தவிதத்திலும் லாபம் வரும் என்பதனை பார்த்து அதன்படியே செயல்படுவது தெரிகிறது.

சினிமா முதலீடு, வாங்குதல், விநியோகித்தல், வீடியோ-ஆடியோ உரிமை பெருதல், நடிக-நடிகையரைத் தேர்ந்தெடுத்தல், சினிமா-நிகழ்ச்சிகள், நடனங்கள், கலை-நிகழ்ச்சிகள் நடத்துவது, …………….என்ற கோடிக்கணக்கான பணம் புழங்கும் வியாபாரத்தில் “இந்தியத் தமிழர் மற்றும் இந்தியர் அல்லாதத் தமிழர்” ஈடுபட்டுள்ளனர்.

இதைத்தவிர, இதனால் லாபம் அடைந்து மற்ற வியாபாரங்கள், தொழிற்சாலைகள், பங்கு வணிகம், என்று பலவழிகளில் முதலீடு செய்து, அதன் தொடர்புகளில், தத்தமது வியாபாரத்தைப் பெருக்கிக்கொண்டு அனுபவித்து வரும் “இந்தியத் தமிழர் மற்றும் இந்தியர் அல்லாதத் தமிழர்” குழுமங்கள், குழுக்களும் உண்டு.

அவற்றுடன் தமிழ்நாட்டு அரசியல் மற்றும் இந்திய அரசியல் ஈழப்பிரச்சினை மற்றும் இலங்கைப் பிரச்சினையில் ஈடுபடும்போது தமிழர்களின் சமூகப் பிரச்சினைகள், இலங்கையில் தமிழர்கள் பட்ட / படும் கஷ்டங்கள், அவர்களது உரிமைகள் திரும்ப அளித்தல், அவரவர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப அனுப்புதல், இழப்பிற்கு ஈடு செய்தல் முதலியவற்றைப் பொறுமையாக சிந்தித்து ஆவண செய்யவேண்டிய முக்கியமான நிலைகளில் இருக்கவேண்டியதை மறந்து, உணர்ச்சிப் பூர்வமாக பேசி, எழுதி, இணைதளங்களில் பிரச்சாரம் செய்து, செய்யவேண்டிய காரியங்களை மறந்துவிடுகிறார்களோ என்று தோன்றுகிறது.

சமீபத்தில், செபாஸ்டியன் சீமான் மற்றும் ஜோஸப் விஜய் விவகாரங்கள் நிச்சயமாக சாதாரணத் தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு விசித்திரமக உள்ளது.

இந்த கீழ்காணும் விஷயங்கள் ஈ-மெயில் மூலம் அனைவருக்கும் அனுப்பபட்டு வருகிறது.

யார் இந்த விஜய் ?  இவரின் பூர்வீகம் என்ன ?

கங்கையில் விழுந்தாலும் காக்கை அன்னமாகாது’ எனும் பழமொழிதான் இதற்குரிய பதிலாக அமையும் !
‘காவிரிப்பிரச்சினையில், கர்நாடகத்தமிழர்களை வகைதொகையின்றிக் கொன்றொழித்தனர் கன்னடவெறியர்கள் !
இந்தக்கன்னடத்தைத் தாய்மொழியாகக்கொண்டர்தான் விஜய் இன் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன்.
இருப்பினும் விஜய் மட்டும் ,
தமிழகத்தில் பிறந்தமையாலும்,
ஈழத்தமிழச்சியை மணந்தமையாலும்
தாம் தமிழர்தான் என்பதுபோல் மாயைத்தோற்றமொன்றைக்காண்பிக்க முனைந்தார்.
அதாவது,  முள்ளிவாய்க்கால் படுகொலைகளை எதிர்த்துத் தமது இரசிகர்களுடன் இணைந்து
உண்ணாவிரத நாடகத்தைத் தமிழகத்தில் அரங்கேற்றிமுடித்தார்.
தற்போது, ‘ அற்றகுளத்தில் அறுநீர்ப்பறவை ’  போல
வாலைக்குழைத்துக்கொண்டு குப்பைக்குச்சென்றுவிட்டார் !
கொலைகாரி சோனியாவின் மகன், ராகுலுடன் மேற்கொண்ட இரகசியசந்திப்பு
அம்பலமானதும்,  “ சொனியாவின் கொள்கைகள் எனக்குப்பிடிக்கும்” என்று எவ்வளவு திமிருடன் பதிலளித்தார்.
அதாவது, முள்ளிவாய்க்காலில் சொனியா மேற்கொண்ட படுகொலைகள் தமக்குப் பிடிக்குமாம்.
இவருக்கு இதில் நாம் கொடுக்கும் பாடம், அஜித், அர்ஜுன் போன்ற தமிழின விரோதிகளுக்கும்
ஒரு எச்சரிக்கையாக அமையட்டும் !
நாம் தமிழர் என்பதை நிரூபிப்போம் !
இதிலாவத் ஒன்றிணைவோமா?
வேட்டைக்காரன் திரைப்படம் புறக்கணிப்பு

vijay_vaettaikkaaran

ஊரே எரிய மன்னன் பிடில் வாசித்த கதையாய் இருக்கிறது விஜய் மற்றும் விஜய் அன்ரனியின் கதை! 35 வருட கால விடுதலை வரலாறு அடித்து நொருக்கப்பட்டிருக்கிறது.

அரை இலட்சம் மக்களை இழந்துவிட்டோம் சர்வதேசம் சாக்குக்காகிலும் நிறுத்து! அங்கே குண்டு போடாதே! இங்கே போடாதே! என்று சொல்லிக்கொண்டிருந்த வேளை…இவர்கள் ( இலங்கை இராணுவம் ) எங்கள் கடவுள்கள் என்ற பாடலுக்கு இசையமைத்தவர் இந்த இராஜ் வீரறட்ணே (Iraj Weeraratne)

vijay film boycott

இவருடன் சேர்ந்து கைகோர்த்து நிக்கிறது வேட்டைக்காரன் யுனிட்! இன்னும் சில பாடல்களை விஜய் அன்ரனி இவருடன் சேர்ந்து பணியாற்ற உள்ளாராம். எதுவும் செய்யுங்கள் எங்களிடம் வராதீர்கள். வந்தால் புறக்கணிப்போம்.

iraj vijay

மன்னிப்புக் கேட்டுவிட்டால், பிரச்சினைகள் தீர்ந்து விடுமா?

வியாபாரம் என்றால், நிச்சயமாக மன்னிப்பு கேட்கப்படும்!